ஞாயிறு, 3 ஜூலை, 2011

நாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அடக்குமுறை

கன்னியாகுமரி மாவட்ட 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் காட்டுமிராண்டிதனமான  அடக்குமுறையை  கண்டித்தும் , முறைகேடாக செயல்பட்டு அரசின் பணத்தை மோசடி செய்யும் கன்னியாகுமரி மாவட்ட 108 இன் செயல் அலுவலர் சரவணன் , வாகன பராமரிப்பாளர் சீனிவாசன் , மண்டலமேலாளர் மாசிலாமணி ஆகியோர் மனித தன்மையே சிறிதும் இல்லாமல் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். இவ்வாறு அரசின் பணத்தில் கொட்டமடிக்கும் இந்த அதிகாரிகளிடம் இருந்து மாற்றி  மாவட்ட சுகாதார துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்  இன் நிர்வாகத்தை கொண்டுவரும்படியும், மேலும்... 
1.  பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் பணியில் அமர்த்த வேண்டும்.

2. வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாகவும் , நாள் ஒன்றுக்கு மூன்று சிப்டுகளாக மாற்ற வேண்டும்

3. 8 மணி நேரத்திற்கு மேல் செய்யும் வேலைக்கு ஓவர் டைம் கொடுத்து இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

10. ஒரு ஆம்புலன்சுக்கு 3 ஓட்டுனர்கள் என்ற பழைய முறையை அமல்படுத்த வேண்டும்.

3. தொழிலாளர்களை சொந்த மாவட்டத்தில்,சொந்த ஊரில் பணியில் அமர்த்த வேண்டும்.

4. வேலையில் சேரும் பொது ஒப்புக்கொண்டபடி சம்பள உயர்வு அளிக்க வேண்டும் .

5.தொழிலாளர்களுக்கு ஓய்வறை, மற்றும் உள்ள பணிசலுகைகளை அளிக்க வேண்டும்.

6. பணி நிரந்தரச்சட்டப்படி  இரண்டு  வருடத்திற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.

7.தொழிலாளர் சட்டங்களை மதித்து தொழிலாளர்களை மரியாதையோடு நடத்த வேண்டும்

8. சி.எல். மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை முறையாக அளிக்க வேண்டும்.

11.தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் க்ரூப் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும்.

9. பி.எப் , இ.எஸ்.ஐ ஆகியவற்றை முறைப்படி பிடித்தம் செய்து ,நிர்வாகம் தனது பங்கை சரியாக செலுத்த வேண்டும்.

10. ஆபத்தான  நிலையில் உள்ள நோயாளிகளை தொட்டு தூக்குதல்,மற்றும் முதலுதவி சிகிச்சை  அளிப்பதால் தொழிலாளர்களுக்கு  கிரிமி தொற்றின்  மூலம் வரக்கூடிய பாதிப்புகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், உரிய தற்காப்பு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.

என்று கோரியும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளித்தனர். மனு அளித்த காரணத்திற்காக  108  ஆம்புலன்ஸ் ஒட்டுனரான பாபு என்பவரை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்ய 45  நாள் நோட்டிஸ் காலம் உள்ளது.அந்த விதிகளையும் பின்பற்றாமல் இயற்றப்பட்டுள்ள அனைத்து சட்டங்களுக்கு எதிராகவும் 108  ஆம்புலன்ஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது எம் ஆர். 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து அரசே நிர்வாகத்தை எடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஜிவிகேவின் அடக்குமுறைகளை தகர்த்தெறிவோம்

1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்