சனி, 21 மே, 2011

செய் அல்லது செத்துமடி - கரூர் ஆட்சித்தலைவருக்கு விஷத்தை அனுப்பிய சமூக ஆர்வலர்


கரூர் மாவட்டத்தை சேர்ந்த சே.பெ. வாசுதேவன் 'புதிய தீர்ப்பு' என்ற மாத இதழை நடத்தி வருகிறார். இவர் கரூர் மாவட்ட மின்சார வாரிய நிர்வாகம் லஞ்ச ஊழலில் மூழ்கி போயுள்ளதை அம்பலப்படுத்துவதற்காக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ‘லஞ்சம் கொடுப்பதற்கா பிச்சை எடுக்கும் போராட்டத்தை’ கரூர் மின்சார வாரிய மேற்பார்வை  பொறியாளர்  அலுவலகம் முன்பு  21.02.2011  அன்று நடத்தி கைதானவர் . இவ்வாறு லஞ்சம் , ஊழல் ,அரசு இயந்திரத்தின் செயலற்ற தன்மை ஆகியவற்றை நூதன போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி வருபவர்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலங்கங்களில்மக்கள் குறை தீர்க்கும் முகாம்  என்ற நிகழ்வானது ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பசுமை பாரதம் என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்து வனங்களை உருவாக்குவது, சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது , மாவட்டத்தில் சட்ட விரோதமாக விலையுயர்ந்த கனிமங்கள் தோண்டுதல் மற்றும் பதுக்கி வைத்திருப்பதை நெறிப்படுத்துவது , கடவூர் வட்டாட்சியரகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது, தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பபள்ளியருகில் வேகதடை அமைப்பது, தரகம்பட்டியில் நூலக கட்டிடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது அதை செப்பனிடுவது ,தரகம்பட்டியில் தானியங்கி பணம் பெரும் இயந்திரம்(ATM) நிறுவுவது, போன்ற பல்வேறு ஏழை மக்களின் ன்றாட வாழ்வோடு சம்பத்தப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து மனுக்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுக்கப்பட்டும்மக்கள் குறை தீர்க்கும் முகாமில் புகார் தெரிவித்தும் அதன் மீது ஒரு சிறு நடவடிக்கை கூட துவங்கபட வில்லை.

இவ்வாறு குறை தீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள் நேரடியாக குப்பை தொட்டிக்கு தான் செல்கின்றன என்றும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சி தலைவரின் கடமை என்றும்  உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியும் தரப்பட்ட மனுவின் மீதும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.இப்படி ஒவ்வொரு நாளும் பசி பட்டினியில் வாழும் உழைக்கும் ஏழை மக்களின் உணர்வுகளை உதசினப்படுதுவதற்கு எதற்கு ஒரு ஆட்சி தலைவர் பதவி, இவ்வாறு செயல்படுவது கடினம் என்றால் ராஜினாமா செய்யுங்கள்,அதுவும் கடினமானது என்றால் அக்கடிதத்துடன் அனுப்பட்டுள்ள பூச்சி மருந்தினை அருந்தி  ஒட்டுமொத்த சமுதாய நலன்களுக்காக உயிரை போக்கி கொள்ளுங்கள் என்றும் , இவ்வாறு அனுப்புவது குற்றம் என்றால் என்மீது வழக்கு தொடருங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டு அத்துடன் 100  மிலி பூச்சிக்கொல்லி மருந்தையும்  இணைத்து அனுப்பியுள்ளார் சே.பெ. வாசுதேவன். ஆனால் இந்த கடிதத்திற்கும் எந்த பதிலும் இதுவரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து வரவில்லை .

இவ்வாறு எத்தனை தான் நூதனப்போராட்டகளை நடத்தினாலும் நமது அதிகாரிகளுக்கு உரைக்கவா போகிறது. அவர்கள் அந்த பதவிக்கு வரும் போதே    மனசாட்சியை அடகு வைத்துவிட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்றல்லவா தீர்மானித்து விட்டு வருகிறார்கள். அரிதிலும் அரிதாக  ஏழைமக்கள் மீது கரிசனத்தோடு  பணியாற்றும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் ஊழல் அரசியல் வாதிகளால்   பந்தாடப்படுகிறார்கள்  என்பதுதானே இங்கு நிதர்சனமாக இருக்கிறது .

இது போன்ற நூதனப்போராட்டங்கள் மூலம் அரசு இயந்திரத்தின் அசல் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் செ.பெ.வாசுதேவனின் இந்த போராட்டகுணத்தை பாராட்டும் அதேநேரம் சமூக மாற்றம் தான் ஒரே ர்வு என்பதை உணர்ந்து , சமூக மாற்றப்பாதையில் வலிமையான மக்கள் திரள் இயக்கங்களை கட்டவும், வர்க்கபேதமற்ற சமுதாயம் மலர போராட முன்வருமாறு   அனைவரையும் இயக்கம் அரை கூவி அழைக்கிறது.
தீ
1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்