செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்க்சிய சிந்தனை மையம்

நாகர்கோவில் லைசியம் பள்ளியில் 28.08 .2011 அன்று நடைபெற்ற மார்க்சிய படிப்பு வட்டத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதம் விவாதிக்கப்பட்டது. தென்மாநிலங்களுக்கனா கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரமின் (CWP) பொதுசெயலாளர் தோழர் . அ.ஆனந்தன் அவர்கள் கருத்து முதல்வாதம் எவ்வாறு மாறத்   தன்மையை போதித்து கற்பனையான உலகத்தில்உழைக்கும்  மக்களை ஆழ்த்தி வைத்திருந்தது என்றும்  ஹெகல் போன்றவர்கள் வரலாற்றுரீதியாக வைத்த சில வழங்கல்களை  , மார்க்ஸ் எவ்வாறு முழுமைபெற்ற பொருள்முதல்வாதமாக ஆக்கினார் என்பதையும் , 17 , 18 நூற்றாண்டுகளில் நிகழ்த்த தொழிற் புரட்சியின் விளைவாக வர்க்கம் கூர்மைபெற்றதை கணக்கில் எடுத்துகொண்டு , கருத்து முதல்வாதம் உத்தேசமாக கூறியதை மார்க்ஸ் எவ்வாறு புள்ளி விவரங்களோடு மறுத்து உறுதியாக  தனது கருத்துகளை நிறுவினார் என்பதையும், மாற்றம் நிகழ்ந்தே தீரும் அதை யாரும் தடுக்க  முடியாது வர்க்கங்கள் கூர்மையடைந்து கொண்டே தான் செல்லும் என்பதை மார்க்ஸ் நிறுவியதை பல்வேறு நடைமுறை உதாரணகளோடு விரிவாக எடுத்துரைத்தார். 

நாகர்கோவிலில் நடைபெறும் மார்க்சிய படிப்பு வட்டம் நாளுக்கு நாள் மெருகு ஏறிக்கொண்டே செல்கிறது. மார்க்சிய வெளிச்சத்தில் இன்றைய கம்யூனிஸ்டுகளின்  நடைமுறைகளை பார்க்க ஒரு ஒளிவிளக்காக இந்த படிப்பு வட்டம் அமைந்துள்ளது. மார்க்சியவாதிகள் யாவரும் ஒரே பாதையில் நடைபயில இது ஒரு துவக்கமாக அமையும் என்றால் அது மிகையில்லை.

11 கருத்துகள்:

 1. அன்னா ஹசாரே போன்ற ஆளும் வர்க்க கோமாளி கிறுக்கர்களை எல்லாம் ஆதரிக்கும் நீங்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கை பற்றி வாயே திறக்கவில்லையே ஏன் அதாவது தூக்கு தண்டனையை எதிர்க்கவில்லை ஏன் என்று கேட்கிறேன். இது தான் ஜென்யூன் கம்யூனிசத்திலிருந்து பிரிந்து வந்த ஜென்யூ...ன் கம்யூனிசமோ ?

  பொதுவுடைமை தத்துவம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது நீங்களோ நல்ல நடுத்தர வர்க்கமாக இருக்கிறீர்கள். உங்களுடைய மிடிள் கிளாஸ் லாங்வேஜ்லயே சொல்லனும்னா கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீங்க பாஸ் !

  கம்யூனிசமே வெல்லும் என்று நம்புகிற கம்யூனிச ஆதர்வாளன்.

  பதிலளிநீக்கு
 2. முகம் தெரியாத அன்பு தோழரே ,

  மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் மனதில் இருக்கும் அரிப்புகளை வெளியிடுவார்கள் ஆனால் தங்களை அடையாளம் காட்டி கொள்ள மாட்டார்கள் . நீங்கள் முதலில் மத்திய தரவர்க்க சிந்தனையில் இருந்து வெளிவந்து உங்கள் பெயரோடு விமர்சனம் செய்யுங்கள். நாம் தொடர்ந்து விவாதிப்போம்.

  உங்கள் பெயரை ஆவலோடு எதிர்பார்க்கும்

  இயக்கம்

  பதிலளிநீக்கு
 3. கேள்வி கேட்டால் அதற்கு ஒரு கேள்வியை கேட்பதன் மூலம் பதிலளிக்க மறுப்பது பழைய தந்திரம் மிஸ்டர் மிடிள் கிளாஸ் ஜென்யூன் கம்யூனிஸ்ட் அவர்களே. கேள்வியை யார் கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டியது தானே உங்கள் கடமை. அதை மறுத்து வாக்குவாதம் செய்கிறீர்களே இது தான் ஆ...சான் சிப்தாஸ் கோஷ் கற்றுத்தந்த கம்யூனிச பண்பா ? சரி என்னுடைய பெயரை சுசிக்குமார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இப்போது பதில் கூற ஒன்று தடை இல்லையே.

  உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும் பொதுவுடைமை விரும்பி.

  பதிலளிநீக்கு
 4. அய்ய்ய்..... பேரு நல்லா இருக்கே.... பாட்டில் மணி.. பைப் குமார்.. கோடைஇடி குமார் மாதிரி நீங்க சுச்சிக்குமாரா...
  ம்..ஆனாலும் நீங்க பலே கில்லாடிதான் சுச்சிக்குமார் அண்ணே.. இயக்கத்துக்காரங்க அப்படியாவது நீங்க ஐடியோட பதிவுபோடுவீங்கன்னு பாத்தாங்க... நீங்க மறுபடியும் ஐடி இல்லாம அனானியாவே பதிவுபோட்டு, சரி என்னுடைய பெயரை சுசிக்குமார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இப்போது பதில் கூற ஒன்று தடை இல்லையே. என்று ஒரே போடாப் போட்டு டபாய்ச்சிட்டீங்கலே சுச்சிக்குமார் அண்ணே.. ஆனா இதுவும் இஞ்சி இருக்கான்னா சுக்கு இருக்குன்னு சொல்ற அறுதப் பழய காமெடி டெக்னிக்தாணுங்க... புதுசா ஏதாவது ட்ரைப் பண்ணிங்கண்ணே....

  பதிலளிநீக்கு
 5. சுச்சிக்குமார் அண்ணே.. இயக்கத்துக்காரங்கள விடுங்க.. ஜென்யூன் கம்யூனிஸ்ட்.. அதிலிருந்து பிரிந்து வந்த ஜென்யூ...ன் கம்யூனிஸ்ட்... இவங்கள்ளாம் எனக்கு கம்யூனிஸ்டான்னு தெரியாதுன்ணே.. எனக்கு நீங்கதான் ஒரிஜினல் அக்மார்க் கம்யூனிஸ்ட்டாத் தெரியுதுன்ணே..

  அதனால உங்ககிட்ட எனக்கு சிலகேள்விகள் கேட்கனும்னு என் உள்மனசு என்னப் பிறாண்டுதுன்ணே.. (ஆனா ஒன்னுன்ணே.. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.. அதற்கு எனக்குப்பட்ட நியாயங்கள் நிறையவே என்னிடம் இருக்குதுன்ணே... இந்தக் கேள்விகள் ஒரிஜினல் அக்மார்க் கம்யூனிசத்தின் பார்வையிலிருந்து அதைப் புரிந்து கொள்வதற்காகவே...)

  கேள்வி 1: சுச்சிக்குமார் அண்ணே.. பொதுவுடைமை தத்துவம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதுன்னு நீங்க சொல்றீங்க... பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் இலட்சியம் கொள்கை கோட்பாடு எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதா? அவர்களது இயக்கம் நடுத்தர வர்க்கம் சார்ந்ததா? இல்லை தொழிலாளி வர்க்கம் சார்ந்ததா?

  கேள்வி:2 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் செயலுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இதன்மூலம் அவர்கலது விடுதலையைச் சாதிக்க முடிய்மா? அல்லது முடிந்ததா? இத்தகைய செயல்பாடுகள் பற்றி லெனினிசம் என்ன சொல்கிறது?

  இப்போதைக்கு எம்மூளைக்கு இவ்வளோதாங்க தோணுச்சு...

  சுச்சிக்குமார் அண்ணே.. இந்தக் கேள்விகளுக்கு உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்ப்பது... தமிழின உணர்வாளர்களின் பதில் அல்ல.. அது என்னன்னு எனக்கே தெரியும்... ஒரு ஒரிஜினல் அக்மார்க் கம்யூனிசத்தின் பார்வையிலிருந்து பதில் சொல்லுங்கண்ணே...

  கம்யூனிசமே வெல்லும் என்று நம்புகிற கம்யூனிச அண்ணன் சுச்சிக்குமாரின் பதிலுக்காகக் காத்திருக்கும் உங்க ரசிகனுங்கோ.....

  பதிலளிநீக்கு
 6. உங்களோட பேசுறது நல்லா காமெடியா இருக்கு அதே நேரம் எனக்கு கேவலமாவும் இருக்கு. நான் தான் ஏதோ முகவரி இல்லாத அநாமதேயன் உங்களுக்கு என்ன ’இயக்கம்’ சிவக்குமார் அல்லது கதிரேசன் ? நீங்கள் ஏன் முகத்தை வைத்துக் கொண்டு அனாமத்தாக பதிலளிக்கிறீர்கள். அதிலும் நீங்க கேட்ட கேள்வி இருக்கிறதே ரொம்ப ரொம்ப கேவலமாக இருக்கிறது, இந்த அசிங்கத்துக்கெல்லாம் பதில் வேறு சொல்லனுமா ? மூவரின் தூக்கை நாங்கள் எதிர்க்க மாட்டோம் அதாவது, ஆதரிக்கிறோம் என்பதை உண்மை முகத்தை வைத்துக்கொண்டு நெஞ்சுரத்துடன் சொல்ல வேண்டியது தானே, அந்த துணிச்சலும் நேர்மையும் உங்களுக்கு இல்லை. ஆக மொத்தம் நீங்களும் காங்கிரசு நிலைப்பாட்டில் தான் இருக்கிறீர்கள், அப்படியானால் அதை துணிச்சலுடன் சொல்ல வேண்டியது தானே. அதை மறைப்பதற்கு அனாமதேய பெயரில் அவர்கள் என்ன ஒடுக்கப்பட்டவர்களா என்று கேள்வி கேட்கிறீர்களே உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதற்கு.

  பதிலளிநீக்கு
 7. ஆக இவர்களுடைய ‘இயக்கம்’ மூன்று அப்பாவிகளை தூக்கில் போட்டு கொல்வதை ஆதரிக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே இது தான் ஜென்யூன் கம்யூனிசம். மார்க்ஸ் இருந்திருந்தால் உங்களையெல்லாம் கொன்றே கூட போட்டிருப்பார். த்தூத்தெறி...

  பதிலளிநீக்கு
 8. உங்களை தமிழின் முக்கியமான தளங்களில் எல்லாம் அம்பலமாக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. முகம் தெரியாத அன்புத்தோழர்களே
  நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்களாக வருகிறீர்கள். ஒருவர் கேள்வி கேட்பதுபோல் கேட்கிறீர்கள். உங்கள் பெயரைச் சொல்லுங்கள் என்றால் மறுபடியும் அனாமதேயராக வந்து சுசிக்குமார் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்கிறீர்கள். உடனே இன்னொரு அனாமதேயர் வந்து (இருவரும் ஒருவரோ என்னமோ தெரியவில்லை) அவர் ஏதோ இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பேசுகிறார். உடனே முதலாமவர் //ஆக இவர்களுடைய ‘இயக்கம்’ மூன்று அப்பாவிகளை தூக்கில் போட்டு கொல்வதை ஆதரிக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே இது தான் ஜென்யூன் கம்யூனிசம். மார்க்ஸ் இருந்திருந்தால் உங்களையெல்லாம் கொன்றே கூட போட்டிருப்பார். த்தூத்தெறி...// என்றும் //உங்களை தமிழின் முக்கியமான தளங்களில் எல்லாம் அம்பலமாக்குகிறேன்.// என்றும் நீங்களே வஞ்சினம் உரைத்துக்கொள்கிறீர்கள்.

  அனாமதேய தோழர்களே நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன?
  நாங்கள் உங்கள் பெயரைக் கேட்டது விவாதத்தை பயனுள்ள விதத்தில் தொடரத்தான். நீங்கள் நினைப்பது போல் பதில் சொல்ல மறுப்பதற்கல்ல. அந்த அளவிற்கு கருத்து வறட்சி எங்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை.

  மூவரின் தூக்குத்தண்டனை குறித்து கருத்துச் சொல்லவில்லை என்றால் நாங்கள் அதை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறோம் என்று நீங்களாகவே முடிவுக்கு வருவதிலிருந்தே உங்களது உள் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. சிலநாட்களுக்கு முன் சிவகாசி பட்டாசு ஆலை முதலாளிகளின் லாபவெறியால் விபத்து என்ற பெயரில் 12 தொழிலாளர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர். எங்களது பட்டாசுத் தொழிற்சங்கத் தோழர்கள் புதியதலைமுறை செய்திச் சேனலில் அதுபற்றி கருத்துக் கூறியிருந்தனர். இதற்கு முன் நடந்த பல பட்டாசுத் தொழிலாளர்"படுகொலை"களைக் கண்டித்துக்கூட‌ போராட்டம் நடத்தினோம். ஆனால் இந்தப்பட்டாசுத் தொழிலாளர்"படுகொலை"கள் பற்றி எவரும் வாய்திறக்கவில்லை(அனாமதேயர்களே நீங்கள் உட்பட). ஆனால் அதற்காக நீங்களெல்லாம் அப்"படுகொலை"களை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறீர்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ள முடியுமா?

  மூவரும் தூக்கிலிடப்படக்கூடாது என்பதே எங்கள் நிலைபாடாக இருந்தாலும் எல்லோரும் முந்திவிட்டார்கள் நாமும் முந்தவேண்டும் என்று பதைபதைத்துக் கருத்துக்கூறுவதற்கு நாங்கள் கருணாநிதி, வைகோ,இன்னபிற கட்சிகளைப் போல் இதைவைத்து தேர்தல்அரசியல் ஆதாயம் தேடமுயலும் கட்சியல்ல. நாங்கள் இனம், மொழி, ஜாதிகளால் திட்டமிட்டுப் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளிவர்க்கத்தை அணிதிரட்டி அவர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக்கி சமூகமாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அரசியலில் அர்ப்பணித்திருப்பவர்கள். மூவரின் தூக்குத்தண்டனை இன்னும் ரத்து செய்யப் படவில்லை; பிரச்னை இன்னும் முடிந்துவிடவில்லை. பொருத்திருங்கள்; எங்கள் கருத்தை நாங்கள் நிச்சயம் கூறுவோம். அப்போதும் இங்கே வாருங்கள் உண்மை முகத்துடன். மறைந்திருந்து யுத்தம் செய்வது வீரனுக்கு அழகல்ல.

  மற்றபடி தமிழின் முக்கியமான தளங்களில் எல்லாம் எங்களை அம்பலப்படுத்தும் உங்கள் சூழுரையை வரவேற்கிறோம். ஒரேயொரு வேண்டுகோள் உங்கள் அடையாளத்தை யாரென்று காட்டிக் கொண்டு அதைச் செய்யுங்கள். நாங்களும் அந்த விவாதங்களில் கலந்து கொள்கிறோம். ஆனால் இந்த அனாமதேய நாடகங்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது ஆக்கப்பூர்வமானது அல்ல.

  பதிலளிநீக்கு
 10. "இயக்கம்" நண்பர்களே, வாசகர்களே!
  இந்த அவசரத்திலும் அவசரமான மின்யுகத்தில் போகிறபோக்கில் தனது கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டுப் போக வசதியாக Anonymous ஆக comments போடவும் "இயக்கம்" ஆசிரியர்குழு அனுமதித்திருந்தது. ஆனால் இயக்கத்தின் கருத்துக்களை நேரடியாகச் சந்திக்கத் திராணியில்லாத கோழத்தனமான விஷமிகள் சிலர் Anonymous ஆக விவாதம் நடத்தி அந்த Anonymous விவாதங்களில் வரும் கருத்துக்களுக்கெல்லாம் "இயக்கம்" தோழர்களைப் பொறுப்பாக்கி அவதூறு செய்யும் சதிச்செயலில் ஈடுபடுகின்றனர். அவற்றையெல்லாம் நீக்குவதற்கு அதிகாரமும் வாய்ப்பும் இருந்தாலும் அவ்வாறு நீக்குவது முறையல்ல என்ப‌தால், அத்தகைய அவதூறு செய்யும் சதிச்செயலுக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதற்காக "இயக்கம்" ஆசிரியர்குழு மிகுந்த மனவருத்தத்துடன் Anonymous ஆக comments போடும் வசதியை இந்தக் கணம் முதல் விலக்கிக் கொள்கிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
  "இயக்கம்" ஆசிரியர்குழு

  பதிலளிநீக்கு
 11. நண்பர்களே கேள்விகளை யார் கேட்டால் என்ன தவறாகவும், அரசியலற்ற முறையிலும் பேசாத வரை நாம் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். மேலும் மேற்குறிப்பிட்ட கேள்வி அரசியல் ரீதியிலானது என்பதால் நீங்கள் முகவரி எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்காமல் உடனடியாக பதிலளித்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இனியேனும் பதிலளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்