புதன், 29 ஜூன், 2011

கிரீஸில் மக்கள் போராட்டம் வலுக்கிறது



கிரீஸ் நாட்டில் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளால் மக்களின் வாழ்நிலையில் பெரும் பாதிப்புகள் உண்டாகி நாடே திவாலாகி போய்விட்டது. சர்வதேச நிதி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனும் கிரீஸை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து கடுமையான சிக்கன நடவடிக்கையை அந்த நாட்டின் மக்கள் தலையில் சுமத்தி உள்ளன.   வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. வேலையில் இருப்பவர்களின் சம்பளமும் பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. சரியான தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள் இல்லாத போதும் மக்கள் தன்னிச்சையாக பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக தினம் தோறும் பலவிதமான  போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமாக போராட்டங்களில் பங்கு கொள்கிறார்கள். மக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்