செவ்வாய், 3 ஜனவரி, 2012

மார்க்சியத்திற்கெதிரான அவதூறுகளை முறியடிப்போம்!, தோழர் சங்கர் சிங்கின் கரங்களை வலுப்படுத்துவோம்!


சுதந்திரப்போராட்ட வீரராகவும், எஸ்யுசிஐ அமைப்பினை நிறுவுவதில் தோழர்.சிப்தாஸ் கோஷ் அவர்களோடு உறுதுணையாக இருந்தவரும், பின்னாளில் சிப்தாஸ் கோஷ் அவர்களின் மறைவிற்கு பின்பு எஸ்யுசிஐ யின் தலைமை திருத்தல்வாத போக்கில் பயணித்த போது அதை கண்டித்து போர் குரல் எழுப்பியவரும்,  எஸ்யுசிஐயில் ஜனநாயக தன்மை இல்லாமல் போனதால் அதிலிருந்து வெளியேறி ,  உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியாவில் கொண்டு வர விரும்பிய தோழர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை நிறுவியவரும் அதன் தலைவராக 84 வயதிலும் தளராமல் செயல்பட்டு வருபவருமான  தோழர் சங்கர் சிங் அவர்கள் நவம்பர் தினத்தினை ஒட்டி 'மார்க்சியத்திற்கெதிரான அவதூறுகளை முறியடிப்போம், கம்யூனிஸ்ட் இயக்கங்களை வளர்த்தெடுப்போம்' என்ற தலைப்பில் இந்திய முழுவதும் சென்று மார்க்சிய வகுப்புகளை எடுத்து வருகிறார் . 
கடந்த 25 .12 .2011 அன்று மதுரையில் தமிழகத்தை சேர்ந்த தோழர்களுக்கு எடுக்கப்பட்ட வகுப்பில் சோவியத் யூனியன் மற்றும் செஞ்சீனத்திலும் அமைந்த அரசுகள் எவ்வாறு மனித சமூகத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றின என்பதையும், சோஷலிச அமைப்பு என்பது இடைப்பட்டதே என்றும் . அந்த அமைப்பிலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வலிமையோடு முதலாளித்துவ கருத்துகளுக்கும், அதன் கேடுகெட்ட கலாச்சார சீரழிவுக்கு எதிராக போராட வேண்டும் ,அவ்வாறு போராட தவறியதன் விளைவே அந்த நாடுகளில் சோசலிசத்திற்கு பதிலாக தற்போது முதலாளித்துவம் கோலோச்சுகிறது என்றும் , சோஷலிச அமைப்பே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி செய்யும் அமைப்பாக இருக்கும் என்றும் விரிவாக விளக்கினார். கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் (CWP) அமைப்பின் தென்னிந்திய பொதுச்செயலாளர் தோழர்.ஆனந்தன் அவர்கள் தோழர்.சங்கர் சிங் அவர்களின் உரையை தமிழில் மொழிபெயர்த்து கூறினார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த தோழர்கள் இந்த வகுப்பில் கலந்துகொண்டார்கள். அவ்வாறு கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் 'சோஷலிச புரட்சி' எனும் லட்சியப்பாதையில் பயணிக்கும் தாங்கள் மேலும் தத்துவார்த்தாத் தெளிவை பெற்ற திருப்தியோடு சென்றார்கள்.இதன்  தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் சில இடங்களில் இந்த வகுப்பினை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தோழர் சங்கர் சிங் அவர்களின் நவம்பர் தினக் கட்டுரையின் ஆங்கில பதிவினை movement என்ற வலைத்தளத்தில் நீங்கள் படிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்