வியாழன், 9 டிசம்பர், 2010

இயக்கம் என்பது உயிரின் அடையாளம்!


இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
இயக்கம் நின்றுபோனால்...
உயிர் நின்றுபோனது என்று பொருள்.

உலகம் இயங்குகிறது.
ஆகு பெயரில் மட்டும் அல்ல.
உலகமும் இயங்குகிறது.
உலகத்து மக்களும் இயங்குகிறார்கள்.
பிரபஞ்சம் அனைத்தும் இயங்குகிறது.
பிரபஞ்சத்தில் அனைத்தும் இயங்குகின்றன‍-
தனித்தனியாக அல்ல‍
ஒன்றையொன்று சார்ந்து...
ஒன்றுடன் ஒன்று இணைந்து...

நாம் மட்டும் ஏன்...
தனியாக,
தனியொரு தீவாக‌-
இயற்கைக்குப் புறம்பாக,
இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
உண்டு, உறங்கி,
உடுத்து, மகிழ்ந்து
இனத்தைப் பெருக்கிவிட்டுப் போவது அல்ல இயக்கம்.

சக மனிதரோடு கை கோர்த்து
உலகத்தை
முன்னோக்கி-
முன்னைவிட மேலான ஒன்றை நோக்கி
நகர்த்திவிட்டுப் போவதே இயக்கம்.

வாருங்கள் நண்பர்களே!
ஊர் கூடித்தேர் இழுப்போம்.
இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.

3 கருத்துகள்:

  1. சிறந்த பதிவு வாழ்வின் நோக்கத்தை உணர்த்துகிறது தோழர்

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு வாழ்வின் நோக்கத்தை உணர்த்துகிறது தோழர்.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்