அரசுப்பள்ளி என்பது மாணவர்களுக்கு ஆரோக்கியமான அறிவையும் ஊட்டக்கூடியதாக இன்று இல்லை. இந்த சூழ்நிலையில் பொதுநூலகங்களே மாணவர்களுக்கான அறிவு வாசலை திறந்து வைப்பவையாக உள்ளன. அதுவும் தினமும் வரும் நாளிதழ்கள் , வார இதழ்கள் தவிர நூலகங்களில் இருக்கும் பல நூல்களின் தரம் கேள்விக்குட்பட்டதே.
நகரங்கங்களில் உள்ள பெரிய நூலகங்களை தவிர பகுதி நேர நூலகங்களில் அனைத்து நூல்களும் குப்பை கூளங்களாகவே காட்சி தருகின்றன. இதற்கான அடிப்படை காரணங்களாக நூலக துறையில் பல்லாண்டு காலமாக நடந்துவந்த அதுவும் தற்போதுள்ள இயக்குனர் அறிவொளி இயக்குனராக உள்ள காலத்தில் அதிக அளவிலும் நடந்த ஊழல்களை தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவரும், தேனி மாவட்ட நூலக கண்காணிப்பாளருமான தா.அறிவரசு பாண்டியன் வெளிக்கொண்டு வந்துள்ளார். பதிப்பாளர் நலவாரியம் , நமது உலகம் நூலகம் , ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை கணினிப் பயிற்சி,அண்ணா நூற்றாண்டு கட்டிடம், கணிப்பொறி வாங்குதல் நூலகர் நியமனம் அனைத்திலும் ஊழல், நூலங்களில் பத்திரிகை வாங்காமல் தொகை பெற்றுக்கொண்டு அரசுப் பணத்தினை கையாடல் செய்தது , பல நூலகங்களுக்கு புத்தககங்கள் வாங்கியதில் ஊழல் செய்தது என்று பல்வேறு ஊழல்களின் இருப்பிடமாக நூலகத்துறை இருப்பதை ஊடகம் , போராட்டங்கள் , மற்றும் வழக்குகள் போட்டும் தனது அயராத உழைப்பின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மக்களுக்கு அறிவு கிடைக்கும் வழிகளை எல்லாம் அரசு தொடர்ந்து அடைத்து வருகிறது, அதேபோலவே பொது நூலகத்துறையில் நடந்து வந்த ஊழலையும் அரசு பாராமுகத்தோடு அனுமதிக்கவே செய்கிறது. அறிவரசு போன்ற அபூர்வமாக நீதிக்காக போராடும் உழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதும் , அறிவொளி போன்ற ஊழல்வாதிகள் எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அவர்களை பாதுக்காக்கும் வேலையும் செய்கிறது. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு ஒரு சிலரின் பையை நிறைத்து கொண்டிருக்கும் இந்த போக்கு நூலகத்துறையில் தொடர்வதற்கு எதிராக அணிதிரள்வோம். அநீதிக்கு எதிராக போராடிவரும் அறிவரசு பாண்டியன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக