வியாழன், 24 மார்ச், 2011

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முடக்கும் - நீதித்துறை மக்கள் பக்கம் திரும்புமா

தேர்தல் ஆணையம் கடந்த தேர்தல்களின் போது வெறும் பொம்மை போல தான் இருந்து வந்துள்ளது .இந்த தேர்தலில் தான் கொஞ்சம் உருப்படியாக செயல்பட்டுகொண்டிருப்பது போல தெரிகிறது. அதற்கும் மக்களின் உரிமைகளை காக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் , சரக்கு  மற்றும் பொருள்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கிறது,கருணாநிதிக்கு அடிவருடியாக செயல்பட்ட மக்கள் விரோத அதிகாரிகளை ஆணையம் துக்கி அடித்ததை பொறுக்க முடியாமல் தோல்வி பயத்தில் அறிக்கையாக வெளியிட்டார் நமது அரசியல் வியாபாரி கருணாநிதி . அதை நீதி மன்றம் அதிமுக்கிய பிரச்சனையாக எடுத்துள்ளது. தினம்தினம் எவ்வளவோ மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன அரசியல் வாதிகளின் மணல் கொள்ளை , போக்குவரத்து காவலாளிகள் லஞ்சம் வாங்குவது, அதிகாரிகளின் அட்டகாசம் ,அரசு மருத்துவர்களின் அலட்சியம் ,ஏழை மக்களை அரசு கிள்ளு கீரையாக விரட்டுவது, ரவுடிகளின் அட்டகாசம் , காவல் துரையின் காட்டு மிராண்டிதனாமான தாக்குதல்கள் , வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட , கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக வசூல் செய்வது , தொழிலாளர்களுக்கு  சட்டத்தை மதிக்காமல் முதலாளிகள் செய்யும் கொடுமைகள் என்று பல அடித்தட்டு மக்களை பாதிக்கும் செயல்களை இந்த நீதிமன்றங்கள் சூ -மோட்டாவாக எடுத்தது உண்டா !

இவ்வாறு நீதிமன்றங்கள் அரசியலில் கோடிகளை குவித்து, உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சாதகமாக இருப்பது தொடருமேயானால் மக்களுக்கு நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை அற்றுப்போய்விடும் என்பதை நீதிபதிகள் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்