கடந்த 29.05.2011 நாகர்கோவிலில் மூத்த எழுத்தாளர். பொன்னீலன் தலைமையில் 'மார்க்சிய படிப்பு வட்டம்' சார்ப்பாக இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஏற்கனவே வாசித்த பகுதிகளை நினைவு படுத்திய எழுத்தாளர். பொன்னீலன் மீதம் உள்ளவற்றையும் தமது செறிவான உரையில் நிகழ்காலத்து ஒப்புமைகளோடு ஒப்பிட்டு அந்த கூட்டத்தை செம்மையாக நடத்தினார். தோழர்.ஆனந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்), CWP மற்றும் பல கட்சிகளை சேர்ந்த தோழர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமைக்கு உதாரணமாக கண்ணியமாக நடைபெற்றது. மேலும் இது போன்ற மார்க்சிய படிப்பு வட்டத்தை மதுரை , ஊட்டி போன்ற பகுதிகளிலும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மார்க்சிய படிப்பு வட்டத்திற்கு முன்முயற்சி எடுத்தவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த தோழர்கள். மகிழ்ச்சி, போஸ், பிரசாத் ஆகியோர்கள் ஆவர்.
It is a great initiative in the present world situation.Capitalism is loosing its strength. Greedy capitalist are busy filling their pockets.It is right time for different communist party cadres if not the leaders to unite, organize,and fight to safeguard the working class or else the country may fall into the hands of the fascist, fundamentalist, BE AWARE !!!!! Santosh.
பதிலளிநீக்கு