இன்று சாதரணமாக ஏழை ,நடுத்தர குடும்பங்களை பணக்கார வர்க்கம் உழைப்பு சுரண்டலோடு, ஏழை , நடுத்தர மக்கள் தங்கள் உச்ச பட்ச லட்சியமாக கொண்டுள்ள ஒரு மாணமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும், நல்ல மண வாழ்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற இலட்சியங்கள் கூட இந்த பணக்கார ஓநாய்களின் பத்தாம் பசலித்தனமான மோசமான கலாச்சார கேடுகளுக்கு இரையாக்கும் கொடுஞ்செயலால் பல நடுத்தர குடும்பங்களின் ஆசைகள் , கனவுகளை குழி தோண்டி புதைத்து விட்டது.
இந்த பணக்கார வர்க்கத்திற்கு அப்பட்டமாக அதிகார வர்க்கமான காவல் துறை ஓநாய்கள் துணைபோவது , அரசியல்வாதிகளின் உற்ற நண்பனாக, இந்த பணக்கார வர்க்கம் இருப்பதும் இவர்களின் அனைத்து தவறுகளுக்கும் ஊக்கம் கொடுப்பதாகவே இருக்கிறது. ஒரு போலிஷ் ஸ்டேஷனில் ஒரு சாதாரன குடிமகன் எவ்வாறு நடத்தப்படுவான் பணக்காரன் எவ்வாறு மதிக்கபடுவான் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததேயாகும். இவ்வாறு படம் முழுவதும் சமூக அவலங்கள் பேசப்படுவதோடு இந்த வெறிநாய்களால் அந்த அமைதியான குடும்பத்தில் புயல் வீசுவதும் அதற்கு காரணமான அந்த வெறிநாய்களை அந்த குடும்பமே வேட்டையாடுவதும் மிகவும் சரியான பாதையே ஆகும். இது அந்த குடும்பத்திற்கு மட்டுமே உள்ள பிரச்னை அல்ல. இந்த சமூகம் முழுவதும் இது போல நம்மை போன்ற உழைக்கும் வர்க்கம் பலியாவதும் , இதற்கு காரணமானவர்களை தங்கள் ஒற்றுமையின்மையால் தப்பவிடுவதும் அன்றாட நடைமுறை ஆகும். இது போன்ற படங்கள் அதை பார்ப்பவர்களுக்கு சமூக விரோதிகளை அடையாளங்கண்டு அவர்களின் அராஜகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க உழைக்கும் வர்க்கங்களை துண்டுமானால் அது மிஷ்கின் போன்ற நல்ல சினிமா இயக்குனர்களுக்கு கிடைத்த வெற்றியேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக