வியாழன், 26 மே, 2011

சிறப்புடன் நடைபெற்ற CWP யின் மே தின அரங்க கூட்டம் - திருத்தங்கள்


சென்ற ஞாயிற்றுக்கிழமை  22.05.2011  அன்று  சிவகாசி வட்டத்திற்குட்பட்ட  திருத்தங்கள் , ரயில் நிலையம் அருகில் ,  ஐயப்பன்  மண்டபத்தில்  மே தின  அரங்க கூட்டம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேட்யூனியன்ஸ்(COITU) ஆகியவற்றின்  சார்பாக தோழர்.வரதராஜ் தலைமையில்    நடைபெற்றது. தோழர்கள். தங்கராஜ் , செல்வராஜ் , பாரதி, ஆனந்த் ஜெயகுமார் , சத்தியமூர்த்தி , சிவகுமார், ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். உழைக்கும் மக்கள் கமிட்டியின் தலைவர் தோழர்.வரதராஜ் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சுமங்கலி திட்டம் மூலம் பெண்கள் எப்படி சுரண்டபடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி தலைமையுரை நிகழ்த்தினார்.


விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் தோழர் தங்கராஜ் தனது உரையில் சமீபத்தில் சிவகாசியில் பட்டாசுகளை அழித்த போது நடந்த விபத்தில் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் இறந்து போனார்கள் அந்த விபத்திற்கான உண்மையான காரணத்தை ஊடகங்களும் ,அரசும் மறைத்து விட்டது .பட்டாசு தயாரிக்கும்    முதலாளிகளை  ரைடில் இருந்து   தப்ப வைப்பதற்காக அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டாசுகளை திருட்டுத்தனமாக தாசில்தார் தலைமையில் பட்டாசுகளை அழிக்கும் போது அந்த விபத்து நடைபெற்றது என்றும் அதை ஊடங்கங்கள் மறைத்துவிட்டது என்றும், தற்போது பட்டாசு தொழிலில் நாள் சம்பளம் என்பதெல்லாம் போய் பீஸ் ரேட் முறை முறைபடி தான் கூலி கொடுக்கப்படுவதாகவும்,அதுவும் மிகக்குறைவான கூலி தான் கொடுக்கப்படுகிறதுஅதனால் ஒரு தொழிலாளி தனது அன்றாட வாழ்வை நகர்த்தவே 16  மணிநேரம் கட்டாயம் வேலை செய்தாக வேண்டியுள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்ட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர்.செல்வராஜ் தனது உரையில் இன்றுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டது என்றால் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்யும்படி  கட்டாயப்படுதத்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் 18  மணிநேரம் வேலை வாங்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்ட் ர்க்கர்ஸ் பிளாட்பாரத்தை சேர்ந்த தோழர்.பாரதி தனது உரையில் மே தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது என்றும்   மனிதனை மனிதன் சுரண்டும் முறை ஒழிக்கப்பட்ட வேண்டும்  என்றும்  8  மணி நேரம் வேலை , 8  மணிநேரம் ஓய்வு, 8  மணிநேரம் சமூகம் சார்ந்த பணிகளை செய்வது என்ற முறையில் ,சோஷலிச சமூக  அமைப்பு முறையின் சிறப்பை விளக்கி பேசினார்.

பி.எஸ்.என்.எல்.தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார் தனது உரையில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்தபோதும் CPI(M) இன் ஆதரவு பெற்ற தொழிற்சங்கம் கடைசிவரை மவுனம் காத்து ,  அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆமாம் சாமி போட்டு பொது துறை நிறுவனத்தின் சொத்துகள் கொள்ளைபோவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை  தான் இன்று நாடுமுழுவதும் உள்ள CITU , AITUC   தொழிற்சங்கங்களின் நிலையாகும் என்று குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் தோழர். சத்தியமூர்த்தி தனது உரையில் மே தினம் உருவாக காரணமாக இருந்த சிகாகோவில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தார். 8  மணிநேர வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களின்   போராட்டங்களை கலைக்க அரசே குண்டு வீசி கலவரத்தை தூண்டியதையும் முன்னின்று வழிநடத்திய ஐவர் மீதும் வழக்கு நடந்த போது அந்த நீதிமன்ற நடவடிக்கைகளில்  அந்த மாவீரர்கள் மவுனம் சாதித்ததையும்,அதன் மூலம் அந்த நீதிமன்றங்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று முன்பே அவர்கள் கணித்துவிடதையும் அந்த                 மாவீரகளின்  8  நேரம்   வேலை என்ற கோரிக்கைகள்  இன்றும் கூட  நடைமுறைக்கு வரவில்லை என்பதையும்  குறிப்பிட்டார்.

கேளாத செவிகள் கேட்கட்டும்  - பகத்சிங் கடிதங்கள் கட்டுரைகள் - புத்தகத்தின் தொகுப்பாளரும்  , மாற்றுக்கருத்து  ஆசிரியரும்,  CWP யின் மத்திய கமிட்டி உறுப்பினருமான தோழர். .சிவகுமார் தனது உரையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த பகவதி , தேசாய் போன்றவர்கள் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக அளித்த தீர்ப்புகளையும் ,அவர்களின் தொழிலாளர் சார்ப்பு நிலையும் தற்போது ஓய்வு பெற்ற  கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் எப்படி தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும்  மாற்றியுள்ளனர்  என்பதை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக பேசிய கம்யூனிஸ்ட் ர்க்கர்ஸ் பிளாட்பார்மின் பொது செயலாளர் (தெற்கு ) தோழர். .ஆனந்தன் தனது உரையில்மணி நேரம் வேலை என்பது   1990  களில் தொழிற்சங்கங்களால் முன்னணி கோரிக்கையாக எழுப்பப்படவில்லை.  ஏனெனில் அப்போது பெரும்பாலும்மணிநேரம் வேலை என்பது நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமைகள் கூட காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது . தற்போது நாம்மணிநேரம் வேலை என்பதை முதல் கோரிக்கையாக எழுப்பவேண்டியுள்ளது,     ஷியாவில் சோசலிசம் நடைமுறையில் இருந்த காலத்தில் தொழிலாளர்கள் சோசலிசம் பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக வாழ்க்கை  சம்பளம் என்று மேற்குலக நாடுகளில் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது ஷியாவில் சோசலிசம் விழுந்த பிறகு அந்த சம்பளமும் , உரிமைகளும் மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இன்று CPI , CPI(M) தொழிற்சங்கங்கள் முதலாளிகளின் ஊதுகுழலாக       மாறிப்போனதையும், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அசைப்பதை போல’ இன்று நம்மிடம் 108  அம்புலன்ஸ் தொழிலாளர்களும், பிசியோதேரபிஸ்டுகளும் நம்மை அசைத்து கொண்டு உள்ளனர் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த அரங்க கூட்டத்தில்  பங்கேடுத்துகொண்டனர். சிறப்புடனும் , பாட்டாளிவர்க்கதிற்கே உரிய நெறியுடனும் இந்த அரங்க கூட்டம் நடைபெற்றது. அங்குள்ள உழைக்கும் மக்களிடையே  இந்த கூட்டமானது  எதிர்காலம்  குறித்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது .


தகவல் உதவி : டேவிட் வினோத் குமார் SDM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்