கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிரேக்க அரசு கடும் கடன் நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அங்குள்ள உழைக்கும் மக்கள் அடுத்த நாளுக்கான உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக கடுமையான தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐஎம்எப் தரும் கடனை மட்டும் வைத்து அந்த அரசு நீடித்திருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நெருக்கடி நிலையில் பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார். இது தொடர்ச்சியான கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெரும் வகையில் தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அமையவுள்ள எந்த முதலாளித்துவ அரசும் அந்த மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமையுமேயல்லாமல் முற்றியுள்ள நெருக்கடிக்கு எந்த தீர்வையும் தராது. கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் ஒரு வலுவான சோஷலிச அரசை நிறுவும் வரை தொடரும் என்பது திண்ணம்.
செவ்வாய், 8 நவம்பர், 2011
சனி, 5 நவம்பர், 2011
வரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்
ஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி மக்கள் உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917. ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன் ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.
லேபிள்கள்:
இயக்கம்
வியாழன், 3 நவம்பர், 2011
ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்
2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும். யாதவர்கள் போன்ற பிற்பட்ட வகுப்பினரின் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உ.பி. மாநிலம் பிளவுபடாமல் இருந்தவரை ச.ஈ. திவாரி போன்ற பிராமண வகுப்பûச் சார்ந்த தலைவர்களினால் காங்கிரஸிற்கு பிராமணர்களின் வாக்குகள் கிடைத்து வந்தன; முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் விடுதலைக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸþக்கே கிடைத்து வந்தது. பி.எஸ்.பி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி காங்கிரûஸ விட்டு நகரத் தொடங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததாலும், அது உரிய நடவடிக்கை எடுக்காமல் மசூதி இடிக்கப்பட்ட அனுமதித்தாலும் முஸ்லீம் வாக்கு வங்கியும் காங்கிரஸþக்கு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஜாதியைப் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் இளமையையும், சுறுசுறுப்பையும் வைத்தே தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.பி. கட்சி மிக மிக வித்தியாசமான விதத்தில் தனது பிற ஜாதிகளுடனான கூட்டணியை அமைத்தது. அம்மாநிலத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அதிசயத்தை அரங்கேற்றியுள்ளது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
மே 2011.மாற்றுக்கருத்து
சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்
2007 மே மாத வெளியீடு
உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச் சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.
மேலும் படிக்க
லேபிள்கள்:
மாற்றுக்கருத்து,
மே 2007
செவ்வாய், 1 நவம்பர், 2011
தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ?
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
லேபிள்கள்:
இயக்கம்
வெள்ளி, 28 அக்டோபர், 2011
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]
லேபிள்கள்:
மு.சிவலிங்கம்
பாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் - நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்
23 .10 .2011, ஞாயிற்று கிழமை அன்று நாகர்கோவில் , தக்கலை - லைசியம் பள்ளி வளாகத்தில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. தோழர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த படிப்பு வட்டத்தில் சென்ற வகுப்பில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்' தொடர்ச்சி தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. சிந்தனை என்பது சமூகத்தில் இருந்து கிடைப்பது , தொழிலாளி வர்க்கம் உருவாகும் வரை தத்துவம் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்தது .
லேபிள்கள்:
தோழர்.மகிழ்ச்சி
வெள்ளி, 21 அக்டோபர், 2011
சோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
தமிழாக்கம்: சிவலிங்கம்.மு
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
லேபிள்கள்:
சிவலிங்கம் .மு
வியாழன், 20 அக்டோபர், 2011
மார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான பூர்வமான , அதி உன்னதமான சித்தாந்தம் ஆகும்.
- தோழர். சிப்தாஸ் கோஷ்
மார்க்சிசம் - லெனினிசம் மட்டுமே ஒரே புரட்சிகரக் கருத்தியல். இக்காலக்கட்டத்தின் மிகவும் விஞ்ஞான பூர்வமான அதி உன்னத சித்தாந்தம் , அதனால் மட்டுமே முடமாகிப்போன இந்த முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மனிதனை விடுவித்து, மனிதனை மனிதன் சுரண்டுகிற அனைத்து வித சுரண்டல்களிருந்தும் விடுதலை பெற்ற , வர்க்க பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாமறிவோம். மேலும் ஒரு புரட்சிகரக் கருத்தியல், எப்போதுமே ஒரு உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தை உருவாக்குகிறது என்பதையும் நாமறிவோம். எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் தேவையான குறைந்தபட்ச கலாச்சார , அறநெறித் தரத்தை அடையாவிட்டால் புரட்சியை கட்டியமைப்பதற்கு சாத்தியம் இல்லை.
லேபிள்கள்:
தோழர்.சிப்தாஸ் கோஷ்
திங்கள், 17 அக்டோபர், 2011
'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்
எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ, மக்களை அநியாயமாக கொன்று குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட ) காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.
லேபிள்கள்:
இயக்கம்
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
அக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'
கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில் நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.
லேபிள்கள்:
தோழர். மகிழ்ச்சி
சனி, 15 அக்டோபர், 2011
உலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமே
மனித வரலாற்றில் இதுவரை தோன்றிய வர்க்கங்கள் யாவிலும் மிக உன்னதமான வர்க்கம் பாட்டாளி வர்க்கமேயாகும் என்று மார்க்ஸ் கூறினார். முதலாளித்துவ வர்க்கம் இக்கூற்றை ஏற்காது. சுரண்டல் , அடக்குமுறை கொண்ட வர்க்கம் , ஏமாற்றும் பொய்யும் வஞ்சகமும் சூதும் கொண்ட வர்க்கம் அது . விஞ்ஞான ரீதியான ஆய்வை அவ்வர்க்கம் கொண்டிருக்கவில்லை. தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஒன்றே அதன் குறிக்கோள்.
லேபிள்கள்:
குமரன் தொகுப்பு
விழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும் அமெரிக்க முதலாளித்துவ அரசு
அமெரிக்க முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது குண்டு போட்டு கொள்வதும், அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக்க பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . "ஒரு சதவிகிதமே உள்ள முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99 சதவிகித மக்களை வஞ்சிக்காதே" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.
லேபிள்கள்:
இயக்கம்
புதன், 12 அக்டோபர், 2011
வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டார்
பிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் , பல்வேறு பொது நல வழக்குகளை நடத்தி வருபவரும், சமூக இயக்கங்களில் பங்காற்றி வருபவருமான பிரசாந்த் பூசன் அவர்கள் இன்று (12 .10 .2011 ) உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அறையிலையே ஸ்ரீ ராம சேனா என்ற இந்து மத வெறிவாத அமைப்பை சேர்ந்த மதவெறியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள Armed Forces Special Powers Act நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார் . அவர் தெரிவித்த கருத்துகளுக்காக இந்து மத வெறிவாத அமைப்புகள் அவர் மீது பாசிச தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமை இல்லாத ஆபத்தான சூழ்நிலையையே இந்த ஆளும் முதலாளித்துவ அரசு பராமரித்து வருகிறது. மிகவும் பிரபலமான உச்ச நீதிமன்ற வழக்கறிங்கர் மீது உச்ச நீதிமன்றத்தில் வைத்தே தாக்குதலை அரங்கேற்றி உள்ள இந்து மத வெறிவாத அமைப்பை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 11 அக்டோபர், 2011
உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்
ஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெரும்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்









