வியாழன், 13 ஜனவரி, 2011

இந்த பொங்கல் பண்டிகையாவது உழைக்கும் மக்களுக்கானதாக மலர வேண்டும்இந்த முதலாளிகளின் ஆட்சியில் இந்த அரசு உழைக்கும் மக்களை கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கும் என்று நம்புவது அறிவீனமானதாகவே இருக்கும். பொதுவாக இன்றைக்கு விவசாயம் என்பது பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் தொழிலாகவே மாறி போய்விட்டது .சிறுவிவசாயிகள் பழமையான உற்பத்தி கருவிகளை கொண்டு உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அவர்கள் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே இருப்பதால் கண்டிப்பாக லாபம் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கூட்டு பண்ணை விவசாயம் என்பதாகவே இருக்கமுடியும் . விவசாயிகளை    இடைத்தரகர்களால் கடுமையாக சுரண்டப்படுவதை  இந்த அரசு கண்டு கொள்வதே இல்லை ஏனெனில் அவர்களின் ஆட்சி தானே இங்கு நடைபெறுகிறது. ஊகவாணிபம் , தரகர்கள் இவர்களின் பதுக்கல் மற்றும் அதீதா லாபம் காரணமாக தான் விலைவாசி விண்ணை தொடுகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும். இதிலிருந்து விடுபடுவதற்கு சோசலிசம் தான் ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தமிழர் திருநாள் , பொங்கல் , உழவர்தினம் ,திருவள்ளுவர் தின வாழ்த்துகளை இயக்கம் தெரிவித்து கொள்கிறது

1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்