முதலாளித்துவ நிறுவனங்களின் முறைகேடுகளினால் ஏற்பட்ட நஷ்டத்தை சாதாரண மக்கள் மீது பெட்ரோலியப் பொருள்களின் விலையுயர்வாக சுமத்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்து பெட்ரோலியப் பொருள்களின் விலைவாசிக்கெதிரான அனைத்திந்திய மத்திய தொழிற் சங்கங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் மெமோரியல் ஹாலில் 23 .06 .2011 அன்று 5 மணிக்கு நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பெட்ரோலியப் பொருள்களின் விலையுயர்வை திரும்ப பெற கோரியும் மத்திய தொழிற் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. COITU, INTUC, BMS, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, SRMU, வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, துறைமுகம், பொதுத்துறை, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய தொழிற் சங்கங்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன. பெட்ரோலிய பொருள்களின் விலைவாசிக்கெதிரான அனைத்திந்திய தொழிற் சங்கங்களின் கூட்டுப் போராட்டம் இத்தோடு நின்று விடாமல் அனைத்து தொழிலாளர்களையும் அணி திரட்டி வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடுவோம். வெல்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக