19 . 07 2012 காலை 4 . 30 மணிக்கு கொட்டாம்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளனதில் இ . எம். டி. சரவணன் உயிர் இழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள்(1 வயது, 4 வயது) இருக்கின்றன. தகவல் கேள்விப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவ்வாறு ஊழியர்கள் வருவதை பார்த்த மதுரை டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் ஊழியர்களை திட்ட ஆரம்பித்தனர். 'இந்த வேலையில்(108 ) சாவு என்பது சர்வசாதாரணம்' என்று டி.எம். கூறியிருக்கிறார். அதனால் கோபமுற்ற இறந்து போன சரவணனின் உறவினார்கள் அந்த இடத்தை விட்டு போய்விடுமாறு டி.எம்.மிடம் கூறியிருக்கின்றனர். இதனால் கோபமுற்று பழிவாங்கும் போக்குடன் செயல்பட்ட டி.எம். மற்றும் பி லீ ட் இருவரும் காவல் நிலையத்தில் சங்கத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் மீது தங்களை அடித்ததாக பொய் புகார் அளித்தனர்.
பொய் புகாரின் பெயரில் இ .த.ச . பிரிவு 323 மற்றும் 506 (1 ) ஆகிய பிரிவுகளில் எப்.ஐ. ஆர் பதிவு செய்த மேலூர் போலீஸ், சரவனணன் மற்றும் சதீஷ் இருவரையும் கைது செய்தது. 108 AWU ஐ சேர்ந்த ஊழியர்கள் 60 க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து இருவரையும் விடுவிக்குமாறும் தவறு செய்த டி.எம். மற்றும் பிலீட் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஊழியர்களின் நியாயமான குரலுக்கு செவிசாய்க்காத போலீஸ் இருவரையும் ரிமான்ட் செய்ய முயற்சி செய்தது. உடனடியாக சங்கத்தின் சட்ட ஆலோசகர் தோழர் சிவகுமார், SDM தலைவர் தோழர்.வினோத் குமார் தலைமையில் 108 AWU சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ஊழியர்களை விடுதலை செய்யுமாறும், பொய் வழக்கு தொடுத்த டி.எம். மற்றும் பிலீட் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பினார்கள் .
20 நிமிடங்களாக இந்த சாலை மறியல் நடைபெற்றது. போலீஸ் குவிக்கப்பட்டு மறியல் செய்த அனைவரையும் கைது செய்தது காவல் துறை. இருவரையும் விடுதலை செய்யாமல் நாங்களும் வெளியே போக மாட்டோம் என்று உறுதியாக ஊழியர்கள் சொன்னார்கள் . இறுதியில் காவல் துறை ரிமான்ட் செய்யும் போதே நீங்கள் பிணையில் எடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் ஆட்சேபனை செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர். அவர்கள் இருவரும் மேலூர் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி இ.த . ச பிரிவு 506 (1 ) நீக்கிவிட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். இவ்வாறு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் நேரடி நடவடிக்கையால் இரண்டு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தோழர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு