சனி, 25 ஜூன், 2011

சாதாரண மக்களா? - பெரும் முதலாளிகளா ? உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் , டீசல் விலை



ஏற்கனவே பெட்ரோலின் விலை  ஏறியுள்ளதையே தாங்க முடியாமல்  தவிக்கும் சாதாரண மக்களுக்கு மத்தியில் ஆளும் மன்மோகனின் முதலாளித்துவ அரசு போனஸ் பரிசாக டீசலை  லிட்டருக்கு ரூ.3-ம், மண்ணெண்ணெய் (கெரசின்) விலை லிட்டருக்கு ரூ.2-ம், சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50-மாக  விலையை உயர்த்தியுள்ளது. 

சர்வேதச அளவில் கட்சா எண்ணெய் விலை உயரும் போது தான் பெட்ரொலிய   விலையை உயர்த்துவதாக கூறும் அரசு, தற்போது  தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வதற்கு கூட டீசல் விலையை கூட்டுகிறது. சாதாரண மக்களின் பிரதிநிதி எனக்கூறிக்கொள்ளும் மத்திய அரசும் , மன்மோகன் சிங்கும் அவரது அமைச்சரவையும்  எந்த நேரமும்  முதலாளிகளுக்கு சேவை செய்து அதன் மூலம் கமிசன் பார்க்க மட்டுமே உலகம் முழுவதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். தாங்கள் பதவியில் அமர ஓட்டுபோட்ட ஏழை இந்திய மக்கள்  படும் துன்பங்களை அவர்கள்  கனவிலும் நினைப்பதில்லை. ஆனால் இந்த நிலைமை அப்படியே நீடிக்காது ,ஏழை மக்கள் கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுகொண்டுள்ளார்கள் , 90% உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ அரசால் கடும் நெருக்கடியில் புழுங்கி தவிக்கின்றனர். அவர்கள் ஓன்று சேரும் நாள் வெகு  தூரத்தில் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்