சனி, 19 மார்ச், 2011

சென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர்கள்

வெளிமாநிலங்களில் இருந்து வந்து குறைவான கூலிக்கு தரகர்கள் மூலம் வேலைக்கு கூட்டிவரப்படும், கட்டிட தொழிலாளர்கள் இங்கு பல அடுக்குமாடிகட்டிடங்களில் மிகவும் அடிமட்ட கூலிக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சுகாதாரமான தாங்கும் வசதி செய்து தரப்படுவதில்லை. கால நேரம் பார்க்காமல் வேலை செய்யும் இவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பளமும் தருவதில்லை.விபத்து நடந்து உயிர் இழந்தாலும் இழப்பீடு இவர்களுக்கு  இல்லை. இதுபோன்ற பாதிக்கப்படும் தொழிலார்களை  
அணிதிரட்டி அவர்களுக்கு நியாயமான  கூலியை வாங்கி தருவோம். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை ஒங்க செய்வோம். 

வெள்ளி, 18 மார்ச், 2011

கூட்டணி கூத்துக்கள் யாருக்காக?

தேர்தலில் கூட்டணி சேரும் கட்சிகள் முன்பெல்லாம்உள்ளே  ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் வெளியே எதையும்  காட்டிக்கொள்ளாமல் "நண்பெண்டா " என்று உலா வரும். தற்போது மக்களிடம் அனைத்து கட்சிகளுமே தனது சுயமதிப்பை இழந்து விட்டு பணம் பண்ணுவதே அரசியல் என்றாகிவிட்ட இந்த சூழலில் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் எந்த முகமூடியையும்   போட்டுக்கொள்வதில்லை.தி.மு.க., அதி,மு.க என்று இரண்டு கட்சிகளிடமும் பேச்சு நடத்துவது,யாரிடம் அதிக தொகுதிகள் , மற்றும் பணபேரம் படிகிறதோ அவர்களோடு கூட்டணி போடுவது, கூட்டணியில் அதிக தொகுதி பெற  அனைத்து உபாயங்களையும்கையாளுவது. அரசியல் அங்கீகாரத்திற்காக சில தொகுதிகளில் வெல்வது, கூட்டணி கட்சியை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்ப்பது என்று இந்த அரசியல்  முழுவதுமே கேடுகெட்டதாகி விட்டது.  இதனால் இந்த சமூகத்திற்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்றாகி விட்டது.நம்பியவர்களை கழுத்தறுப்பது, ஏமாற்றுவது என்பதே இந்த வியாபாரிகளின் தாரக மந்திரமாகி விட்டது.இந்த தேர்தலில் கூட்டணி பேச்சு வார்தையிலையே இது உறுதியாகிவிட்டது.
இதையெல்லாம் விட பெரிய கூத்துகள் தேர்தல் முடிந்த உடன் அரங்கேற இருக்கிறது, எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மிக பெரிய குதிரை பேரத்திற்கு தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். இந்த தேர்தல்முறைகள் மூலம் ஏதாவது சமூக மாற்றம் ஏற்படும் என்று யாரவது கருதுவார்கள் என்றால் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வியாழன், 17 மார்ச், 2011

"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"

                                                                                                              -  கருப்பன்.சித்தார்த்தன்

நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும்  வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டையாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து  நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின்     நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?

இன்று தமிழகத்தில் முப்பது,நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு.இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல்,குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு சிகிட்சை,தசை அமுகல் பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகள்.

வெட்டுக்கிளிகளை வேட்டையாட எப்படி வலை வீச வேண்டா! உயர்தட்டு,நடுத்தரவர்க்க மக்களுக்கு இந்த சிகிட்சை கிடைக்காமல் இல்லை. அவர்களிடம் பணம் இருக்கிறது, கிடைக்கிறது. இன்னும் அரசு மர்த்துவமனைகளுக்கே வந்து கொண்டிருக்கிற 35 சதவிகித மக்களுக்கு மட்டும் தான் இந்த சிகிட்சை கிடைக்காமல் 40  வருடங்களாய் மறுக்கப்பட்டு வருகிறது. ஏன் இப்படி?

50 சதவிகித மக்கள் அரசு மருத்துவ மனைகளை குப்பைத்தொட்டிகளாய் நினைத்து ஒதுக்கி விட்டார்கள். ஒரு 15 சதவிகித மக்கள் வங்கி சேமிப்பு,மற்றும் சொத்துகளை விற்றும் ,கடன்  வாங்கியும் தனியார் மருத்துவ மனைகளுக்கே செல்கிறார்கள். இந்த 65 சதவிகித   மக்களுக்கே மாத்திரை,மருந்துகள் விற்பதில் உள்நாட்டு , வெளிநாட்டு, பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு கிடைக்கும் லாபம்: ஒரு லட்சம் கோடி ரூபாய். இவர்களின்   ஒரே குறி; அரசு மருத்துவமனைகளுக்கே வந்து கொண்டிருக்கிற 35 சதவிகித நோயாளிகளில் உடனடியாக 15  சதவிகிதத்தினரை தனியார் மருத்துவ மனைகளுக்கே வரச்செய்ய வேண்டும்.தங்களின் மருந்து மாத்திரை வியாபாரம் இன்னும் சூடு பிடிக்க வேண்டும். இந்த கொள்ளையர்களின் ஆணைகளுக்கே ஏற்பவே நமது அரசுகள் மக்களுக்கான மருத்துவ சேவையை, குள்ளநரித்தனமாக எல்லா வழிகளிலும் கட்டண சேவையாக மாற்றி வருகின்றன.

உள்நாட்டு , வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நமது ஆட்சியாளர்கள்  நிரப்பப்பட்ட இருந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 60 : 5  என்கின்ற ரீதியில் 300  பேர்களுக்கு நேர்காணல் அழைப்பை அனுப்பிட தரகர் வேலை வாய்ப்பு அலுவலக்கதிலேயே தவம் கிடந்தார். டெல்லி தலைமை தேர்தல் கமிஷனர் அவரசரப்பட்டு கெடுத்து விட்டார். சரி போகட்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்புபடி 10  ஆயிரம் பேருக்கு ஒரு பிசியோ தேரப்பி ஸ்டாவது  தேவை. அனால் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிளுமாய் மொத்தம் 160 இயன்முறை மருத்துவர்களே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில் அரசு மருத்துவமனைகளில் 600  இயன்முறை மருத்துவர்கள்  நியமிக்கப்படுவார்கள்  என்று  அமைச்சர்  பன்னீர்  செல்வம் அறிவித்தார்.ஆனால் நியமிக்கப்பட்டிருப்போர் 15  பேர்கள் மட்டுமே .


இன்றைய நவீன காலத்தில் 40  வயத்திற்கு மேற்ப்பட்டோர் எல்லோருக்குமே எதோ ஒரு உடற்கோளாறு இதில் முக்கால் வாசிக்கொளாறுகளை  ஊசி  இல்லாமல்,  மருந்து , மாத்திரை  இல்லாமல்  தரக்கூடிய அபூர்வ மருந்துவ முறை இயன்முறை மருத்துவர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். தமிழகத்தின் 1562  ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மாவட்ட, தாலுகா, துணை சுகாதார நிலையங்கள் இவர்களின்  சேவைக்காக  ஏங்கிகொண்டும்  இருக்கின்றன.
 
மனித சமூகத்தையே  அரித்துக் கொண்டிருக்கிற நோய்களும் இருக்கின்றன.அதற்கான இயன்முரைமருத்துவர்களும் இருக்கின்றனர்.மருத்துவர் இன்றி தமிழகத்தில் 2000  மருத்துவமனைகளும், சேவை செய்ய வாய்ப்பின்றி இயன்முறை மருத்துவர்கள் 30 ஆயிரம் பேர்களும் ஏககாலத்தில் ஏங்கித் தவிப்பது என்னா பெரிய சாபக்கேடு? இதற்கு  ஒரே காரணம்; பன்னாட்டு மருந்து தயாரிப்பு கொள்ளையர்களின் லாப வெறிக்கு இவர்கள் தடையாக இருப்பது மட்டும் தான். இவர்கள் தான் ஆட்சியாளர்களோடு கள்ள உறவு கொண்ட இந்த இயன்முறை மருத்துவ முறையை முடக்கி வைத்திருக்கிறார்கள். மருந்தில்லா மருத்துவமான இயன்முறை மருத்துவம் இன்று மருந்து தயாரிப்பு ஏகபோக நிறுவன ஏகாதிபத்தியத்தின் கொடிய அடக்கு முறையை  சந்தித்துக் கொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் தடை செய்யப்படிருக்கிற கொடிய வலி மருந்துகள் பலதையும் விற்க தமிழக ஆட்சியாளர்கள் தாராளமாய் அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வலி மாத்திரைகளே இல்லாமல் குணப்படுத்தும்  வல்லமை  படைத்த இயன்முறை மருத்துவத்தையே தமிழக ஆட்சியாளர்கள்  தாராளமாய் அனுமமதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வலி மாத்திரைகளே இல்லாமல் குணப்படுத்தும் வல்லமை படைத்த இயன்முறை  மருத்துவத்தையே தமிழக ஆட்சியாளர்கள் கால்களில்  போட்டு  மிதித்து  நசுக்கிகொண்டிருக்கின்றார்கள்.
  
ஆதாரம் இன்றி இதை சொல்லவில்லை, தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது 18 .09 .2010 ல்  ஆனால் அந்த அரசாணை காகிதத்தில்தான் இருக்கிறது. ஏன்   18 மாதங்களாகியும் இக்கவுன்சில் அமைக்கப்படவில்லை? இந்த  கவுன்சில் அமைக்கப்பட்ருந்தால் இவர்கள் சுயமாக தொழில் செய்தாலும் எவருக்கும் பயப்பட தேவையில்லை. இவர்களை போலி மருத்துவர்கள் என்று சொல்லி யாரும் கைநீட்ட முடியாது . இவர்களுக்கு ஒரு கவுரவமும் பணி பாதுகாப்பும் கிடைத்திருக்கும். பணிக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் கிடைத்திருக்கும். மருந்து கம்பெனி முதலாளிகளின் விருப்படி மாற்று மருத்துவர்களை கூண்டில் அடைத்து குச்சியை விட்டு கண்களில் குத்திகொண்டிருப்பவர்கள் அரசாணை வெளியிடுவார்கள் .அதை அவர்களே குப்பைகூடையில் போடுவார்கள்.

 தமிழ் நாட்டில் தனியார் நடத்தும் 35 பிசியோதெரபிக் தனியார் கல்லூரிகளில் ஒன்றில் கூட பிசியோதெரபி முதுநிலை படித்தவர்கள் சட்டப்படியான எண்ணிக்கையில்  கிடையாது. இந்த 37 கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுக்கு 1200 பேர்கள் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்து விட்டு வந்து வேலை இல்ல பட்டாளத்தில் புதிதாக சேர்கிறார்கள். இன்னும் ஒரு வேடிக்கை தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் அரசின் சார்ப்பில்   6 புதிய பிசியோதெரபிக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அப்போதைய சுகாதார துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு செய்தது 2006 ல்  இன்னும் ஒரு புதிய கல்லூரி கூட தொடங்கிய பாடில்லை. இந்த அடக்கு முறையின் மற்றொரு அங்கம் தான்; இயன் முறை மருத்துவர்கள் தங்களின் பெயருக்கு முன்னாள் டாக்டர்கள் என்று போடக்கூடாது என்பதும், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு எவ்வளவு காலமோ அதே கால அளவுதான் பிசியோதெரபிக்கும், எம்.பி.பி.எஸ்.படிப்பிற்கு எந்த பாடத்திட்டமோ அதே பாடத்திட்டம் தான் பிசியோதெரபிக்கும். இருவரும் ஒரே பாடத்திட்டத்திற்கு அப்பால் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் படிப்பது; என்று மட்டும் தான். டாக்டர் என்று குறிப்பிட்ட அல்ல. ஆனால் அலோபதி படித்தவர்கள் மட்டும் டாக்டர்கள் என்று போட்டுக்கொள்ளலாம். பிசியோதேரப்பிஸ்டுக்கள் டாக்டர் என்று போடக்கூடாதாம். இதென்ன இரட்டை அளவுகோல்? முன்னவர்களால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கிறது ? ஆட்சியில் இருப்பவர்களுக்கு கமிஷன் கிடைக்கிறது என்பதால ? மருந்துகளின் வளர்ச்சி மட்டுமே மருத்துவத்துறையின் வளர்ச்சியா ? மருந்தில்லா மருத்துவமும் மருத்துவத்துறையின் வளர்ச்சிதான். இவர்கள் டாக்டர் என முற்சேர்க்கை இடாமல் இருப்பதனால் இவர்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அடித்தட்டு மக்கள் வரை. அதாவது ஏழை , எளிய கிராப்புற  மக்கள்வரை இச்சேவை நேரடியாக சென்றடைவதை தடுக்கவே இந்த சதித்திட்டம். இதன் மூலமும் மக்கள் நோயினால் பீடிக்கப்படுவதை தடுக்க அல்லது சரி  செய்ய உருவான ஒரு உன்னதமான மருத்துவ முறையை அழிக்க நினைக்கிறார்கள் மருந்துக்கொள்ளையர்கள். இவர்களின் கங்கானிகளாய் நமது துரோக                ஆட்சியாளர்கள்.

            மருந்து தயாரிப்புக் கொள்ளையர்களின் விருப்பம் பிசியோதெரபி கவுன்சில் அமைத்திடம் அரசானையில் கூட தலைக்காட்டியுள்ளது இப்படி; “ He shall not Prefix ‘Dr’ before his name ” இப்படி ஒரு அநியாய வரியை இதே தமிழக அரசு அலோபதி மருத்துவ கவுன்சிலுக்கும் போடணுமா வேண்டாமா? சித்த மருத்துவர்கள், ஆயூர்வேதா, ஓமியோபதி, கால்நடை மருத்துவர்கள், நாட்டு வைத்தியர்களும் கூட தங்கள் பெயருக்கு  முன்னால் டாக்டர்கள் என்று போட்டுக்கொள்ளலாம், போட்டுக்கொள்கிறார்கள்.  ஆனால் 4 ண்டு படிப்பும், 6 மாதப் பயிற்சியும் கொண்ட பிசியோதெரப்பிஸ்ட் படிப்பில் உடல் கூறியல், உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள், நுண்ணுயிரியல் , நோயியியல், பொது மருத்துவம், உயிர் வேதியியல், மசாஜ் செய்தல் உள்பட அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்கிற இயன்முறை மருத்துவர்கள் மட்டும் தங்கள் பெயருக்கு முன்பாக டாக்டர் என்று போடக்கூடாதாம். இப்படி அரசானையிவேயே விஷமம் தலைவிரித்தாடுகிறது எனில் அமெரிக்க மாமனின் கை எங்கே வரை நீண்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

            உயிர்கல்வித்துறை  ஜாம்பவான்களிடமேல்லாம் விசாரித்து விட்டோம்; "பி.எச்டி முடித்தவர்கள் மட்டும் தான் தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாம்"மருந்தில்லா மருத்துவமான பிசியோதேரபியை ஒழித்துக்கட்ட இவர்கள் தங்களை டாக்டர் என்று தங்களை அழைத்துக்கொள்வதை தடுக்க இந்த அபூர்வ மருத்துவ முறை அடித்தட்டு மக்களை சென்றடையாமல் தடுக்க நிறுத்திட IMA  - என்று அளை க்கப்படுகின்ற இந்திய மருத்துவர் சங்கமும், MCI  என்று கூறப்படுகின்ற இந்திய மருத்துவ கவுன்சிலும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
 இந்நிலையில் IAP  என்று கூறப்படுகின்ற அகில இந்திய இயன்முறை மருத்துவ ஜெனரல் கவுன்சிலின் தமிழ் நாட்டுக்கிளை என்ன செய்து கொண்டுக்கிறது.? எதுவுமே செய்யாமல் இருந்தால் கூடப்பரவாயில்லை. உரிமைகளுக்காகவும்,  வேலைக்காகவும் போரடிக்கொண்டுருக்கிற தமிழகத்தின் 30ஆயிரம் பிசியோதெரப்பிஸ்ட் படித்த இளைர்களை  எள்ளி  நகையாடிக்கொண்டிருகிறது.  23.11.2010  நேர்காணல் மூலமாய் பணி நியமனம்  பெற்றிருக்கிற  15   இளைர்களிடம்  ஒரு கோடியே 10  லட்ச  ரூபாய்  பணம்  பறித்ததும் இக்கும்பல் தான். மீதி 60  பேர்களிடம் வாங்கிய 2 .5  கோடி ரூபாய் தொகையை உடனே கொடுக்காமல் இழுத்தடித்ததும் இக்கும்பல் தான். கடைசி கடைசியாய் 60 பணியிடங்களுக்கு  நேர்காணல்  அழிப்பு  விடுக்கக்கோரி அலைந்ததும் இதே கும்பல் தான். திடீர் தேர்தல் அறிவிப்பு  வரவில்லை என்றால்  கரன்சி கட்டுகளால் பெரிய  அளவில்  தொப்பை  பெருத்திருக்கும்  இக்கும்பல்.
இந்த மைனாக்களை கூண்டை விட்டுத்திறந்து விட்டால் தமிழகம் முழுவதிலும் இருக்கிற 28 மாவட்ட மருத்துவமனைகள் 380 தாலூகா மருத்துவமனைகள் 1562 ரம்ப சுகாதார நிலையங்கள் 800க்கும் மேற்பட்ட நிலையங்களில் இருந்து பயிரை அழிக்கும் வெட்டிக்கிளிகளான-நரம்பியல், இதயவியல், எலும்பு முறிவு மகப்பேறியல், குழந்தைகள் நலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, தசை அலர்ச்சி குறிப்பாக 40 சத தாய்மார்களுக்கு இருக்கிற மூட்டு வலி, இடுப்பு வலி பிரச்சனைகளை மருந்தே இல்லாமல் சுளுக்கெடுத்து விடுவார்கள். இதனால்  பன்னாட்டு மருந்து கம்பெனி  மச்சான் கோவித்து - உலக வங்கிககடனை நிறுத்தி விடுவானே? இவர்களின் உதடுகள் பேசுவது  மட்டும் தானே நாட்டு நலன்? இவர்களின் எல்லா செயல்பாடுகளும் சொந்த மகன்களின் நலன்களுக்காக மட்டும் தானே? சொந்த நலன் என்கிறபோது மட்டும் சின்ன இடைவெளி கிடைத்தாலும் முடிந்ததை லவக்கென்று சுருட்டிக்கொள்வார்கள் இவர்கள்.

            2010 நவ. 23-ந் தேதி பிசியோதெரபி டாக்டர்களின் 15 பணியிடங்களுக்கு திடிரென ஒரு நேர்கானல் நடந்தது. பதிவு மூப்பு அடிப்படையில் 1 : 5 என்கிற அடிப்படையில் 75 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்கானலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேர்காணல் முடிந்து ஒண்ணரை மாதங்களுக்குப் பிறகு ஒரு 15 இயன்முறை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

            இதில் நடந்த கூத்தோ படு சுவாரஸ்யமானது. அந்த ஒண்ணரை மாத இடைவெளியில் அந்த 75 பேர்களிடமும் பேரம் நடந்தது. ஒரு 50 பேர்கள் ளுக்கு ஐந்து லட்சம், ஏழு லட்சமென தரகரிடம் தந்து விட்டனர். அதிகத் தொகை தந்த முதல் 15 பேர்களுக்கு (7 லட்சம்) மட்டும் பணி நியமன ணை கையில் கிடைத்தது. இந்த வகையில் தரகரின் கைக்கு வந்த தொகை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய். மீதிப்பேர்களிடம் வசூலித்த 2 கோடி ரூபாயை மூன்று மாதம், ஐந்து மாதமென தரகரிடம் அலைந்து திரிந்து கொடுத்த தொகையை திரும்பப் பெற்றார்கள் இளைஞர்கள். அந்தத்தரகர் யார் என்றால் அகில இந்திய (I.A.P.) பிசியோதெரபி ஜெனரல் கவுன்சிலின் தமிழ் நாட்டுக்கிளையின் நிர்வாகிகளில் ஜெயபிரகாசமான ஒருவர். இவர் யாருக்கு தரகர் என்பது சொல்லித்  தெரிய வேண்டிய அவசியமில்லை. இவருக்கு அடையாறில் 21/2 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா இருக்கிறதாம். இந்த சகலகலாவல்லவனின் சீனியர் பரிதாப நிலையில் இருக்க காரணம்  இவருக்கு பன்னீர்தெளிக்கிறசாமர்த்தியம் இல்லாததே.நல்லவேளை மேலும் 60 இயன்முறை மருத்துவ இளைஞர்கள் வீடு, நிலத்தை விற்காமல் தப்பித்துக்கொண்டனர்.  ஏனெனில் அப்போது மேலும் 60 பிசியோதெரபிஸ்டுக்கள் பணி இடங்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்ககோரி அலைந்ததும் இதே கும்பல் தான்.
மக்களுக்கான மாற்று மருத்துவமான இயன்முறை மருத்துவத்தை மக்களுக்கே சொந்தமாக்கிட  களத்தில்   களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிற தம்பி கிருஷ்ணகுமார் தலைமையிலான இயன்முறை மருத்துவர் பெருமன்றத் தோழர்களுக்கும், தம்பி விஜய் ஆனந்த் தலைமையிலான தமிழக பிசியோதேரபிஸ்ட்டுகள் நலசங்க தோழர்களுக்கும் "அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் குழுமம்" விடுக்கின்ற அறைகூவல் இதுதான்.

ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் போராடுவதின் மூலமே பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்.எந்தப்பின்னணியும் கொண்டிராத நடுத்தர வர்க்க குடும்பங்களில் இருந்து வந்திருக்கிற  பல ஆயிரம் பிசியோதெரபிஸ்ட் இளைஞகர்கள்  தன்னையொத்த இளைஞகர்களோடு ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாக இணைந்து வலிமையோடு செயல்படத்தொடங்கும் போது மட்டும் தான் அவன் கோடிக்கால் பூதத்தின் பங்கும் பகுதியும் ஆகிறான். பன்னாட்டு மருந்துக்கொள்ளையர்களின் கொள்ளையை அடக்கவல்ல ஒரே சூலாயுதம் ஒன்றுப்பட்ட போராட்டமே.
போராட்டங்களும் ஒருவகையான போர்களே, ஒரு போரில் ஈடுபடும் இருதரப்பினரும் மிக முக்கிமாக எண்ணிப்பார்க்க  வேண்டியது தனது  எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் தான்.
அவனோடு மோதத் தயாராகும் நமது பலத்தையும் நம் பலவீனத்தையும் நாம் துள்ளியமாக உணர்ந்து தெளிந்திருக்க வேண்டும். இந்த வகையில் நாம் சார்ந்திருக்க வேண்டியது நமது சொந்தப்பலத்தையும் நாம் மேற்கொண்டுள்ள சுய தயாரிப்புகளையுமே இந்த வகையில் பன்னெடுங்காலமாய்  வஞசிக்கப்படிருக்கிற பல ஆயிரம் பிசியோதெரபிஸ்ட் இளைஞர்களின் தளம்  முதற்கண்  உங்கள் ஒற்றுமையில் தான் இருக்கிறது. இப்படி நீங்கள் செயல்பட்டால் தான் சமூக மாற்ற சிந்தனையும், லட்சிய வேட்கையும் கொண்ட அமைப்புகளின் பின்புலமும் நிபந்தனையற்ற ஆதரவும் தங்குதடையின்றி கிடைக்கும். பிறகு நீங்கள் நிகழ்த்த  போவ தெல்லாம்  அற்புதங்கள் மட்டுமே.

பல்வேறு ஊழல் நடவடிக்கைகளால் முடை நாற்றமடித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆளுங் கட்சியின் அரசியலும், அதன் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும்  ஆட்சியையும் நீங்கள் இரு அமைப்புகளும் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இன்றில்லாவிட்டாலும்  நாளை  உங்கள் முன்பாக மண்டியிட்டேயாக வேண்டும்.

எனவே உங்கள் இரு தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட போராட்ட களத்தில் இறங்க முன்வருமாறு செவ்வணக்கத்தொடும் புரட்சிகர வாழ்த்துகளுடனும் அறைகூவி அழைக்கிறோம். என்றும் உங்கள் தோளோடு நிற்கவும் செய்வோம்.

சென்னை -107 .
13 .03 .2011                               

தோழைமையோடு 
கருப்பன்.சித்தார்த்தன்
அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கான ஆய்வாளர் குழுமம்
கைபேசி: 9710309050

குழுமம் தொடர்ப்புக்கு  :
செயலாளர்,
சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு
கு.கதிரேசன் M .A .,M.L .,
கைபேசி : 9843 464246


           

செவ்வாய், 15 மார்ச், 2011

உலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

இன்றைய  தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை மட்டுமல்ல நுகர்வோருக்கு தரமற்ற பொருளை கொடுத்ததும் ,தரமற்ற சேவையை தந்தும் தனது லாபத்தை பல மடங்கு பெருக்கி கொள்கிறது. நுகர்வோர் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் விழித்தெழுந்தால் தான் இந்த ஏக போக கொள்ளையை தடுக்க முடியும்.வாங்குபவனே விழித்தெழு ,ஓன்று சேர் , போராடு,

திங்கள், 14 மார்ச், 2011

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் கூலிப்படையினர் தாக்கியதை வேடிக்கை பார்த்த காவல் துறை

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக சட்ட விரோதமாக நிர்வாகத்தை கைப்பற்றி உள்ள  பிஷப்பின் பிடியில் இருந்து கல்லூரியை மீட்டு அரசின் சிறப்பதிகாரியை  நியமிக்க கோரி  தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதை தடுக்கவும் ,மாணவர்களை மிரட்டவும் பிஷப்  கூலிப்படையை ஏவி விட்டு  இன்று  (14.03.2011) உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கற்களை கொண்டு  தாக்கினர். அதை கண்டித்து கூலிப்படையை கைது செய்ய கோரி மாணவர்கள் கோரிப்பாளையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.அனால் காவல் துறையோ கூலிப்படையை கைது செய்யாமல் போராடிய மாணவர்களை கைது செய்தது.ஆனாலும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத்தை கைவிடாமல் அரசு சிறப்பதிகாரியை நியமிக்கும் வரை கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாமும் அவர்களின் தொடர்  போராட்டத்திற்கு  ஆதரவாக குரல் கொடுப்போம்

சனி, 12 மார்ச், 2011

தகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்க முயற்சி செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது

தகவல் உரிமை ஆணையர்கள் நியமனத்தில் முறைகேடு 

தகவல் ஆணையர்கள் நியமனத்தில் எதிர்கட்சி தலைவரும் முக்கியபங்காற்றுவார். ஆனால் தமிழக அரசோ அவரசர அவசரமாக தங்களுக்கு சாதகமானவர்களை தெரிவு செய்தது. அதுவும்  சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 1-ம் தேதி .  தமிழக அரசு பி.ஏ. ராமய்யா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை தமிழகத் தகவல் ஆணையர்களாக நியமித்து  உத்தரவு பிறப்பித்தது. தகவல் ஆணையர்கள் நியமனங்களில் விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நியமனங்கள் தொடர்பான நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணிக்கப்படுள்ளார்.எதிர் கட்சி தலைவருக்கு உரிய வாய்ப்பு வழங்காமலையே இந்த உத்தரவு பிரப்பிக்கப்படுள்ளது.ஆகையால் ,  தற்போது நியமிக்கப்பட்ட  மேற்குறிப்பிட்ட மூவரும்  தகவல் ஆணையர்களாகச் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்களின் நியமனங்கள் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி விஜயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தகவல் ஆணையர்கள் முறைகேடான நியமனத்திற்கு   இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தான் கருணாநிதிக்கு சாதகமான ஸ்ரீபதி தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது எந்த தகுதியும் இல்லாத இந்த ஆணையர்கள் ஆளும் கட்சி விசுவாசத்திற்காக  நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கே சமாதி கட்டும் வேலையை இந்த அரசு செய்துள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். 

ஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் தொழில் ஆலைகள்

திருப்பூர் போன்ற பகுதிகளில் இடம் ,மற்றும் வேலையாள் சம்பளம் போன்றவை அதிகம்(!!?)  என்று முதலாளிகள் நினைப்பதால் ஒட்டன்சத்திரம் போன்ற கிராமப்புரங்கள் நிறைந்த பகுதிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் படையெடுக்கத் தொடக்கி விட்டன. அங்கு கட்டற்ற காட்டுச் சுரண்டலை அந்த நிறுவனகள் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளன. அது பற்றிய சிறப்புக் கட்டுரை மிக விரைவில் இயக்கத்தில் வெளிவரும்.

சாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள் தமிழகத்தில் வேர்விட்ட பின்பு தான் இங்கு அரசியல் என்பதே அப்பட்டமாக வியாபாரமாக ஆகிவிட்டது .அந்த அளவிற்கு தமிழகத்தின் கலாசாரத்தை சீரழித்ததில்  இந்த திராவிட கட்சிகளுக்கு மகத்தான பங்கு உண்டு.அதை மறைப்பதற்காக புது புது கூட்டணி  வேஷம் தரித்து இந்த கட்சிகள் மக்கள் முன்பு நாடகமாட வருவதுண்டு. தற்போது பணம் பட்டுவாடச்செய்வது தான் ஒரே தேர்தல் வேலை என்று ஆனா பின்பு இந்த இரு பெரும் கட்சிகளுமே சாதிய கட்சிகளுக்கு கணிசமாக தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து சாதியத்தை தக்க வைத்து கொள்ளும் வேலையை கட்சிதமாக பார்கின்றன. நேற்று  வரை  லெட்டர் பேடு கட்சியாக இருந்தவை எல்லாம் இன்று சில சீட்டுகளை வாங்கி கொண்டு தங்கள் சாதி பெருமையை பறை சாற்ற கிளம்பி  விட்டன. சாதி அரசியலை தூக்கி பிடிக்கும் மேல் தட்டை சார்ந்த சிலர் வேண்டுமானால்   இதில் பலன் அடையலாமே  தவிர     இது போன்ற சாதி கட்சிகளால் அந்த சாதியை சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது. இதை உழைக்கும் வர்கத்தினர் புரிந்து கொண்டு இது போன்ற ஜாதிகட்சிகளையும் அவர்களை தூக்கி பிடிக்கும் திராவிட கட்சிகளையும் புறக்கணிக்க  வேண்டும்.

வெள்ளி, 11 மார்ச், 2011

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பேரழிவு

வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது. கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன. 8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.ஏராளமான கார்கள், கட்டடங்கள், படகுகள் உள்ளிட்டவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்காண மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னரும் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டடங்கள் அதிர்ந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.டோக்கியோவில் உலகின் மிகவும் பரபரப்பான ஷின்ஜுகு நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.டோக்கியோவின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.இது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.டோக்கியோவின் ஒடைமா மாவட்டத்தில் பெரிய கட்டடம் ஒன்று தீப்பிடித்து, புகைமண்டலமாக காட்சி அளித்தது. மத்திய டோக்கியோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பிளாட்பார்ம்களில் நடந்துசென்றனர்.டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.பலர் இறந்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டுருக்கின்றன. இது போன்ற இயற்கை பேரழிவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அதை வருங்காலங்களிலாவது தடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

புதன், 9 மார்ச், 2011

தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்




சென்னை, மார்ச் 9- தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்த சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. இதன்படி, பள்ளித் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், பள்ளிகளுக்கு அருகே 200 மீட்டர் தூரம் வரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தேர்தல் நேரத்தில் பள்ளி வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிப் பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான விசாரணையில், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

பாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டியடிக்கப்பட ராணுவ ஜவான்கள்


பிகார் தலை நகரமான பாட்னாவில் பள்ளியில் 14 வயதிற்குட்பட்ட மாணவ ,மாணவிகள் தங்கள் படிப்பதற்கு இடையுறாக இருந்த ராணுவ ஜவான்களை பள்ளியை விட்டுவிரட்டி அடித்தனர்.இந்த பள்ளியில் மூன்று அறைகளில் அனுமதி இல்லாமலையே தங்கி கொண்டு மாணவர்களை கிண்டல் செய்வதும் ,ஆபாச பாடல்களை பாடியும் மாணவ மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.எப் படைவிரர்கள் அவர்களின் இந்த போக்குகளை மாணவர்கள் கண்டித்து அவர்கள் அறைகளை காலி செய்ய வலியுறுத்திய போதும் அரசோ ,காவல் துறையோ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை, இதனால் தங்களது படிப்பும் ,சுதந்திரமும் பாதிக்கபடுவதால் மாணவர்கள் அவர்கள் தங்கி இருந்த அறையை உடைத்தும் ,அவர்களின் வாகனங்களை நொறிக்கியும் தள்ளினர். 

கொடூர மனம் படைத்த ராணுவத்தினர் அந்த சின்னஞ்சிறிய   மாணவர்கள் மீது லத்தி ஜார்ச் செய்தனர். இதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். இது மக்கள் மத்தியில் மாணவர்களுக்கு பெரும் அனுதாபத்தை தேடிதருவதை உணர்ந்த அரசு அந்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.இது போல வட இந்திய முழுவதும் பள்ளிகளில் டெண்ட அமைத்து தங்கியுள்ள ராணுவத்தினரை வெளியேற்ற கோரும் கோரிக்கை மக்களிடையே வலுத்துள்ளது . அந்த பிஞ்சு உள்ளங்களில் எழுந்த போராட்ட கனலை நாம் வரவேற்போம். துங்கி கிடக்கும் மாணவ சமூகத்தை தட்டி எழுப்புவோம

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்



இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும்  மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போ  வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ  அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் பலன்கிர் பகுதியில்  உள்ள சேன்டு வுட்டு இரும்பு தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய   உயர்வு கேட்டு போராடியதற்கும், பலகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே உள்ள தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரியதற்கும், தொழிலாளர்களுக்கு தொழில் தகராறு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள சங்கம் அமைக்கும் உரிமையின்படி சங்கம் அமைத்ததற்கும், என்று பல காரங்களை கூறி எந்த வித முன்அறிவிப்பும் கொடுக்காமல் நிரந்தரத் தொழிலாளர்கள் சிலரையும், ஒப்பந்த தொழிலாளர்கள் பலரையும்  லை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்த சட்ட விரோதமான பணி நீக்கத்தை எதிர்த்து போராடிய தொழிலாளர்களை லை நிர்வாகம் எந்த விதமான பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை அத்தோடு அவர்கள் தொழிலாளர் நல அலுவலரிடம் கொடுத்த முறையீட்டையும் நிர்வாகம் அலட்சியம் செய்தது. தொழிலார் நல அலுவலரும் இந்த பிரச்சனையில் முதலாளியின் பக்கமே வழக்கம் போல நின்றுவிட்டார் . போராடும் தொழிலார்கள் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே போனது இவ்வாறு தொழிலார்களின் போராட்டம்  கடுமையாக நிர்வாகத்தால் ஒடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த அப்பட்டமான கடும் அடக்குமுறையை தொழிலாளர்கள்  மேல் ஏவி விட்ட ஆலையின் துணை பொது மேலாளர்  கடந்த 03 .03 .2011 அன்று காரில் செல்லும் போது  சிலர் அந்த காரை வழிமறித்து காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளரை  இறக்கி விட்டுவிட்டு காரை தீயிட்டு கொளுத்தியதால்  அந்த பொது மேலாளர் இறந்து விட்டார்இதை செய்தது அந்த ஆலையின் தொழிலாளர்களில் சிலர் தான் என்று காவல் துறையால் கூறப்படுகிறது

 அவ்வாறு  செய்வது காட்டுமிராண்டி தனம்  என்றாலும்  அவ்வாறு  செய்ய  தூண்டிய சூழ்நிலை என்ன என்று சிந்திக்க வேண்டியது மனித நேயம் உள்ள  உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகும். அந்த ஆலை தொழிலாளர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு குறைந்தது 12  மணி நேரம் வேலை செய்ய வேண்டியதும் ,அவர்களுக்கு சட்டப்படி உள்ள பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்பு ,சங்கம் அமைக்கும் உரிமை , பணி ஒய்வு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் என்ற  எந்த  உரிமையும் வழங்காமல்    அவர்களை ஓட்ட ஓட்ட சுரண்டுவதும் , அதை அவர்கள் சங்கம் அமைத்து தட்டி கேட்டல் அவர்களை பணியில் இருந்து தூக்கி எறிவதும் அவர்களுக்காக போராடுபவர்களையும் பணியில் இருந்தி துரத்துவதும் போன்ற நாகரிக சமூகத்தால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதா மனிதாபிமானமற்ற செயல்களை இந்த அலை முதலாளிகள்  தினம்தோறும்  அரங்கேற்றுகின்றனர், அதை அரசும் ஆளும் வர்க்க நலன்களை தூக்கிபிடிக்கும் ஊடகங்களும்     கண்டுகொள்வதில்லை.   இன்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது போன்ற  பிரச்னைகளுக்காக  போராடுவதை விட்டு வெகு காலமாகி விட்டது.

இது போன்ற  கையறு சூழ்நிலைகள் தான் தொழிலாளர்களை வன்முறை பாதைக்கு தள்ளுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல . இது இந்த அலை தொழிலாளர்களின் பரிதாப நிலை மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பொதுவான  சூழ்நிலையே  ஆகும். இந்த காட்டுமிராண்டி தனமான  முதாலளித்துவ  சுரண்டலை அந்த ஆலை தொழிலாளர்கள் மட்டுமே தங்களது தொழிற்சங்கங்கள் மூலம் மாற்றி அமைத்து விடமுடியாது . தொழிலாளர்களுக்கு  அவர்களிடம் உருவாகும் ஒற்றுமைதான் ஒரே ஆயுதம்  ஆகும், அதை உணர்ந்து  ஒரு வளிமையான ஒருங்கு திரண்ட, முனைப்பான நாடு தழுவிய முதுகெலும்புள்ள  தொழிற்சங்க அமைப்புகள்     மூலமே அதை நாம் தட்டி கேட்க முடியும். உழைக்கும் மக்களை ஒருங்கு திரட்டி அதை நாம் சாதிக்க உறுதி ஏற்போம்.

இந்த கட்டுரை inioru .com  வெளியானது   

புதன், 2 மார்ச், 2011

உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் - அறிக்கை



கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிககள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் " என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதில்  கீழ்வரும்  பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும்  இதே போன்ற பொது வேலைதிட்டத்தை  இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றுள்ளனர் .

இந்திய அளவிலும் , உலக அளவிலும் இன்று தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கு இடையூறாக இருப்பது; புரட்சி திட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகளே! ஆதலால் ஒரு உண்மையான புரட்சிகர பாதையையும் , புரட்சிகர கட்சியையும் நல்ல எண்ணத்தோடும் , நல்ல மனதோடும் நன்கு ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வரை "உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின்" மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய செயல்பாடுகளை  இந்த 
அமைப்பின் மூலம் செய்வது என்றும் , அதே வேளையில் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பணியாற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய கீழ்வரும் செயல்களை இந்த அமைப்பு செய்ய உறுதி  ஏற்று உள்ளது.

அந்த செயல்திட்டங்கள் 
1 . இடது சாரிகளின் ஒற்றுமைக்காக பாடுபடுதல்
2 .போராட்ட கமிட்டிக்களை ஆங்காங்கே உருவாக்கி போராட்டங்களை கட்டி எழுப்புதல் 
3 . அரசியல் வகுப்புகள் நடத்துவது 
4 . மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்துதல் 
5 . சமரசமற்ற போக்கை கடைபிடிப்பது 
6 . அனைத்து நிலைகளில் ஒடுக்கப்படும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல் 
7.சாதிவாதம் , மதவாதம் ,இனவாதம் போன்ற தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பது என்பதை வலியுறுத்துவது 

இவற்றை கடைபிடித்து ஆங்காங்கே போராட்டகமிட்டிகளை அமைக்கவும், தொழிலாளி  வர்க்க ஒற்றுமையை கூர்மைப்படுத்தவும் வர்க்க உணர்வுள்ளவர்களை உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்  அறை கூவி அழைக்கிறது.
தொடர்பிற்கு: தோழர்.சந்தோஷ் 
தொலைபேசி எண் : 94433 47801

செவ்வாய், 1 மார்ச், 2011

வழக்கறிஞர் மன்றத் தேர்தலில் சிறந்த வழக்கறிஞரை தேர்வு செய்வது வழக்கறிஞர்களின் கடமையாகும்.

வரும் மார்ச் 4 ம் தேதி வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெறுகிறது இதில் பணத்திற்காக வாக்களிக்காமல் , நல்ல வேட்பாளரை தெரிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் 

மார்ச் 8 - உலக உழைக்கும் மகளிர் தினம்

உழைக்கும் மக்களுக்கு என்னவெல்லாம் துன்பங்களை இந்த ஆளும் முதாளித்துவம் இளைக்கிறதோ அது அனைத்துமே மகளிருக்கும் பொருந்தும். முதலாளித்துவம் அதிலும் கூடுதலாக அவர்களின் பொறுப்புணர்வை பயன்படுத்தி சுரண்டுகிறது. அத்தோடு குடும்ப அமைப்பு முறையிலும் அவர்களுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது. இவ்வாறு இந்த அநீதிகளுக்கு எதிராக உழைக்கும் மகளிர் அணி திரண்டு இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சாவு மணி அடித்தால் தான் இந்த அனைத்து தலைகளில் இருந்தும் உழைக்கும் மகளிர் விடுபட முடியும். முதலாளித்துவ கொடுமைகள் தீர தொண்டு செய்த தியாகிகளை நினைவு கூர்வோம். இந்த அமைப்பு முறையை தகர்க்க சபதம் பூணுவோம்.

முகப்பு

புதிய பதிவுகள்