சனி, 28 மே, 2011

அயல் நாடுகளில் நிலங்களை வாங்கி குவிக்கும் இந்திய முதலாளிகளும், இவர்களை தரகு முதலாளிகள் என்று திசைதிருப்பும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்


இந்திய முதலாளிகளின் மூலதனம் பணமாகவும் பொருளாகவும் உலகம் முழுவதும் பாய்ந்து சென்று கொண்டு உள்ளது. இந்திய முதலாளிகளின் வளர்ச்சியை கண்டு அனைத்து நாடுகளும் மிரண்டு போய் அவர்களுக்கு அடிபணியும் சூழ்நிலை நிலவும் இந்த நேரத்திலும் கூட இந்திய முதலாளிகளுக்கு சொந்த மூலதனமே கிடையாது , அவர்கள் அனைவரும்  அமெரிக்காவின் அடிமைகள் என்றும் , தரகு முதலாளிகள் என்றும்,  தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொள்ளும் சில கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.

அத்தோடு இந்தியா  முதாலாளித்துவ நாடு அல்ல, இது ஒரு அரைக்காலனி  நாடு என்றும் இந்த கட்சிகள் சொல்வதுண்டு. அத்தோடு சிறுமுதலாளிகள் அனைவரும் தேசிய முதலாளிகள் என்றும் அவர்கள் நம்முடைய நேச சக்திகள் என்றும் அவர்களது காட்டுத்தனமான சுரண்டலுக்கு வக்காலத்து வாங்கி இக்கட்சிகள் பேசுவதுண்டு.


ஆனால் இந்திய முதலாளிகளோ தங்கள் மூலதன வலுவால்  உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கிறார்கள். டாட்டாவும் , அம்பானியும் ,அசிம் பிரேம்ஜியும் , இன்போசிசும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள ருசி ஊறுகாய்  நிறுவனம் கூட அயல்நாடுகளில் பல நிறுவனங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று வர்த்தக சந்தை உலகம் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளதாலும், தாராளமயம்  , தனியார்மயத்தினாலும் அதிகம் பயனடைந்தது இந்திய முதலாளிகள் தான் என்பதற்கு ஆதாரமாக இப்போது எத்தியோப்பியாவிலும் ,பல ஆப்பிரிக்க நாடுகளிலும் , சிறிய தீவுகளிலும்  பல ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர்.

உலகமயத்திற்கு பிறகு தான் விப்ரோ ,இன்போசிஸ், டாட்டா , அம்பானி போன்றவர்களின் சொத்துமதிப்பு டிரிலியன்களில் எகிறியது . இவ்வாறு உலகம் முழுவதும்  இந்திய முதலாளிகள் சொத்துகள் வாங்கி குவிப்பதும் , பல நிறுவனங்களை போட்டி போட்டுக்கொண்டு விலைக்கு வாங்குவதும் அதற்காகவே மன்மோகன் சிங் உலகம் முழுவதும் பறந்து பறந்து ஒப்பந்தங்கள் போடுவதும், நாம் தினம்தோறும் கண்டுவரும் காட்சியாகும் . தற்போது ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்னவாக இருக்கும் என்றால் முதலாளி, தொழிலாளி என்று இரண்டு   வர்க்கங்களாக  பிரிந்து கிடக்கும் இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி சோஷலிச  புரட்சியின் மூலம் சோஷலிச அரசை இங்கு நிர்மாணிப்பதாகவே இருக்கும்.

தொழிற்புரட்சிக்கு பிறகு அதிகமான உற்பத்திக்கு சந்தை தேட கிளம்பிய பிரிட்டிஷ் முதலாளிகளின் பாணியிலையே ஆப்பிரிக்க நாடுகளில் நிலவேட்டைக்கு கிளம்பியுள்ளனர் இந்திய முதலாளிகள்.
அதற்கான ஆதரங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்