புதன், 19 ஜனவரி, 2011

பாரதி விருது தன்னை கவுரவித்து கொண்டுள்ளது



எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழக எழுத்துலகில் ஒரு அசைக்க முடியாத சிங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல. மன்னர்களையும் , சொத்துடையவனையும் பாடிகொண்டிருந்த தமிழ் எழுத்துலகில் பாரதி என்ற எழுத்து புயல் புகுந்து புளிதியை கிளப்பியது அவரின் எழுத்து இந்தியர்களுக்கு எழுச்சி உட்டியது அவரின் கவிதை வரிகள் வெள்ளையர்களை விரட்டி அடித்தது. அதே காலத்தில் வாழ்ந்த புதுமை பித்தன் சிறுகதை உலகத்தில் ஒரே பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். பாரதியும் , புதுமைபித்தனும் சேர்ந்த கலவையாக ஜெயகாந்தன் இருந்தார். அவரிடம் இருந்த தெளிவு ,துணிவு , நேர்த்தியான மொழிநடை , கம்பீரம் அனைத்தையும் பார்த்த வாசகர்கள் பாரதி தான் மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக கருதி பூரித்து  போயினர் . பேனா எனும் சவுக்கால் பழமைகளை , பச்சோந்தி  தனத்தை, முதலாளித்துவத்தை , விரட்டி விரட்டி அடித்தார் . பல அற்புத நாவல்களை எழுதினார் , சிறுகதைகள் , கட்டுரைகள் என்று அவர் தொடாத இலக்கியமே கிடையாது எனலாம்.

ஒரு நல்ல இலக்கியவாதி ஜெயகாந்தன் பாதிப்பு இல்லாமல் இருப்பாரேயானால் அவரின் படைப்பு கண்டிப்பாக சந்தேகத்திற்கு உட்பட்டது. உன்னைப்போல் ஒருவன் , யாருக்காக அழுதான் போன்ற படங்கள் அவரின் புகழ் மிக்க அவரே இயக்கிய படைப்புகள் ஆகும். அவர் பெற்ற விருதுகள் சாகித்ய அகாதெமி விருது , 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது ஆகியவைகள் தம்மை பெருமை படுத்தி கொண்டுள்ளன. இந்த ஆண்டு தான் பாரதி விருது ஒரு வாழும் பாரதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பது பெருமைக்கு உரியது. ஜெயகாந்தன் உழைக்கும் மக்களைப்பற்றி எழுதினார் , அவர்களின் போராட்டங்களை ஆதரித்து எழுதினார், இன்னும் சொல்லப்போனால் அவர்களை போராட தூண்டினார் முதலாளித்துவத்துக்கு சானை பிடித்துகொண்டிரிந்த கூட்டத்தை ஒற்றை ஆளாய் விரட்டி அடித்தார் அவரின் அடியொற்றி பல இலக்கியவாதிகள் தமிழ் எழுத்துலகில் வர வேண்டும் என்பது நமது அடக்கவொன்னாத அவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்