சனி, 8 ஜனவரி, 2011

எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பும் பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறையும்

இன்று நமக்கு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் தண்டிக்கப்படக்கூடிய அளவிற்கு குற்றவாளிகளே  ஆவார்கள்.  அந்த  அளவிற்கு  நமது  ஜனநாயகம்  சீரழிந்தது   சின்னாபின்னமாகியுள்ளது இன்றைய  எம்.எல்.ஏக்களும் ,எம்.பிக்களும் செய்யாத குற்றங்களே இல்லை எனலாம். இது எங்கோ குக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து  தலைவர் முதல் இன்றைய குடியரசு தலைவர் வரையிலும் எதாவது ஒரு குற்றசாட்டு இல்லாதவர்களே இல்லை எனலாம்.மோகன்தாஸ் காந்தி சொன்னது  போல எந்த பெண்ணும் இன்னும் இரவில் தனியாக வெளியில் செல்ல முடியாத நிலையே உள்ளது. அதுவும் அரசியல் வாதிகள் வெறிபிடித்த காமுகர்களாக எந்த பெண்ணையும் எந்த பாலியல் வன்முறையை ஏவுவதற்கு தயாராக உள்ளனர். இதில் எந்த கட்சிகளுக்கும் விதிவிலக்கில்லை என்பதே உண்மை ஆகும். பிகாரின் புர்னியா தொகுதியில் பி.ஜே.பியை சேர்ந்த எம்.எல்.ஏ ரூபம் பாதக் என்ற முனைவர்  பட்டம் பெற்ற   ஆசிரியரை  கற்பழித்துள்ளார்  அத்தோடு தொடர்ந்து  அவர்  மீது தனது  பதவியை கொண்டு மிரட்டி   தொடர்ந்து  பாலியல் வன்முறையை ஏவி உள்ளார். ரூபம் பாதக் காவல் துறை முதல் முதல்வர் வரையிலும் புகார் கொடுத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தானே அந்த தண்டனையை கொடுக்க முன்வந்தார் அந்த வீரபெண்மனியின்  செயல் இது போன்ற எந்த பாவத்தையும் துணிந்து  செய்யும் அராஜக பேர்வழிகளுக்கு ஒரு பாடமாக அமையும்  ஆனால்  அரசோ எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக  கூறியுள்ளது. அதன் அர்த்தம் இனியும் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்படும்,ஆனால் எம்.எல்.ஏக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தம் ஆகும். இது போன்ற பெண்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்