செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நேபாளத்திற்கு புதிய பிரதமர் - மாற்றம் வருமா

நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வருவதில் நேபாளி  காங்கிரஸ் மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து பல முட்டு கட்டைகளை போட்டுவருகிறன. நேபாள மாவோயிஸ்ட் கட்சி செம்மையான மக்களின் நேரடி பங்களிப்புள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க, கடுமையாக போராடிவருகிறது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில்    நேபாளத்தின் புதிய பிரதமராக மாதேசி கட்சியின் உதவியோடு   ,நேபாள கம்யூனிஸ்ட் ( மாவோயிஸ்ட்)  கட்சியின் துணை தலைவர் டாக்டர் . பாபுராம் பட்டாரை , அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டாரை புது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

புதிய பிரதமருக்கு உலக நாடுகளில் இருந்தும் உள்நாட்டிலும் பலசவால்கள் காத்திருக்கின்றன. மார்க்சிய தத்துவ வழிநடக்கும் நேபாள் மாவோயிஸ்ட் கட்சி  மக்கள் இயக்கங்களின் மூலம்  நேபாள உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளது.  உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. கண்டிப்பாக அனைத்து சோதனைகளையும் சாதனைகளாக்கி நேபாள மண்ணில் நிரந்தரமாக  செங்கொடி உயர பறப்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்