புதன், 22 ஜூன், 2011

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையானது   இந்த  ஆட்சியில் 9 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கைகளில் எரிபோருள் நிறுவனங்களை கைப்பற்றி வைத்து கொண்டு, தங்களின் அதீத லாப நோக்கத்திற்காக வாரம் ஒரு விலையேற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, மும்பை , குஜராத் பகுதிகளில் கிடைக்கும் எரிவாயுக்களை அரசையும் ,அதிகாரிகளையும் துணைக்கு வைத்து கொண்டு அதிக லாபம் கருதி  ஏற்றுமதி செய்கின்றன. இதனால் இந்திய அரசு பெரும் வருமான இழப்பை சந்திப்பதோடு அதிக விலைக்கு எரிவாயுக்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த எரிபொருள்களின் விலையுயர்வால் பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல.சாதாரண உணவு பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களின் விலையும் ஏறிவிடுகிறது.குறிப்பாக காய்கறிகளின் விலை விண்ணை தொட்டு விடுகிறது.


ஏற்கனவே சாதாரண மக்கள் அத்தியாவசிய பொருள்களின் விலையுயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு பெட்ரோல் விலையுயர்வும் சேர்ந்து கொண்டு விட்டதால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. 

பணியிடத்தில் கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்கள் விளைவாசியுயர்வால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசின் இந்த மெத்தன போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில்  மெமோரியல் ஹால் முன்பு 23 .06 .2011  அன்று வியாழக்கிழமை மணியளவில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்துகிறது. இந்தியா முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு துணைபோகாமல் , பெட்ரோலிய பொருள்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) இன் அகில இந்திய தொழிற்சங்கமான சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (COITU ) இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறது.

அனைத்து தொழிலாளர்களின் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்   வெற்றி பெற இயக்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்