மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் காவியத்தின் முதல் அத்தியாயம் தான் நம் கண் முன்னே காட்சியாக விரிகிறது. அந்த நாவலில் வரும் தாயின் வாழ்க்கையானது கிட்டத்தட்ட ஒரு நரகத்தின் வாசலை தான் நமக்கு காட்டும் அந்த அளவிற்கு தொழிலாளிகளின் இரத்தம் முதலாளிகளால் உறிஞ்சப்படும்.அதை போலதான் இன்றும் நம்முடிய வாழ்க்கை பேரவலமாக உள்ளது இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் அது உலகின் வல்லரசாக உருமாறி வருகிறது என்றும் அது தெற்காசியாவின் மிகப்பெரிய தாதா என்றும் அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா கூறுகிறார். நம்முடிய பாரதப் பிரதமர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்று அகிலமெல்லாம் போற்றப்படுகிறார். ஆனாலும் விண்ணைமுட்டும் அளவிற்கு 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பங்களா ஒருவருக்குமாகவும் வெறும் தார்ப்பாயை மட்டும் மேற்கூரையாக கொண்டு வாழக்கூடிய பலகோடி மக்கள் ஒருபுறமாகவும் இந்த இந்தியா இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது . ரத்தன் டாட்டா விடியோ டேப் விவகாரத்தில் உடனடியாக அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது ஆனால் பல்லாயிரக்கானக்கான மக்கள் எந்த நீதியும் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.
எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வாழ்க்கையை களிக்கும் சிலருக்காக , 18 மணிநேரம் வேலை செய்யும் பல்லாயிரக்கணகான தொழிலாளிகள் ஒருவேளை நல்ல
எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வாழ்க்கையை களிக்கும் சிலருக்காக , 18 மணிநேரம் வேலை செய்யும் பல்லாயிரக்கணகான தொழிலாளிகள் ஒருவேளை நல்ல
உணவு கிடைக்காமல் தவிக்கின்றர். தினம் ஒரு ஊழல் காட்சிகள் அரங்கேறுகின்றன , 1 .76 லட்சம் கோடி ஊழல் இன்று சாதரணமாக தெரியும் அளவிற்கு மக்களுக்கு பழகிப்போய்விட்டது . விலைவாசி உச்சியில் ஏறி நிற்கிறது சாதாரண மக்கள் குழந்தைகளுக்கு கூட போதிய பால் போன்ற உணவு பொருள்கள் வாங்க முடியாமல் மக்கள் அல்லாடுகிறார்கள் . உழைக்கும் மக்களுக்கு கோவணம் கூட மிச்சம் இருக்குமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு கடுமையான சுரண்டல் அரங்கேறுகிறது. ஆனால் இதே நாட்டில் தான் ரோல்ஸ் ராயல் காரும் , 5 ஸ்டார் ஹோட்டல்களும் நள்ளிரவு பார்டிகளுமாக சிலருக்கு பொழுது களிகிறது. ஆனால் பலருக்கு நகரத்தில் குடும்பம் நடத்தினால் செலவு அதிகம் ஆகும் என்பதால் திருமணம் முடித்தும் மாதத்திற்கு ஒரு முறை தான் தனது குடும்ப நபர்களை பார்க்க முடிகிறது, என்பது நாம் வாழும் அவலமான வாழ்க்கைக்கு எடுத்துகாட்டு. அந்த அளவிற்கு இங்கு முதலாளித்துவம் மிகப்பெரிய அளவிற்கு பல கோடி மக்களின் துயரத்திற்கு காரனமாகியதும் அல்லாமல் வெட்கமில்லாமல் தன்னை தானே பாராட்டி கொண்டு பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது . இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் முதலாளிகளை மூடி பாதுகாக்கும் வேலையை பல காலமாக செய்து வருகின்றன. முதலாளித்துவ கட்சிகள் யார் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது என்பதில் போட்டி போட்டுகொண்டு எந்த நாட்டிலும் காண முடியாத அளவிற்கு அருவருக்கத்தக்க காட்சிகளை தினமும் அரகேற்றிக்கொண்டு வருகின்றன என்றால் இன்னொருபுறமோ தொழிலார்களின் தோழன் என்று கூறிக்கொண்டு அவர்களை ஒப்புக்கு அணிதிரட்டிகொண்டும் நாங்கள் தான் இந்தியாவின் உண்மையான கம்யுனிஸ்ட் கட்சி என்று கூறிக்கொண்டு CPI , CPI(M), CPI (ML) , SUCI(C) , எண்ணமுடியாத அளவிற்கு பல மாவோயிஸ்ட் குழுக்கள் என்று பல கட்சிகள், அமைப்புகள் இருந்தாலும் அவை பாராளமன்ற அரசியலில் ஊறி போய் சிலவும் சரியான தத்துவ வழிநடத்தல் இல்லாமல் திருத்தல்வாத கட்சிகள் பலவுமாக உழைக்கும் மக்களை அணிதிரட்டி அவர்களை கொண்டு சமூக மாற்றத்தை நிகழ்த்த வல்ல சோசலிசத்தை கொண்டு வரக்கூடிய எந்த அமைப்பும் இன்று இல்லை என்றே கூறலாம். இவை அனைத்தும் ஒரு பொய்யான எதிரியை உருவாக்கி விட்டு அதை நோக்கி மக்களை திசை திருப்பும் திருத்தல் வாத சந்தர்ப்ப வாத அரசியலை செய்து கொண்டு உள்ளன. இந்த அவலம் நிரைந்த முதலாளித்துவம் இப்படியே நீடிக்க எந்த யோக்கியதையும் இல்லாமல் ஆகிவிட்டது என்பதுவே இங்கு நிலவும் உண்மையாகும். பாட்டாளி வர்க்கத்தை ஓரணியில் திரட்டி சமரச சமூகத்தை அமைக்கும் தகுதியுடைய எந்த கட்சியும் இல்லாத நிலையில் மதுரையில் 19 , 20 அன்று அமைப்பு மாநாடும் 21 அன்று பொதுக்கூட்டமும் நடத்தி முறையான அமைப்பை மதுரையில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. கம்யூனிஸ்ட் செயல்பாட்டு பொதுமேடை (CWP ) தனது 15 ஆண்டுகளுக்கு மேலான கடும் முயற்சிக்கு பிறகு தனது செயல்பாடுகளை முறையாக அமைப்பாக துவங்கியது அந்த அமைப்பின் மத்திய குழுவின் அறிமுக கூட்டமாகவும் அது அமைந்தது. பொது கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் சிவகுமார் தலைமை ஏற்றார் . முதலில் புரட்சிகர முழகங்களை தோழர்கள் எழுப்பினர் , CWP யின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரரும் , RSP யில் இருந்து பிரிந்து வந்து தோழர் சிப்தாஸ் கோஷுடன் இணைந்து SUCIயை உருவாக்கியவரும் , அந்த அமைப்பை செப்பனிட்டு முன்னெடுத்து சென்றவரும் , அந்த அமைப்பில் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்தவரும் , பீகார் மாநிலத்தின் செயலாளராக(SUCI) பொறுப்பு வகித்த வரும் சிப்தாஸ் கோசின் மறைவிற்கு பின்பு ஏற்பட்ட திருத்தல்வாத தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து அந்த அமைப்பை காக்க பாடுபட்டவரும் , நெருக்கடி நிலையின் போது சிறையில் இருந்தவரும் SUCI ஜனநாயக தன்மையை இழந்த போது அதில் நீடித்திருக்க முடியாமல் அந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு ஒரு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சியை கட்டியமைக்க
உறுதிபூண்டு 15 வருடங்களாக பழைய SUCI தோழர்களை ஒருகினைத்தும் புதிய தோழர்களை அரசியல் படுத்தியும் கம்யூனிஸ்ட் வொர்கர்ஸ் பிளாட்பாரம்(CWP ) அமைப்பை துவங்க உறுதுணையாகவும் ஒரு உயர்ந்த தலைவராகவும் வழிகாட்டியாகவும் உள்ளவரும் CWP யின் தலைவருமான தோழர். சங்கர் சிங் தலைமையில் தமிழகத்தில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கவும் இந்திய அளவில் ஒரு பறந்து பட்ட உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்கவும் SUCIயில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முழுமூச்சாய் சங்கர் சிங்க்கு தோல் கொடுத்தும் ஒரு மூத்த தலைவராக தமிழக அளவில் தனது எழுத்தாற்றலால் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு முழுமையான மார்க்சியவாதியுமான, CWPக்கு ஒரு முழு உரு கொடுத்தவரும் இளம் தோழர்களுக்கு வழிகாட்டியுமாக இருப்பவருமான தோழர். ஆனந்தன் , சிப்தாஸ் கோஷின் தம்பியும் , சங்கர் சிங்க்கு உற்ற தோழனுமாகிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் மேற்கு வங்கத்தை சார்ந்த தோழர். பெட்டிக்கோஷ் , SUCIயில் ஒரு மாபெரும் போராட்ட வீரராக இருந்தவரும் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்தியவருமான மூத்த தோழர் . கியான் சிங் ஆகியோர்களை முறையே தெற்கு ,கிழக்கு ,வடக்கு பகுதி பொது செயலாளர்களாகவும் கொண்டு கட்சியானது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு பரத்துபட்ட பாட்டாளி வர்க்கத்தை தன்னுள் இழுத்து கொண்டு சோசலிசத்தை இந்தியாவில் கொண்டுவரவல்ல புரட்சிகர கட்சியாக வரலாற்றில் தனது கணக்கை துவங்கி உள்ளது கம்யூனிஸ்ட் செயல்பாட்டு பொதுமேடை (CWP). இந்த இயக்கம் மென்மேலும் வெற்றிபெற இயக்கம் தனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக