திங்கள், 30 மே, 2011

அரசின் அலட்சியத்தால் புளியந்தோப்பில் ஏழைகளின் குடிசைகளை தின்று தீர்த்தது தீ


சென்னை புளியந்தோப்பில் பேசன் பிரிட்ஜ் அருகே புதிதாக வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை மாற்று ஏற்பாடாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  கேசவ் பிள்ளை பார்க்கில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.  29 .05 .2011  அன்று மதியம் 1.30  மணியளவில் ஒரு குடிசையில் பற்றிய தீ அருகில் உள்ள அனைத்து குடிசைகளுக்கும் பரவி அனைத்து  குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. ஏழைகள் கஷ்டப்பட்டு சேர்த்து வைந்திருந்த சிறு தொகைகளும், உடைகளும் , சான்றிதழ்களும் பண்ட பாத்திரங்களும் ஒன்றுமே மிச்சம் இல்லாமல் எரிந்து சாம்பலாகி விட்டது.

 இது போன்ற நெருக்கமாக அமைந்திருக்கும் குடிசைப்பகுதிகளுக்கு பதிலாக மாற்று குடியிருப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும், அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் , விரைவாக குடிசை மாற்று வாரிய வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்  என்று பல கோரிக்கைகளை ஏற்கனவே அந்த குடிசை வாழ் , மக்கள் அரசுக்கு வைத்திருந்தனர். ஆனால் அரசு அந்த மக்களின் குறைகளை காது கொடுத்து கூட கேட்கவில்லை.

குடிசை மாற்றுவாரிய அடுக்கு மாடிக்குடியிருப்புகள் அனைத்தும்  தரம் குறைந்தவையாகவே அரசு கட்டிவருகிறது என்பது மற்றொரு கொடுமை .  அந்த மக்கள் அனைவரும் கட்டிட தொழில் மீன்பிடித்தல்  போன்ற அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களின் சிறு சம்பாத்தியத்தில் சேர்த்துவைத்திருந்த  அனைத்தையும்    இப்போது  அரசின் அலட்சியத்தால்  இழந்து விட்டு அந்த மக்கள்  இன்று கட்டிய துணியோடு தெருவில் நிற்கின்றனர். அவர்களுக்கு அவசர உதவிகளும் முறையாக இதுவரை வழங்கப்பட வில்லை , அந்த மக்களுக்கு  மாற்று வீடுகளை உரிய இழப்பீட்டுடன்   அரசு உடனடியாக வழங்க  வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்