திங்கள், 30 ஏப்ரல், 2012

ஜாதிவாரி மக்கட்தொகைக் கணக்கெடுப்பு: உழைக்கும் மக்களை வர்க்கப்பார்வையற்றவர்களாக்கி ஜாதிய வட்டத்திற்குள் கட்டிப்போட முயலும் முதலாளித்துவச் சதி



மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.

நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்




மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்  மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக   19.04.2012  அன்று மாலை 4 மணியளவில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார். 

புதன், 25 ஏப்ரல், 2012

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்


இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வடசேரி மக்களின் தீரம் மிக்க போராட்டம் தொடர்கிறது

காவிரி நதிநீர் பாயும் தஞ்சாவூர் மாவட்டத்தில்  உள்ள வடசேரி மிகவும் வளமான பகுதி. இன்றும் இங்கு விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி சாராய ஆலை நிறுவி கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்பட்ட  டி.ஆர். பாலு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன்  லிமிடேட் என்ற எரிசாராய ஆலையை பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி ,மோசடியாக அனுமதி பெற்று 2010ல் துவங்க முயற்சி செய்தார்.  

வியாழன், 19 ஏப்ரல், 2012

கோவை பி.,எஸ்.ஜி மருத்துவமனை செவிலியர்களின் உறுதி மிக்க போராட்டம் வெற்றிபெற தோள்கொடுப்போம்


Nurses at the PSG Institute of Medical Sciences and Research stage a demonstration in Coimbatore on Tuesday. Photo: S. Siva Saravanan5 லட்சம் வரை செலவு செய்து படித்து பட்டம் பெரும் செவிலியர்களுக்கு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கும் மருத்துவமனை நிர்வாகங்கள் வெறும் 3,000 முதல் 5 ,000 வரை மட்டுமே ஊதியமாக தந்து வருகிறார்கள்.  இதை எதிர்த்து இந்திய முழுவதும் செவிலியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுக்கப்பிற்காக சங்கம் அமைத்து  போராடி வருகிறார்கள். சென்னையில் பெட்ரோலில் பற்றிய தீயாக போராட்டம் பரவி அப்பல்லோ , மலர் , எம்.எம்.எம். , உட்பட பல தனியார் மருத்துவ மனைகளில் செவிலியர்கள் போராட்டம் வெற்றிபெற்றது. இதனால் தமிழகம் முழுவதும் சங்கமாக அணிதிரண்டு போராட வேண்டும் என்ற எண்ணம் செவிலியர்களுக்கு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ,  மருத்துவமனைகளை நடத்தி வரும் பி.எஸ்.ஜி. நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது.

மெக்காலேயின் பெயரில் உலா வரும் போலி ஆவணம்: சமஸ்கிருதக் கல்வி முறையை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாத சக்திகளின் சதி


சமீபகாலமாக இணையதளங்களில், மெக்காலே 1835ம் ஆண்டு பெப்ரவரி 2ம் நாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய உரையின் ஒரு பகுதி என்பதாக ஒரு ஆவணம் உலா வந்து கொண்டுள்ளது. அது பழங்கால ஆவணம் என்பதைக் காட்டுவதற்காக மெக்காலேயின் படம் அச்சிடப்பட்ட  அக்காலத்திய ஆவணம் ஒன்றில் அக்காலத்திய ஆங்கில எழுத்து வடிவங்களுடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்:

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பாசிசப் பாதையில் பீடு நடை போடும் மம்தா



நன்றி : தி ஹிந்து 
மேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடது முன்னணி வன்முறையின் மூலம் ஆட்சியைத்தக்க வைத்து இருந்தது. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக்கொண்டே முதலாளித்துவ சேவை செய்து கொண்டிருந்த இடது முன்னணியின் கோரமுகம் சிங்கூர், நந்திகிராமில் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை டாட்டவிற்கு பறித்து கொடுக்கும் புத்ததேவின் முயற்சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளிய போதே அம்பலப்பட்டு போனது. .கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்களை அரசு இயந்திரத்தின் மூலமும், தனது கட்சி குண்டர்கள் மூலமும் வன்முறையை அரங்கேற்றி நசுக்கி டாட்டாவிற்கு  தனது நன்றி விசுவாசத்தை காட்டியது அப்போது ஆட்சியில் இருந்த இடது முன்னணி.  

வியாழன், 12 ஏப்ரல், 2012

ஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934


                                                                                                   தமிழாக்கம் : Dr . ஜீவானந்தம் 
stalin_400hg_wells
வெல்ஸ் : ஸ்டாலின் நீங்கள் என்னை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. அண்மையில் நான் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுடன் அவரது லட்சியங்கள் குறித்த நீண்ட நேரம் உரையாடினேன். உலகை மாற்றும் உங்கள் முயற்சி பற்றி அறிய விரும்புகிறேன்.

ஸ்டாலின் : அது போன்ற பெரிய திட்டங்கள் எதுவுமில்லை.

வெல்ஸ் : நான் ஒரு எளிய மனிதனாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றேன். உலகின் மாற்றங்களை நான் கூர்ந்து கவனித்து வருகின்றேன்.

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை


மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் 
மறுத்துப் பேச ஆளில்லை; அதனைச் செய்யும் 
அச்சகத் தொழிலாளரின் பிரச்னைகளை 
நினைத்துப் பார்க்க அமைப்பில்லை 
என்ற நிலையை மாற்ற அணிதிரள்வோம்
 வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் சம்பளம் மட்டும் சிறிதளவு கூட உயராத பல தொழில்கள் நமது நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று அச்சுத் தொழிலாகும். “உலகம் இதுலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது, கலகம் வருது; தீருது; அச்சுக் கலையால் உலகம் மாறுது” என்று பாடினார் கவிஞர் மருதகாசி. அவ்வாறு உலகையே மாற்றிய அச்சுக் கலைத்துறையில் பணிபுரிவோரின் ஊதியங்கள் சராசரியாக  மாதம் ரூபாய் 5000/ என்னும் அளவிற்கே உள்ளன.

புதன், 4 ஏப்ரல், 2012

"பீப்பிங் டாம்" பால் ராபின்சன்: பெண் இ.எம்.டி களிடம் அத்துமீறும் அதிகாரிகளுக்கு ஆதரவாக 108 ஆம்புலன்ஸ் ஜி.வி.கே. நிர்வாகம்


திண்டுக்கல் மாவட்டத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் இ.எம்.டி.யிடம் கடந்த வருடத்தில் அந்த மாவட்ட ஒ.இ. ஆக வேலை பார்க்கும் குமரன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி மானபங்கப் படுத்தினார். அந்த பெண் இ.எம்.டி. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஒ.இ. மீது இந்திய தண்டனை சட்டம் 506 (2 ) உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் அந்த செய்தியும் வந்துள்ளது. ஆனால் ஜி.வி.கே. நிர்வாகம் அவசர உதவி பணிகளில் சேவை நோக்கத்தோடு பணிபுரியும் பெண் இ.எம்.டி.யிடம் தவறாக நடக்க முயன்ற ஒ.இ.குமரன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த பெண் இ.எம்.டி. யை எந்தவித விசாரணையும் செய்யாமல் பணிநீக்கம் செய்துவிட்டது. ஜி.வி.கே. நிர்வாகத்தின் ஆணாதிக்கத் திமிர் எந்த அளவிற்கு என்றால் அந்த பெண் இ.எம்.டி. க்கு அளித்த பணிநீக்க உத்தரவில் " உயர் அதிகாரி மீது நீங்கள் புகார் அளித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக வெளிப்படையாகவே  உத்தரவிட்டுள்ளனர். இப்போது அந்தக் காமக் கொடூரன் குமரன் உயர் அதிகாரியாக ஜி.வி.கே. நிர்வாகத்தில் இருக்கிறார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்ட அந்த அப்பாவி பெண் இ.எம்.டி. வேலையும் இழந்து வெளியில் இருக்கிறார். ஆனால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தந்தே தீருவேன் என்ற மன உறுதியுடன் அந்த குற்ற வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குழந்தை தொழிலாளர்கள்

என்ன !
என்ன கேட்டீர் என்னை ? 
நவம்பர் 14 ஐ 
கொண்டாடவில்லை என்றா ? 

வாருமைய்ய வாரும் 
கட்டிவைத்த கங்குகளை 
கொட்டிப் பேச வேண்டும் 
செவி கொஞ்சம் தாரும். 

திங்கள், 2 ஏப்ரல், 2012

மார்ச் 23 - தியாகி. பகத்சிங் நினைவு தின கலந்துரையாடல்




சிறப்பு  விருந்தினர் - தோழர். சிவக்குமார் (ஆசிரியர்  - கேளாத செவிகள் கேட்கட்டும்...பகத்சிங் கடிதங்கள் , கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)

கலந்துரையாடல்  நடத்தப்பட்ட தேதி -  மார்ச் 23 ,2012 

நடத்தப்பட்ட இடம் -  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

கலந்துரையாடலில் பகேற்றவர்களின் எண்ணிக்கை - 27

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மாதாங்கோவில்பட்டியில் தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி

பகத்சிங் லட்சியம் சோஷலிச சமூக அமைப்பு உருவாகும் வரை போராட்டம் நீடிக்க வேண்டும் என்பதே ஆகும். பகத்சிங்கின் லட்சிய பாதையை அடியொட்டி பயணிக்கும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு  சிவகாசி பகுதிகளில் நினைவு  ஸ்தூபி அமைத்து தியாகி பகத்சிங்கின் தியாகம் நினைவு கூறப்படுவதோடு, அவரின் லட்சியத்தையை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் . இந்த வருடம் மார்ச் 23   அன்று தியாகி பகத்சிங்கின் 81 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி தாலுகா, தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளத்தில் உள்ள  மாதாங்கோவில்பட்டியில்   மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி  எழுப்பப்பட்டு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முகப்பு

புதிய பதிவுகள்