செவ்வாய், 22 மார்ச், 2011

மார்ச் 23 பகத் சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தை அனுசரிப்போம்

தியாகிகள் பகத் சிங், ராஜகுரு , சுகதேவ் போன்ற சமரசமற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அடிமை இந்தியாவை  பிரிட்டிஷ் அரசிடம் இருந்து விடுவிப்பதோடு , நில்லாமல் அது இந்திய முதலாளிகளிடம் அரசின் அதிகாரம் சென்று சேராமல் தொழிலாளிகளும் ,விவசாயிகளுமான பாட்டாளி வர்க்கத்திடம் கைகளில் சுதந்திரம் சென்று சேர வேண்டும் என்று பாடுபட்டனர்,வெள்ளை அராசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையால் அந்த இளம் சிங்கங்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டதோடு அந்த இளம் குருத்துகள்  தாய்  நாட்டின்  விடுதலையை முழங்கியவாறு  துக்கில் ஏற்றப்

பட்டனர்  .அவர்கள் தாங்கள் இவ்வாறு மாரணம் அடைவதன் மூலம் இந்தியாவில் இளைஞர்கள் எழுச்சி பெற்று  பாட்டளி வர்க்கதை  அணிதிரட்டுவார்கள், அதன் மூலம் உழைக்கும் வர்க்கம் ஆட்சியை  பிடிக்கும்   என்று நம்பினார்.

 அவர்களின் உன்னதமான  லட்சியத்திற்கு   மாறாக  இந்திய முதலாளிகளின்  கைகளில் இந்திய சுதந்திரம் அடைமானம்    வைக்கப்பட்டது. அதற்கான பலனை  நாம்  அனுபவித்து  வருகிறோம். ஒப்பற்ற அந்த தியாகிகளை நினைவு கூறுவோம் புரட்சிவீரர்களின் உயர்ந்த   லட்சியத்தை சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்க   அந்த தியாகிகளின்   பாதசுவடுகளில்  நடை பயில்வோம் ,  பாட்டாளி வர்க்க அரசை நிர்மாணிக்க இயக்கம் அந்த மாவீர்களின் மறைந்த   மார்ச் 23    நினைவு நாளில்   அறை கூவி அழைக்கிறது.

புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட    மோதலாகத்தான் 
இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள்  வஞ்சம் தீர்த்துக் கொள்ளவதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள்துப்பாக்கிகள் மீதான  வழிபாடல்ல.  'புரட்சி' என்பதன்  மூலம் ,வெளிப்படையான  அநீதியை  அடிப்படையாகக் கொண்ட   இந்த சமூக அமைப்பு மாற்றப் படவேண்டும்  என்று நாங்கள் கூறுகிறோம் .

விரல் விட்டு எண்ணி விடக்கூடிய  சில  ஒட்டுண்ணிகளால்      இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம்   இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற  பிரிட்டிஷ்  முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய   முதலாளிகளின்  கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற  இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு   நிறுவப்படும்   வரையிலும் ஓயாது   தொடுக்கப்பட்டுக் கொண்டே  இருக்கும்  ... இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.  வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்நிளைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".

                                                     - தியாகி பகத் சிங்,



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்