தென் அமெரிக்காவை சேர்ந்த எர்னஸ்ட் என்ற மருத்துவ மாணவர் தொழு நோய் சம்பந்தமாக சில ஆய்வுகளை செய்யவும், அந்த கொடிய நோயால் பீடிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடும் தனது நண்பரோடு தென் அமெரிக்க முழுவதும் பயணம் செய்தார். அப்போது தான் தொழு நோயை விட கொடிய நோயான முதலாளித்துவம் இந்த உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது, அந்த நோயை முதலில் விரட்ட வேண்டும் என்று உறுதி ஏற்றார். தனது வாழ் நாள் முழுவதும் முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இருந்தவர்
தான் தோழர்.எர்னஸ்ட் சேகுவேரா. அவர் தான்
இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் மனதில் உள்ள புரட்சிக்கான குறியீடு.
மக்களை அச்சுறுத்திய கொள்ளை நோய்களுக்கு தங்கள் இன்னுயிரை கொடுத்து மருந்து கண்டுபிடித்த பல மருத்துவர்கள் உலகம் முழுவதும் இருந்தார்கள் . மருத்துவ பணியோடு , சமூகம் முன்னேற உழைத்தவர்களில் பலர் மருத்துவர்களாக இருந்தார்கள் . மருத்துவ பணியை மக்கள் பிணி போக்கும் புனித பணியாக எடுத்துக்கொண்டு ரூ.5 க்கும் , ரூ.10 ௦ க்கும் , இலவசமாகவும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் சிலர் இன்றும் இருக்கிறார்கள்.
இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலாளித்துவத்தின் தாரக மந்திரமான லாபம்,லாபம், அதிக லாபம் என்பதில் பலியாகிபோன மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் சேவை என்பதெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, சகல வித்தைகளையும் பயன்படுத்தி தங்களிடம் வரும் நோயாளிகளிடம் பணம் கறக்கிறார்கள். அதுவும் மருத்துவ துறையில் பெரிய நிறுவனங்கள் வந்த பிறகு அவ்வாறு பணம் பிடுங்குவது என்பது மிக அதிகமாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவர்கள் அனைவரும் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்துகிறார்கள், அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளை தொட்டு மருத்துவம் பார்ப்பதை கூட அசிங்கமாக நினைக்கும் இவர்கள் அரசிடம் மாதம் , மாதம் சம்பளம் வாங்குவதை அப்படி நினைப்பதில்லை. வேலைக்கே போகாமல் சம்பளம் வாங்கும் அரசு மருத்துவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உயிர் போகும் பிரசவ வழியில் துடிக்கும் எத்தனை சகோதரிகள் சேயோடு இவர்களின் அலட்சியத்தால் செத்துபோகின்றார்கள். பணத்திற்காக தேவையே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் , அதே பணத்திற்காக உயிர் போகும் வேதனையில் துடிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள், பணத்திற்காக பெண் சிசுகளை கருவிலையே கொல்கிறார்கள் , செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்கிறார்கள், அவர்கள் வாங்கி வைத்துள்ள நவீன கருவிகளுக்காக தேவையே இல்லாமல் நோயாளிகளை சோதனை செய்கிறார்கள் , மருந்து கம்பனியின் கமிசனுக்காக தேவையே இல்லாத மாத்திரைகளை நோயாளிகளின் மேல் திணிக்கிறார்கள். பணத்திற்காக மனிதாபிமானமே இல்லாது போன இவர்கள் செய்யும் அட்டகாசங்களை சொல்லி கொண்டே போகலாம்.
சமூகத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் வெறுமனே தங்கள் தொழில், லாபம், என்று சுயநலத்தோடு வட்டமிடும் இந்த கழுகுகள் கேட்கின்றன பாதுகாப்பு வேண்டுமாம் .உண்மையில் இவர்களின் லாப வெறியில் இருந்து மக்களுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்.
//வேலைக்கே போகாமல் சம்பளம் வாங்கும் அரசு மருத்துவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உயிர் போகும் பிரசவ வழியில் துடிக்கும் எத்தனை சகோதரிகள் சேயோடு இவர்களின் அலட்சியத்தால் செத்துபோகின்றார்கள். பணத்திற்காக தேவையே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் , அதே பணத்திற்காக உயிர் போகும் வேதனையில் துடிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள், பணத்திற்காக பெண் சிசுகளை கருவிலையே கொல்கிறார்கள் , செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்கிறார்கள்,//
பதிலளிநீக்குஇதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கான்னு புருனோ மாதிரி டாக்டர்கள் கேட்கிறாங்க தோழரே
அதற்கான பதிலை மருத்துவர்களின் மனசாட்சியிடம் கேட்டு பார்க்க சொல்லுங்கள் தோழர்
பதிலளிநீக்குஇந்த பதிவிற்கு தொடர்புள்ள விவாதம் பேஸ் புக்கில் நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த விவாதத்தில் பங்கெடுக்கலாம் https://www.facebook.com/theekathirasak/posts/2441526558514?ref=notif¬if_t=feed_comment_reply
பதிலளிநீக்குரமணா படத்தில் வரும் இந்த காட்சி தான் மருத்துவர்களுக்கான பதில் http://www.youtube.com/watch?v=xkayHKZnsYw
பதிலளிநீக்கு