19 .02 .2012 , அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பில் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது .
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலையே இது வரை
எழுதப்பட்ட வரலாறு அனைத்துமே வர்க்கப்போராட்டத்தின் வரலாறு தான் என்று மார்க்ஸ் ஆணித்தரமாக நிறுவினார். இயக்கவியல் விதிகளை மனித சமுதாய வரலாற்று மாற்றங்களுக்கு பிரயோகிப்பதே வரலாற்றுப் பொருள் முதல் வாதம் எனப்படுகிறது. ஆதியில் வாழ்ந்த பொதுவுடமை சமுதாயம், அடிமை சமுதாயம், நில பிரதிநிதித்துவ சமுகம்,முதலாளித்துவ சமுகம், ஆகியவற்றை எடுத்து இயக்கவியல் கோட்பாடுகளுக்கு உட்படுத்தி ஒன்றில் இருந்து இன்னொன்று மாறி வந்துள்ளது என்பதை காரல் மார்க்ஸ் நிறுவிய விதத்தை பல்வேறு உதாரணங்களோடு தோழர் அ.ஆனந்தன் விளக்கி கூறினார் . அத்தோடு கூடங்குளம் போராட்டம் குறித்த விவாதமும் நடைபெற்றது. மிகுந்த உற்சாகத்தோடு கலந்து தோழர்கள் அனைவருக்கும் மார்க்சிய சிந்தனை மையம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக