சனி, 18 ஜூன், 2011

மார்க்சிய சிந்தனை மையத்தின் 4 வது படிப்பு வட்டம்,நாகர்கோவில்


கட்சி வேறுபாடுகளை மறந்து மார்க்சிய செவ்விலக்கியங்களை படிப்பதன் மூலம் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் தேக்க நிலைமையை சரி செய்து கொள்ளும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது தான் மார்க்சிய சிந்தனை மையம்.


புற சூழ்நிலை கனிந்திருந்தும்  கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களை ஓன்று திரட்டி ஒரு வலுவான சக்தியாக உருவாக்க வில்லை என்பது போன்ற கேள்விகளால் துளைக்கப்பட்டுகொண்டிருக்கும் தோழர்கள்  மார்க்சிய மூல நூல்களை படிப்பதன் மூலம் ஒரு  தெளிவான மார்க்சிய பார்வையை  உருவாக்கும் முயற்சியோடு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தோழர்களால்  கட்சி வேறுபாடுகளை மறந்து ஓன்று சேர்ந்து மார்க்சிய சிந்தனை மையம் வெற்றி கரமாக உருவாக்கப்பட்டுநடைபெற்று வருகிறது.

முதுபெரும் எழுத்தாளர் தோழர்.பொன்னீலன் அவர்களால்  நடத்தப்பெற்று  வரும் இந்த கூட்டத்தின் 4வது படிப்பு வட்டம் வரும் ஜூன் 19 ,2011 ஞாயிற்று கிழமை அன்று  நடை பெறவிருக்கிறது . இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்  மூன்று பாகங்களும்  முழுமையாக வாசிக்கப்படவிருக்கிறது.

 கடந்த வகுப்புகளில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்.)லிபரேசன், சிபிஐ(எம்.எல்)கேஆர், மற்றும் சிஎம்பி, எஸ்ஒசிஎஸ்யுசிஐசி.டபிள்யு.பிஆகிய கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கட்சி வேறுபாட்டை மறந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


குமரி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த மார்க்சிய சிந்தனை மையம்  தமிழகம் முழுவதும் கட்சிவேறுபாடுகள் இல்லாமல் தொடங்கப்பட்டு மார்க்சிய மாமேதைகளின் நூல்களை கற்றறிவதன் மூலம்  மார்க்சியவாதிகள் ஒன்றுபட வழி ஏற்படுவதுடன் மார்க்சிய இலக்கியங்களில் ஒரு தெளிவும் பிறக்கும். இது போன்ற கூட்டங்களை தமிழகம் முழுவதும் துவங்கி நடத்தப்பட  வேண்டும் என்பது குமரி மாவட்ட தோழர்கள் கூட்டாக அழைப்பு விடுக்கின்றனர்.


நடைபெறும் நாள் : ஜூன் 19 ,2011 ஞாயிற்று கிழமை 
இடம் : லைசியம் நர்சரி   பள்ளி , பேருந்து நிலையம் பின்புறம்,   தக்கலே, நாகர்கோவில்.

தலைமை : தோழர், போஸ்

சிறப்பு பேச்சாளர்கள்  :தோழர் .பொன்னீலன்
                                              தோழர்.ஆனந்தன்

 தொடர்பிற்கு : சந்தோஷ்
                                 9443347801

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்