புதன், 15 ஜூன், 2011

மாருதி தொழிற்சாலையில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் - மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிக்கும் நிறுவனமான மாருதி நிறுவனம் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில்  2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களால்  'மாருதி சுசிகி தொழிலாளர் சங்கம்' புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரினர். அதை நிர்வாகம் மறுத்து வந்ததோடு 11 தொழிலாளர்களை அதிரடியாக வேலையை விட்டு நீக்கி விட்டது. அதை கண்டித்தும் புதிய தொழிற் சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும்   தொழிலாளர்கள்  ஜூன் 4 , 2011 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு குர்கவுனில் உள்ள ஹீரோ ஹோண்ட , கெச்எம் எஸ்ஐ , ரிகோ ஆட்டோ ஆகிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மிகப்பெரிய போராட்டமாக இது பரவி வருகிறது. அந்த போராட்டம் வெற்றி பெற அந்த  தொழிலாளர்களுக்கு இயக்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்