புதன், 29 பிப்ரவரி, 2012

28 .02 .2012 பொது வேலை நிறுத்தம்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு தொழிலாளர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. பல்வேறு போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி வாங்கிய தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதத்தில் ஒவ்வொரு சட்டங்களாக கொண்டு வருகிறது. அதை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளோ உலகமயத்தின் அப்பாவி பலிகிடாக்கள் இந்திய முதலாளிகள் என்று கூறிக்கொண்டு இந்திய முதலாளிகளின் சுரண்டலை அம்பலப்படுத்துவதில்லை. ஆனாலும் அடிமட்டத்தில் இருக்கும் தொழிலாளிகள்  இதை நன்றாக உணர்ந்துள்ளார்கள்.  

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சிறப்புடன் நடைபெற்ற மதுரை கருத்தரங்கம்



சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), அமைப்பு ,26 .02 .2012  ( ஞாயிறு ) அன்று . மாலை 6 மணி முதல் 9.30  மணி வரை  மதுரை, மணியம்மை  மழலையர் & தொடக்கப்பள்ளியில் , "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை சிறப்புடன் நடத்தியது , சி.ஓ.ஐ.டி.யு. யின் பொறுப்பாளர்  தோழர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் சர்வதேச கீதத்தோடு துவங்கியது .  உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில  அமைப்பாளர் தோழர் வரதராஜ் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் சுந்தர் , ஏ .ஐ.டி.யு.சி யை சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் , அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தோழர் சம்பத் , மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் தோழர் பாலமுருகன் , பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற் சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார் , அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர் பாரதி, மாற்றுக்கருத்து ஆசிரியரும், கேளாத செவிகள் கேட்கட்டும்- பகத்சிங் புத்தகத்தின் ஆசிரியருமான தோழர் த.சிவகுமார் , ஆகியோர் தொழிற் சங்கங்களின் இன்றைய நிலையினை விரிவாக எடுத்துரைத்தனர். 

சனி, 25 பிப்ரவரி, 2012

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்

                                                கருத்தரங்கம் 


நாள் : 26 .02 .2012  ( ஞாயிறு ). மாலை 6 மணி முதல் 9 மணி வரை  ,

இடம்:  மதுரை, மணியம்மை  மழலையர் & தொடக்கப்பள்ளி ,

( வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரில் ) 

சிறப்புரை :தோழர்.அ.ஆனந்தன், தென் இந்தியப் பொது செயலாளர், சி.டபிள்யு.பி.

சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), தமிழ்நாடு.

தொடர்பு முகவரி : அழகு முருகன் காம்ப்ளக்ஸ் , ஆதவன் டுயூசன் செண்டர் மாடியில் , நத்தம் மெயின் ரோடு , நாராயணபுரம் , மதுரை - 14 . 

தொடர்பிற்கு :கு. கதிரேசன் ( பொறுப்பாளர் சி.ஓ.ஐ.டி.யு.): 9843464246

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கருத்தரங்கம்

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்


தோற்றதில்லை தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை. கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை என்ற முழக்கம் எங்கும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. தொழிலாளர் அலுவலகங்களில் தொழில் தாவாக்கள் அப்போதெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை நிறுத்தங்கள், தர்ணாக்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் என தொழிலாளர் பிரச்னைகளை மக்கள் முன் நிறுத்திய பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அப்போது நிரம்பி வழிந்தன. ஒரு வகையான போர்க்குணமிக்க அரசியல் சூழல் அப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. அதற்குக் காரணம் அப்போதிருந்த தொழிற்சாலைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதனாலில்லை. மாறாக ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே ஓரே தொழிலாக நிலவிய நமது கிராமப்புறப் பகுதிகளில் தற்போது பல தொழிற்சாலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. இருந்தும் அப்படிப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் இல்லாமல் போய்விட்டது. முன்பிருந்ததைப் போல் தொழிற்சாலைகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சங்கக் கொடிகள் பறக்கும் காட்சி அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில காலங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளும் இதை அங்கீகரித்து எழுதின: தொழிற்சங்கங்களுக்கு தொழில் வளாகங்களிலிருந்து பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என்று. 

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வரலாற்றுப்பொருள் முதல் வாதம் உருவான வரலாறு -நாகர் கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்

19 .02 .2012 , அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பில்  மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும்  இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால்  வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது .

சனி, 18 பிப்ரவரி, 2012

19 .02 .2009 - காவல் துறையின் கொடூர தாக்குதலுக்கு தீர்வு கிடைக்குமா ?

சென்னை உயர் நீதிமன்றத்தை சாட்டர்டு ஹை கோர்ட் என்று நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் பெருமைப்பட்டு கொள்வார்கள். ஆனால் அந்த பெருமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்தது தமிழக காவல் துறை. பிப்ரவரி 19 , 2009 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல்துறை வழக்கறிஞர்கள் , நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள், கட்சிகாரர்கள், மீடியா ரிப்போர்ட்டர்கள் ஆகிய அனைவரின் மண்டைகளையும் உடைத்தது. காட்டுமிரண்டிதனமாக பலரையும் கொடுங்காயம் ஏற்படும் வகையில் தாக்கியது. நீதிமன்ற வளாகங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் , நூலகங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கி சூறையாடியது. உலக மக்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் பார்க்கவே இந்த அனைத்து அட்டகாசங்களையும் காட்டுமிராண்டிதனமான தமிழக காவல் துறை அரங்கேற்றியது.  

வியாழன், 16 பிப்ரவரி, 2012

பிப்ரவரி 19 - கருப்பு தினம்


2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக்  கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான  விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் ,  வழக்கறிஞர்களும்  காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது. 

புதன், 15 பிப்ரவரி, 2012

இருளில் மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ?


தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். 

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பிப்ரவரி 19 : மார்க்சிய படிப்பு வட்டம்


மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 19.02.2012 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த மூன்று வகுப்புகளாக  நடத்தப்பட்டு வரும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கடைசி வகுப்பு  தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் ,முற்போக்கு எண்ணம் கொண்டோரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். 

சனி, 11 பிப்ரவரி, 2012

தோழர் ரேகா சின்காவிற்கு சிவப்பு அஞ்சலி

தோழர்களால் தங்களது அன்பிற்குரிய மூத்த சகோதரி என்று கருதவும் அழைக்கவும்பட்ட தோழர் ரேகா சின்கா இந்த ஆண்டு (2009) மே மாதம் 18- ம் நாள் மாலை 3.45 மணியளவில் பாட்னா நகரில் போரிங் கால்வாய் சாலையில் உள்ள வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் வசித்த வீட்டில் காலமானார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் நேர்ந்தது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்சிய சிந்தனையாளர் சிப்தாஸ்கோஷ் அவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தால் உத்வேகம் பெற்று உழைக்கும் வர்க்கப் போராட்டப் பதாகையை தனது இறுதி மூச்சுவரை அயர்வின்றி உயர்த்திப் பிடித்த அவரது வாழ்க்கைப் பயணம் இவ்வாறு முடிந்தது. 

திங்கள், 6 பிப்ரவரி, 2012

நேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா? திருத்தல்வாதமா?


சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் சிந்தனைக்கு சில கேள்விகள்
நமது இதழில் நாம் ஏற்கனவே எழுதியிருந்த இரு தொடர் கட்டுரைகளில் இன்றைய சமுதாயமாற்ற இயக்கங்கங்கள் எவையும் எந்தவொரு குறிப்பிடதக்க உற்சாகத்தையும் கொடுக்கும் விதத்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேபாளத்தில் தோன்றியிருக்கக் கூடிய வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு இருண்ட சூழ்நிலையில் ஒளிக்கீற்று போல் தோன்றியுள்ளன என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
அதே சூழ்நிலையில் நாம் வேறொரு விசயத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயகத்திற்கானப் போராட்டத்தில் தன்னை ஏழு கட்சிக் கூட்டணியில் அங்கமாக்கி கொண்டு செயல்படும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் பெயரளவில் தங்களை எப்படி அழைத்துக் கொண்டாலும் உழைக்கும் வர்க்க அரசு ஒன்று அமைவதை எந்த சூழ்நிலையிலும் ஜீரணிக்க முடியாதவையே. அத்தகைய சூழ்நிலையில் அவை ஏதாவது ஒரு வகையில் உழைக்கும் வர்க்க அரசினை அமைக்கும் பாதையில் மாவோயிஸ்டுகள் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்; அவற்றை, அகற்றி அவற்றின் தீய நோக்கத்தை பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இடைவிடாது மக்கள் இயக்கங்களை தட்டியயழுப்ப வேண்டியகட்டாயமும்,அத்தியாவசியமும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும்; இதையும் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வெட்கப்பட வேண்டியது யார் ?

முதலாளித்துவ நாடளமன்றங்கள் வெறும் அரட்டை மடங்கள் என்று தோழர்.லெனின் கூறினார். வேறெந்த நாடுகளை காட்டிலும் அது இந்திய முதலாளித்துவ அரசின் நாடளமன்றங்களுக்கும் , சட்டமன்றங்களுக்கும் சாலப்  பொருந்துவதாக இருக்கும். இங்கு அனைவருக்கும்  வாக்களிக்கும் உரிமை உள்ளது, இது தான் உண்மையான மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்திய ஆளும் வர்க்கம் அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் இங்கு ஆளும் வர்க்கம் முன் நிறுத்தும் மோசமானவர்களில் யாரவது ஒருவருக்கு  வாக்களிக்கும் உரிமை மட்டும் தான் மக்களுக்கு உள்ளது , ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், ஆளும் வர்க்கத்தின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் மத்திய அரசுகளும் , மாநில அரசுகளும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. 

கட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை: மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராக பிரகாஷ் காரத்


சி.பி.ஐ.யிலிருந்து பிரிந்தவுடன் சி.பி.ஐ.(எம்) கட்சி சர்வதேசப் பிரச்னைகளில் நிலைபாடுகள் எதையும் உடனடியாக எடுப்பதில்லை என்ற நிலைபாட்டினை எடுத்தது. அதன்மூலம் அக்கட்சி அப்போது தீவிரமடைந்து வந்த ரஷ்ய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் பின்னணியில் இவ்விரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் எந்தக் கட்சியினர் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை அறிவிக்காமல் தள்ளிப்போட விரும்பியது. இதுவே ஒரு சந்தர்ப்பவாத முடிவு. இது அப்பட்டமான திருத்தல்வாதப் பாதையில் சென்று கொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாசேதுங் மேற்கொண்ட மார்க்சிஸத்தை திருத்தல் வாதத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியை ஆதரிப்பதில் அவர்கள் காட்டிய தயக்கமே தவிர வேறெதுவுமில்லை

புதன், 1 பிப்ரவரி, 2012

சீனாவின் தற்போதய சமூக அமைப்பு உண்மையில் ஒரு சோசலிச அமைப்பா?

சோசலிசத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போனபின் அதன் பெயரில் சீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டு விழா
சீன அரசு வாணவேடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றும் நவீனப் போர்த் தளவாட அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 60தாவது ஆண்டினை கொண்டாடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒருபுறமும் அங்கு நிலவும் மனித உரிமையை மதிக்காத போக்குகள் போன்றவை குறித்து மறுபுறமும் எழுதித் தள்ளுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல நாடுகளில் செயல்படும் திருத்தல்வாத சமூக ஜனநாயக அமைப்புகள் இப்படிப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சி அங்குநிலவும் சீன பாணியிலான சோசலிசத்தின் சாதனை என்றெல்லாம் கூறப்படுவதைக் கண்டும் காணாமல் அக்கூற்றுகளின் பாலான ஒருவகை ஒப்புதலை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.

முகப்பு

புதிய பதிவுகள்