கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காமென் வெல்த் விளையாட்டில் தொடங்கி 2ஜி அலைக்கற்றை, ஆதர்ஸ் வீடுகள் கட்டுதல் என்ற வகைகளில் ஊழல் போக்குகள் மலிந்து கொண்டிருந்தன. அந்நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் மேலோட்டமாக சில நடவடிக்கைகள் எடுத்து இப்பிரச்னைகளை மூடிமறைத்து விடலாம் என்று ஆட்சியாளர் எண்ணினர். ஆட்சியாளர்களின் அவ்வெண்ணம் ஈடேறாத நிலையில் ஒவ்வொரு வாதமாக வைத்துப் பார்த்துவிட்டு இறுதியாக அன்னா ஹசாரேயின் இயக்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற வாதத்தை ஆணித்தரமாக ஆட்சியாளர்கள் முன்வைக்கத் தொடங்கினர். சட்டம் இயற்றுதல் நாடாளுமன்ற வரம்பிற்குட்பட்டது. அதனை சிவில் சமூகம் என்ற பெயரில் சிலபேர் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறத் தொடங்கினர். ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் அதனைச் செயல்படுத்தும் கருவிகளையும் தன்னகத்தே கொண்ட நாடாளுமன்றத்தினால் ஊழல் இத்தனைஉயரத்திற்கு வளர்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்விக்கு மட்டும் அவர்களிடம் பதில் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழலைத் தடுக்க முடியாதவர்களாக மட்டுமின்றிஅவர்களில் பலர் ஊழலின் உறைவிடங்களாகவும் ஆகிவிட்டனர். தொண்டுள்ளம் படைத்தவரைத் தேர்ந்தெடுப்பவையாக தேர்தல்கள் இல்லாமல் போய்விட்டன. தேர்தல்களில் பணம் வகிக்கும் பங்கே பிரதானமானதாக ஆகிவிட்டது. வாக்கிற்குப்பணம் கொடுப்பதில் தொடங்கி ஜாதி, மத, பிராந்திய வெறிவாதங்களை தூண்டிவிடுவது வரைஅனைத்து மோசமான போக்குகளுமே தேர்தல் வெற்றிகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக ஆகிவிட்டன. மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட இயக்க ரீதியிலான அரசியல் இப்போதெல்லாம் கட்சிகளால் முன்னெடுக்கப் படுவதில்லை. இந்நிலையில் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் வகையிலான போக்குகளும் வாழ்க்கைப் பிரச்னைகள் சாராத அற்பமான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் செய்திகளும் கலை இலக்கியங்களும் பல்கிப்பெருகி மட்டமானவரைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய இந்த அவலமான போக்கைத் தோற்றுவித்துள்ளன.
இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய 16 சதவிகிதம் பேர் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களாக உள்ளனர்; நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பெரிய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்காக பணம் பெறுபவர்களாக ஆகிவிட்டனர். பரந்துபட்ட ஏழை எளிய மக்களின் எரியும் பிரச்னைகளை ஏறெடுத்தும் பாராது பணம் படைத்தவருக்கு பல்வேறு அனுமதிகள் பெற்றுத் தருவதிலேயே அக்கறை உள்ளவர்களாக அவர்கள் இருக்கின்றனர். இவையயல்லாம் சட்ட,நாடாளுமன்றங்கள் மக்கள் நலம் பேணும் கருவிகளாக இல்லாமல் போய்விட்டதையே கோடிட்டுக் காட்டுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் அன்னா ஹசாரேநடத்துவது போன்ற இயக்கங்களால் பாதிக்கப்படுகிறது என்று விண்ணளவிற்குக் கூக்குரலிடும் “திறமை பெற்றவர்கள்” என்று கருதப்படும் மத்திய அமைச்சர்களின் வாதங்களும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் கொண்டவையாக இல்லை. மாறாக அவற்றை மூடிமறைக்கும் அவற்றிற்கு சப்பைக் கட்டு கட்டுபவையாக இருக்கின்றன. அது மட்டுமின்றிஊழல் நடவடிக்கைகளையே திரித்தும் புரட்டியும் கூறிஅவை மக்கள் நலனிற்கே வழிவகுத்திருக்கின்ற என்று கூறுபவையாகவும் ஆகிவிட்டன. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் நடந்துள்ள முறைகேடுகள் அத்துறையின் அமைச்சராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ள கபில் சிபல் அவர்களால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டினால் நஷ்டம் எதுவுமே ஏற்படவில்லை என்று கூறுவதில் தொடங்கி இறுதியில் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏழை எளியவர்கள் குறைந்த கட்டணத்தில் தொலைபேசியை உபயோகிப்பதற்கு வழிவகுத்தது என்று கூறுவது வரை அவர் சென்றார்.
இன்று ஊழலுக்கு எதிராக உருவாகியுள்ள இந்த இயக்கத்தை மனதார வரவேற்கும் - அதில் மாணவர் இளைஞரின் பங்கேற்பை மென்மேலும் வலியுறுத்தும் அதே வேளையில், இவ்வாறு பல்கிப்பெருகிவரும் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருப்பது எது என்பதையும் நாம் பார்க்கத் தவறிவிடக் கூடாது. ஏனெனில் ஊழல் தானாகவே சமூகத் தொடர்புகள் ஏதுமின்றி வளர்ந்துவரும் ஒன்றாக இன்று பலரால் சித்தரிக்கப்படுகிறது. தற்போது பெரிதாகக் காட்சியளிக்கும் ஊழல்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்தால் அந்த ஊழல்களின் உருவாக்கத்திலும் அவற்றின் வளர்ச்சியிலும் பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் பல இருப்பதைப்பார்க்க முடியும். மேல்மட்டத்தில் பெரிய அளவில்தாங்கள்பெரு லாபம் ஈட்டும் தொழில்களுக்கானஅனுமதிகளை பெறுவதற்காகவும் தங்களது அதிகபட்ச லாபத்திற்கு வழிவகுக்கும் வகைகளிலான தொழிற் கொள்கைகளை வகுத்தெடுப்பதற்கு அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காகவும் பெரிய முதலாளித்துவ நிறுவனங்களால் ஊழல்நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. கீழ்மட்டத்தில் ஒப்பந்தக்காரர், அரசியல் வாதிகள், அர•நிர்வாகத்தின் அதிகாரவர்க்கக்கூட்டு அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மட்டும் செலவுசெய்துவிட்டு அதில் பெரும் பகுதியைப்பங்கிட்டுக் கொள்வதில் ஊழல் நிலைபெற்று நிலவுகிறது. இந்நிலையில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் அவை ஊழலை உறுதியாகவும் இறுதியாகவும் தடுக்க முடியாதவையாக ஆகிவிடும் சூழ்நிலையே நிலவுகிறது. பணம்தான் அனைத்தும் அது இருந்தால் சமூக அந்தஸ்து, மரியாதை, பெயர், புகழ் அனைத்தையும் பெற்று விடலாம் என்ற பண வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு அடிப்படையில் மாற்றப்படாத வரைஊழலை ஒழிக்கவே முடியாது என்பதே மறுக்கவும் மறைக்கவும் முடியாத விசயமாக ஆகியுள்ளது.
இந்த நிலையில் அன்னா ஹசாரேபரிந்துரைக்கும் சிவில்சமூகத்தின் ஜன் லோக்பால் மசோதாவா அல்லது ஊழலுக்கு உதவிகரமாகஇருந்துவிட்டு அது மறைக்க முடியாத விதங்களில் வெளிப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு எதிரானமக்கள் இயக்கங்களின் தாக்கத்தால் வேறுவழியின்றிஅரசால் கொண்டுவரஉத்தேசிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்டமா என்ற கேள்விகளுக்குள் ஊழல்ஒழிப்பு என்றபூதாகரப்பிரச்னையை உள்ளடக்கிவிட முடியாது.இச்சட்ட வரம்பிற்குள் உயர்மட்டநீதி அமைப்பும் பிரதமர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களும் கொண்டுவரப்படவேண்டுமா என்றால் நிச்சயம் விதிவிலக்கின்றி அனைவரும் ஊழலுக்கு எதிரான சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அவ்வாறு அவர்கள் கொண்டுவரப்படுவதே ஊழலை ஒழிப்பதாக ஆகிவிடும் என்று எதிர்பார்ப்பதும் நம்புவதும் பகற்கனவாகும். ஊழலை உறுதியுடன் எதிர்க்க வல்லதாக எந்தச் சட்டமும் ஆகிவிட முடியாது. ஒன்றுபட்ட மக்கள் சக்தியும் சரியான இலக்கினைக் கொண்ட மக்கள் இயக்கமுமே அதற்கு எதிரான சக்திமிக்க சவாலாக ஆகமுடியும்.
அந்த அடிப்படையில் அன்னா ஹசாரே முன்மொழிந்துள்ள சட்டத்தைக் காட்டிலும் அவர் தட்டியயழுப்பியுள்ள மக்கள் இயக்கமே நம்பிக்கை ஒளியூட்டக் கூடியதாகும்.சிலசரியானசட்டங்கள் அமுலாவது கூட அதற்கு ஆதரவான பரந்துபட்ட மக்கள் இயக்கத்தினையே மையமாகக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் செயலிழந்ததாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஆதரவான ஒருதலைப்பட்சமானதாகவும் ஆகியுள்ள இன்றைய நிலையில் மக்கள் ஒருங்குதிரண்டு தெருவில் அரங்கேற்றும் ஜனநாயகமே மக்கள் முன்பு உள்ள ஒரே நம்பிக்கையாக ஆகியுள்ளது. பெரும்பான்மைப்பாடுபடும் மக்களின் சமூக பிரச்னைகளின் பாலான பங்கேற்பின் மூலமே சரியான ஜனநாயகமும் மக்கள் ஆட்சியும் பராமரிக்கப்பட முடியும். அத்தகைய பங்கேற்பிற்கு அன்னா ஹசாரே தற்போது தொடங்கியுள்ள இயக்கம் வழிதிறந்து விட்டுள்ளது. எவ்வாறு 70களில் நிலவிய சமூக அவலங்களுக்குஎதிரானமக்கள் அணிதிரட்டலை ஜெயப்பிரகாஷ்நாராயண்அவர்கள் தொடங்கி வைத்த இயக்கம் உருவாக்கி நிலைநிறுத்தியதோ அந்த வகையில் அன்னா ஹசாரே அவர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தையும் ஆக்குவதும் நிலை நிறுத்துவதும் சமூகத்தின் எதிர்காலமானமாணவர் இளைஞர்களின் கடமையாகும். லோக்பால் மசோதா குறித்த இவ்வியக்கத்தின் முக்கியக் கோரிக்கை ஏதாவது ஒரு வகையிலானபேச்• வார்த்தையின் மூலம் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டாலும் தற்போது நடைபெறும் இந்த இயக்கம் மென்மேலும் முன்னெடுக்கப்பட்டு சமூக அவலங்கள் அனைத்திற்கும் எதிராகதீவிரமாகவும் தீர்க்கமாகவும் நடைபெற வேண்டும். ஏனெனில் நமது சமூகத்தின் மேம்பாடு சட்டமியற்றுதலில் இல்லை; சமூக இயக்கங்களிலிலேயே உள்ளது. அதற்கான மகத்தானமனோதிடத்துடனும் புரிதலுடனும் மாணவர் இளைஞர் சமூகம் இவ்வியக்கத்தில் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.
மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM)
(கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்ம்-ன் மாணவர் அமைப்பு )
தொடர்பிற்கு :மா.வினோத் குமார் 9003828065
தொடர்பிற்கு :மா.வினோத் குமார் 9003828065
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக