இங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு,
கூட்டம் போடும் உரிமை உண்டு என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்.,
சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது
கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம்
தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல் அலையவிடுவார்கள்).
பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில் ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து
பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய்
விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
புதன், 7 டிசம்பர், 2011
கருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 6 டிசம்பர், 2011
லண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது
துன்பங்களில் உழன்டு கொண்டிருந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க உலகில்
தோன்றிய தத்துவங்களில் உன்னதமான தத்துவத்தை தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ்
வாழ்ந்த லண்டன் மாநகரத்தில், மார்க்ஸின் கனவை நனவாக்குவதை போல
தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் உலக
போருக்கு முன்பு முதலாளித்துவத்தின் தலைமை பீடமாக இருந்த இங்கிலாந்தில்
சில மாதங்களுக்கு முன்பு தீ போல பரவிய வேலை இல்லாத இளைஞர்களின்
போராட்டங்களை அதிகார வர்க்கம் வெற்றிகரமாக அடக்கியது.அந்த போராட்டத்தின்
உண்மை தன்மை வெளிவரமால் அது இனவெறி கலவரம் என்று சப்பை கட்டு கட்டின
முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் பற்றி எரிகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணமுடியாத நெருக்கடியில் முத்லாளித்துவதுவம் சிக்கி கொண்டுள்ளது.
சுப்ரமணியபுரம்: 80களின் காலக் கண்ணாடி
எந்த ஒரு கலைப்படைப்பும் தன் காலகட்டத்திற்கும், அக்காலகட்டத்தின் சமூக
வாழ்க்கைக்கும் உண்மையானதாக இருந்தால் அது கதையாக இருக்கும் போது அதை
எழுதியவரோ அல்லது திரைப்படமாக இருந்தால் அதை எடுத்தவரோ கூட வெளிப்படையாக
கூற முன்வராத பல விஷயங்களை படிப்பவர் அல்லது பார்ப்பவர் மனதில்
ஏற்படுத்துவதாக அமையும்.
மேலும் படிக்க
லேபிள்கள்:
2009 மே மாத மாற்றுக்கருத்து
சனி, 3 டிசம்பர், 2011
எஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை

“மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்”
தருணங்களும்
காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை.
சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய
கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது
இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை
உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான
கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே
முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.
மேலும் படிக்க வெள்ளி, 2 டிசம்பர், 2011
எழுத்தாளர் கணேசலிங்கனுடனான நமது சந்திப்பு
மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும்
அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை
எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு
கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும்
படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய
காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக
விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு
வந்திருந்தார்.
லேபிள்கள்:
மாற்றுக்கருத்து,
மே 2009
வியாழன், 1 டிசம்பர், 2011
ஸ்டாலினுக்குச் செல்லமான "குட்டிச் சிட்டுக் குருவி" ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்
வரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் "குட்டிச் சிட்டுக் குருவி"(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.
லேபிள்கள்:
ஸ்டாலின்
புதன், 30 நவம்பர், 2011
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
பேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை
சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால்
ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் ,
அரசின் அடியாட்களாகவும் உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது
என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார்,
ஏனெனில் மக்கள் அநீதிகெதிராக திரண்டெளுந்தால்
அவர்களை அரசின் மீது விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா?
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 29 நவம்பர், 2011
பால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான விலை உயர்வு சமூக மாற்றம் பேணும் சக்திகள் செய்ய வேண்டியது என்ன?
தமிழக அரசு தற்போது ஆவின் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய்.7ம், பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 80 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள குறிப்பாக ஏழை எளிய மற்றும் மத்தியதர மக்கள் தலையில் பேரிடியாகத் தற்போதைய தமிழக அரசின் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு இறங்கியுள்ளது. இது போதாதென்று மின் கட்டணமும் கூடிய விரைவில் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின் ‘இனிப்பான’’’ செய்தியை எப்படிக் கைக்கொள்வதெனத் தெரியாது தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளனர்.
லேபிள்கள்:
ம. பிரேம் குமார்
திங்கள், 28 நவம்பர், 2011
இந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள் தேடுவது? புதிய ஜனநாயகம் பேசும் புரட்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களா?
பொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்
மார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.
இவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPI, CPI(M), CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; நாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம். அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.
ஞாயிறு, 27 நவம்பர், 2011
எது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்
27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.
லேபிள்கள்:
தோழர்.மகிழ்ச்சி
பகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு
பகத்சிங்
பற்றிய 'இன்குலாப்'
என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம்
42 வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு
செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது.
வெள்ளி, 25 நவம்பர், 2011
சரத் பவாருக்கு விழுந்த அறை ! ஒரு எச்சரிக்கை
24 .11 .2011 அன்று டில்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கத்திலிருந்து
வெளியே வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில் சிங்கம் போல் பாய்ந்து வந்த இளைஞர்
ஹர்விந்தர் சிங் ஓங்கி ஒரு அறை விட்டார். அவரை காவல் துறையினர் சுற்றி பிடித்த போது அவர் கோபத்தோடு "ஊழல்வாதிகளுக்கு
இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு
சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்று கூறினார். இந்த கோபம் ஹர்வீந்தர் சிங்க்கு மட்டும் அல்ல,
இந்தியாவில் உள்ள 90 % மக்களுக்கு
உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.
வியாழன், 24 நவம்பர், 2011
பிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும், அவர்களின் சமுதாயக் கடமையும்
உடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு
வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். மேலை நாடுகளில் இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைந்த இம்மருத்துவமுறை இன்று
இந்தியாவிலும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது.உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப்
போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம்
வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை
பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதாகவும்; வலுவிழந்த தசை, தசைநார்,
நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவதாகவும்; இதய சம்பந்தமான
நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வதாகவும்; மூளை வளர்ச்சி
கோளாறுகள் மேலும் பெண்களுக்கு பொதுவாகவும் குறிப்பாக கர்ப்ப காலங்களில்
ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரி செய்வதாகவும்; எலும்பு முறிவு அறுவை
சிகிச்சை உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மிகவும் தேவைப்படக்கூடிய
ஒரு உடன் மருத்துவமாகவும்; நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க
முடியாத மருத்துவமுறையாக பிஸியோதெரபி மருத்துவம் இன்று
வளர்ச்சியடைந்துள்ளது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
ம. பிரேம் குமார்
செவ்வாய், 22 நவம்பர், 2011
ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்
முதற்பதிப்பு:டிசம்பர் 2003
கோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி
கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக
அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும்
அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை
வெளிக்கொணர்ந்துள்ளது. பல கட்சிகள்
தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில்
எடுத்துள்ளன. எனவே தமிழக அரசின் இந்த ஆணை
இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? இது போன்ற ஆணைகள் மற்றும்
சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும்
வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும்? பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக்
கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும்
நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளை அலசி ஆராய்வது
இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.
திங்கள், 21 நவம்பர், 2011
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர் தினப்பொதுக்கூட்டம்
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) அமைப்பின் நவம்பர் தினப்பொதுக்கூடம் 20.11.2011 அன்று மாலை 6 மணிக்கு தொடக்கி இரவு 9 மணி வரை தேனி, பகவதி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியை சேர்ந்த தோழர் வரதராஜ் , மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் ,தோழர்.சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)இன் தென்னிந்தியாவிற்கான பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மிகவும் நேர்த்தியோடும் ஒழுங்கோடும் நவம்பர் தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு இந்த கூட்டம் ஒரு புது எழுச்சியை கொடுக்கும் விதமாக சிறப்புற நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்





