திங்கள், 27 ஜூன், 2011

காக்கோரி தியாகிகள்


ஒரு ஆயுத எழுச்சிக்கான தயாரிப்பு வேலைகளுக்கு ஆகும் செலவுகளை 
ஈடுகட்டுவதற்காக இந்திய மக்களை கொள்ளையடித்து ஆங்கில  அரசாங்கம் சேர்த்து வைத்துள்ள, அரசு கஜானாவை நாம்  கொள்ளையடிப்பது என்று ராம்பிரசாத் பிஸ்மில் தலைமையில் HRA   முடிவு  செய்தது 1925 ஆகஸ்ட் 9ம் நாள் மாலையில் அரசு கஜானாவுடன் சாகியான் பூரியிலிருந்து, லக்னோ சென்று கொண்டிருந்த ரயில் , காக்கோரி ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்திய புரட்சியாளர்கள், ரயிலில் வந்த கஜானாவை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். ஆங்கில அரசாங்கம் அதிர்ச்சியடைந்தது. ராம் பிரசாத் பிஸ்மில் , ராஜிந்தர் லஹிரி , தாக்கூர் ரோஷன் சிங் , சசிந்தர பக்க்ஷி ,சந்தரசேகர் ஆசாத், அஸ்பக் உலாகான் உள்ளிட்ட இருப்பத்தைந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சந்தரசேகர்  ஆசாத்தை தவிர மற்ற அனைவரும் கைது செயப்பட்டனர்.

புகழ்பெற்ற காக்கோரி சதி வழக்கு தொடரப்பட்டது. இச்சதி வழக்கில் புரட்சியாளர்களுக்குகாக வாதாட பண்டிட் மோதிலால்  நேரு  தலைமையில்  குழு  அமைக்கப்பட்டது.  அக்குழுவில் ஜவகர்லால் நேரு , கோவிந்த் வல்லபந்த்   போன்றோரும் இருந்தனர். இவ்வழக்கின் முடிவில் ராம்பிரசாத் பிஸ்மில், அஸ்பக் உலாகான், ராஜிந்தர் லகரி மற்றும் ரோசன் சிங் ஆகிய நால்வருக்கு துக்குத்தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை உள்ளிட்ட நீண்ட கால சிறைத்தண்டனைகளும் வழங்கப்பட்டன. . கக்கோரி தியாகிகளில் தாக்கூர் ரோசன் சிங் 1927 டிசம்பர் 16 ம் நாள் தூக்கிலிடப்பட்டார் ராம்பிரசாத் பிஸ்மில்லும், அஸ்பக் உலா கா னு ம் அதே ஆண்டு டிசம்பர் 19  அன்று தூக்கிலிடப்பட்டனர். காக்கோரி தியாகிகளின் நெஞ்சுரத்திற்கும் தன்னலமற்ற தியாகத்திற்கும் தலை வணங்குவோம்.

தனிநபர் பயங்கரவாதம் என்று பொதுவாகவும் குட்டி முதலாளித்துவ சாகசவாதம் என்று தத்துவார்த்த ரீதியிலும் அழைக்கப்படும் இத்தகைய தவறுகளில் இருந்து HRA  அமைப்பு மிக வேகமாக விடுபட்டு பகத்சிங் தலைமையில் அமைப்பு ரீதியான செயல்பாடுகளுக்குள் காலடி எடுத்து வைத்தது. காக்கோரி வழக்கில் HRA ன் முதல் கட்டத் தலைவர்கள்  அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னர் கட்சியை வழி நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு பகத்சிங்கிற்கு வந்தது. பகத்சிங் கட்சியை கூட்டுத் தலைமையுடன் கூடியதாக மாற்றியமைக்க முயன்றார். தன்னலமற்ற இளைஞர்களைக் கொண்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணி திரட்டி உடனடி மற்றும் இறுதி இலக்கை அமைப்பு ரீதியான செயல்பாட்டின் மூலமே நிறைவேற்ற முடியும் என்று HRA  மிகச்சரியாகவே முடிவுக்கு வந்தது.  


(தோழர்.த.சிவக்குமார் - கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத்சிங் கடிதங்கள் , கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் நூலில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்