சமீபத்தில் அடித்த தானே புயலினால் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் ,பாண்டிசேரி யூனியன் , மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளும் பலத்த பாதிப்பிற்கு உள்ளானது. மனித உயர் இழப்புகளும் , மீனவர்களின் குடிசைகளும், மீன்பிடி கருவிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின .விளைச்சலை தாங்கி அறுவடையை எதிர்பார்த்த நின்ற நெற்பயிர்கள் மட்டுமல்ல அடித்த சூறைக்காற்றில் மரங்களும் சாய்ந்து விழுந்தன. வீடுகளை புயல் பந்தாடியது, இதில் ஏழை மக்கள் குடியிருந்த குடிசைகளில் ஓன்று கூட மிஞ்ச வில்லை. புயலினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் வீடுழந்து, புயலினால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலையும் இல்லமால், மின்சார ஒயர்கள் அனைத்தும் அறுந்து விட்டதால் மின்சாரமும் இல்லாமல், குடிக்க தண்ணீரும் இல்லாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசும், மத்திய அரசும், மந்திரிகளும் எதிர் கட்சி தலைவர்களும் மாற்றி, மாற்றி மக்களை பார்ப்பதாக கூறி ஊர்வலம் மட்டுமே செல்கின்றனரே தவிர அவசர கால நிவரணங்கள் கூட ஒரு வார காலமாகியும் இன்னும் வழங்கியபாடு இல்லை. ஊழல் படிந்த நிர்வாகம் எந்த வித நிவாரணப்பணிகளையும் முறையாக மேற்கொள்ளாமல் நொண்டியடிக்கிறது. எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்று நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை சுருட்ட முதலாளித்துவ கட்சிகள் வளம் வந்துகொண்டுள்ளன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக நிற்கும் மக்களுக்கு உரிய உதவிகள் செய்ய கூட தகுதியற்றதாக இந்த முதலாளித்துவ அரசுகளும், ஊழல் சேற்றில் சிக்கி கொண்டுள்ள நிர்வாகமும் ஆகிவிட்டன. இந்தியாவில் சுனாமியால் பேரழிவு ஏற்பட்ட போது ,உலகம் முழுவதும் இருந்து பெருமளவு குவிந்த நிதியுதவியை கிறித்துவ மத நிறுவனங்களும், என்.ஜி.ஓக்களும் போட்டி போட்டு கொண்டு தின்று தீர்த்ததை போல , இங்கும் என்.ஜி.ஓக்கள் வளம் வருகின்றன. இதனால் நிவாரணங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேரமால் இது போன்ற கயவர்களால்
சூரையாடப்படுகின்றது.
அந்த புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அவசர கால உதவிகளை இனியும் தாமதிக்காமல்
விரைந்து வழங்க வேண்டும். விளைச்சலை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கும், மீன்பிடி கருவிகளை இழந்து நிற்கும் மீனவர்களுக்கும் உரிய நிவவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். இந்த பணிகளுக்கு குறுக்கே நிற்பவர்களை அம்பலப்படுத்த வேண்டியதும், உரிய நிவவாரணங்கள் மக்களுக்கு பெற்று தருவதும் உண்மையான சமூக மாற்றத்திற்காக பாடுபடுபவர்களின் கடமை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக