தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே இலவச திட்டங்களை அறிவித்துள்ளன. முன்பு பெரிய அணைக் கட்டை கொண்டுவருவோம் ,மருத்துவமனை கொண்டு வருவோம் என்றாவது இந்த கட்சிகள் அறிவிப்பதுண்டு. இப்போது அனைத்துமே மருத்துவ காப்பீடு , இலவச திட்டங்கள் என்று இவர்கள் அறிவிப்பதெல்லாம் தனிமனிதனை ,குடும்பத்தை சுற்றி சமூக கண்ணோட்டத்திலிருந்து சுருங்கி தான் வாழ்ந்தால் போதும் , இந்த சமுதாயம் எக்கேடு கெட்டுப்போனால் போகட்டும் என்பது போன்ற சுயநல வட்டத்திற்குள் நம்மை முடக்க இந்த அரசியல் கட்சிகள் சுத்திவருவது கண்டும் நாம் விழித்தேளாவிட்டால் இந்த சமூகம் அழிந்து போவதை நம்மால் தடுக்க முடியாது, என்பதை நினைவில் நிறுத்துவோம். சமூகத்தில் உழைக்கும் மக்கள் தங்கள் சுய மரியாதையை இழந்துவிடாமல் காப்பாற்ற கொள்ள வேண்டும் எனெனில் அது தான் நம்மிடம் உள்ள மதிப்பு மிக்க சொத்து ஆகும்.
பாரதி கிருஷ்ணகுமார் சொன்னார் ஒருமுறை 'இவர்கள் இலவச சன்னலை திறந்து வைத்துவிட்டு, சுதந்திர வாசலை அடைத்து விடுவார்கள்' என. இது எவ்வளவு உண்மை....
பதிலளிநீக்குஅம்மா சுரத்தே இல்லாது தேமே என்று காப்பி பேஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.. அருகில் கட்சியின் முக்கிய தலைவர்களை கூட உட்கார வைக்கவில்லை.. அகம்பாவம் இன்னும் போகலையோ?
பதிலளிநீக்கு