கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
பல சுற்றுப் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் விஜயா மருத்துவமனை நிர்வாகம் ,செவிலியர்களின் சம்பள உயர்வு உட்பட எந்த குறைந்த பட்ச கோரிக்கையும் ஏற்க இதுவரை தயாராக இல்லை. மாறாக செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக , செவிலியர்கள் வசிக்கும் ஹாஸ்டலில் தண்ணீர் ,மின்சார விநியோகத்தை தடை செய்தல், தாக்குதல் நடத்துதல், தவறான செய்திகளைப் பரப்புதல் ,மிரட்டுதல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுகிறது. ஆனால் நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைகளை கண்டு சிறிதும் அஞ்சாமல் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை இந்தப் போராட்டத்தை தொடர்வது என்று செவிலியர்கள் முடிவு செய்துள்ளனர்.
விஜயா மருத்துமனை செவிலியர்களின் கோரிக்கைகளான ,விஜயா குழும செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பேபி சபினாவின் தற்காலிகப் பணிநீக்கத்தை ரத்து செய்தல் , செவிலியர்கள் கோரும் ரூ.15 000 ஊதிய உயர்வு அளித்தால் , கூடுதல் பணி நேரத்திற்கு ஒ.டி. அளித்தால் . ஹாஸ்டல் மற்றும் உணவுக்கு வசூலிக்கும் கட்டணங்களைக் குறைத்தல், உட்பட அவர்கள் முன்வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளை உடனடியாக நிர்வாகம் ஏற்க வேண்டும். அப்படி ஏற்காத பட்சத்தில் அரசு தலையிட்டு இந்த நிபந்தனைகளை ஏற்க வைக்க வேண்டும்.
பல்வேறு தொழிற்சங்கங்களும் போராடும் செவிலியர்களுக்காக குரல்கொடுக்கவேண்டும், அத்தோடு பரந்துபட்ட உழைக்கும் மக்களிடையே இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என 'சென்ட்ரல் ஆர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) அழைப்பு விடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக