கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிககள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் " என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில் கீழ்வரும் பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும் இதே போன்ற பொது வேலைதிட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றுள்ளனர் .
இந்திய அளவிலும் , உலக அளவிலும் இன்று தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கு இடையூறாக இருப்பது; புரட்சி திட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகளே! ஆதலால் ஒரு உண்மையான புரட்சிகர பாதையையும் , புரட்சிகர கட்சியையும் நல்ல எண்ணத்தோடும் , நல்ல மனதோடும் நன்கு ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வரை "உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின்" மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய செயல்பாடுகளை இந்த
அமைப்பின் மூலம் செய்வது என்றும் , அதே வேளையில் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பணியாற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய கீழ்வரும் செயல்களை இந்த அமைப்பு செய்ய உறுதி ஏற்று உள்ளது.
அந்த செயல்திட்டங்கள்
1 . இடது சாரிகளின் ஒற்றுமைக்காக பாடுபடுதல்
2 .போராட்ட கமிட்டிக்களை ஆங்காங்கே உருவாக்கி போராட்டங்களை கட்டி எழுப்புதல்
3 . அரசியல் வகுப்புகள் நடத்துவது
4 . மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்துதல்
5 . சமரசமற்ற போக்கை கடைபிடிப்பது
6 . அனைத்து நிலைகளில் ஒடுக்கப்படும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல்
7.சாதிவாதம் , மதவாதம் ,இனவாதம் போன்ற தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பது என்பதை வலியுறுத்துவது
இவற்றை கடைபிடித்து ஆங்காங்கே போராட்டகமிட்டிகளை அமைக்கவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கூர்மைப்படுத்தவும் வர்க்க உணர்வுள்ளவர்களை உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் அறை கூவி அழைக்கிறது.
தொடர்பிற்கு: தோழர்.சந்தோஷ்
தொலைபேசி எண் : 94433 47801
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக