மனிதஉரிமை ஆர்வலரும் , சல்வா ஜூடும் அநீதிகளுக்கு எதிராக போர்குரல் கொடுத்தவரும் மருத்துவருமான திரு.பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை கொடுத்ததன் மூலம் இந்திய நீதித்துறையின் அசல் முகம் அம்பலமாகி உள்ளது இந்தியாவில் ஊழல் செய்யாத மந்திரிகளும், லஞ்சம் வாங்காத அதிகாரிகளும் இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு இங்கு ஊழலானது தனது அகன்ற எல்லையை விரித்து இந்தியாவை ஆட்டி படைக்கிறது. ஆனாலும் இன்று வரை எந்த அரசியல் வாதிகளுமே ஊழலுக்காக தண்டிக்கபட்டு சிறை சென்றதில்லை என்ற அளவிற்கு ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு தரும் களமாக இந்திய நீதித்துறை மாறியுள்ளது என்றால் அது மிகை இல்லை. அப்படிப்பட்ட நீதித்துறையிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
இங்கு நடந்து வரும் ஒவ்வொரு சம்பவமும் இந்திய அரசு ஒரு அப்பட்டமான முதலாளித்துவ அரசு இது முதலாளிகளின் நலனை மட்டும் காபந்து செய்து கொண்டு தொழிலாளி வர்க்கத்தை மட்டும் அல்ல தொழிலாளிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அறிவி ஜீவிகளையும் கடுமையாக ஒடுக்கி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த அரசின் அங்கமாக மாறி ஊழலின் உற்றுக்கண்ணாக இருக்கும் நீதி துறையிடம் நாம் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பது அப்பட்டமான உண்மை ஆகும். நாம் அனைவரும் ஒருகிணைந்து டாக்டர் . பினாயக் சென்னுக்கு ஆதராவாக குரல் கொடுப்பது நமது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக