மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு தொழிலாளர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. பல்வேறு போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி வாங்கிய தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதத்தில் ஒவ்வொரு சட்டங்களாக கொண்டு வருகிறது. அதை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ உலகமயத்தின் அப்பாவி பலிகிடாக்கள் இந்திய முதலாளிகள் என்று கூறிக்கொண்டு இந்திய முதலாளிகளின் சுரண்டலை அம்பலப்படுத்துவதில்லை. ஆனாலும் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளிகள் இதை நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
அவர்களின் உரிமைகளை பறிபோவதை வேடிக்கை பார்க்கும் தொழிற்சங்கங்களை நிர்பந்தம் செய்ததின் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு ஆண்டு தோறும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 28 .02 .2012 அன்று மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து இந்திய முழுவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. பொதுத் துறை நிறுவனங்களான வங்கிகள், தபால் துறை , காப்பீடு நிறுவனங்கள், போக்குவரத்து துறை ஆகிய நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவிலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்த அளவிலான பங்கேற்போடு இந்த வேலை நிறுத்த போராட்டம் ஓரளவு வெற்றிகரமாக நடைபெற்றது.
இது போல ஆண்டுகொருமுறை சம்பிரதாயமாக இல்லாமல் , எப்போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க, தொழிற்சங்க போராட்டங்களை சீர்குழைக்க மத்திய, மாநில அரசுகள் முனைகிறதோ அப்போதெல்லாம் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று
சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக