5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள். இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் , மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.
ஊழியர்களை / தொழிற்சங்கத்தை கடுமையாக ஒடுக்குவதில் பொள்ளாச்சி மகாலிங்கத்தை போலவே பி.எஸ்.ஜி. நிறுவனமும் பெயர் போனது. இதற்கு மத்தியிலும் பி.எஸ்.ஜி. செவிலியர்கள் சங்கம் உதயமானது. பி.எஸ். ஜி. செவிலியர்கள் சங்கம் சம்பள உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஸ்ட்ரைக் நோட்டீஸ் அளித்தது. தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் போதே முன்னணி சங்க பொறுப்பாளர்கள் மீது பணிநீக்க நடவடிக்கையை எடுத்தது பி.எஸ்.ஜி.நிர்வாகம் . அதனால் தங்களின் கோரிக்கைகளை வலியுறித்தி 450 செவிலியர்கள் கடந்த 13 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஊர்வலம், கண்டன ஆர்ப்பாட்டம், என்று பல்வேறு போராட்டங்களை செவிலியர்கள் நடத்தி வந்தாலும் ஆணவம் பிடித்த பி.எஸ்.ஜி.நிர்வாகம் அதற்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. கோவை தொழிலாளர் ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கும் நிர்வாகம் வருவதில்லை. அத்தோடு சென்னையில் தமிழக அரசு சார்ப்பாக தொழிலாளர் அமைச்சர். செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் வரமால் நிர்வாகம் புறக்கணித்து, செவிலியர்கள் பணிக்கு திரும்பாத வரை பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ,மற்றும் அரசாங்கத்தையே மதிக்காத பி.எஸ்.ஜி.நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். செவிலியர்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.செவிலியர்களின் மீது பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும் என்று சென்ட்ரல் ஆர்கனைசேசன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன் ( COITU ) கேட்டுக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக