இந்திய நாட்டின் அமைதி வேண்டியும், மத நல்லிணக்கத்துக்காகவும் மூன்று நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் திருவாளர் நரேந்திர மோடி அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று துவக்கியுள்ளார். குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்குகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே மேற்குறிப்பிட்ட ‘’உன்னத’’ நோக்கிற்காக இந்த உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கியுள்ளார். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது மத்திய ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கடசிகளும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து மோடியின் இந்த உண்ணாவிரதத்தை உளமாற வாழ்த்தி வரவேற்றுள்ளுனர். காங்கிரஸ் கட்சியோ நரேந்திர மோடியின் இந்த அதிர்ச்சிகரமான அதிரடி நடவடிக்கையைக் கண்டு சிறிது சலசலப்புடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தலைமையில் ஒரு போட்டி உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திக் கொண்டுள்ளது.
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
கம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும் எள்ளும் கடுகும்
[கம்யூனிச இயக்கத்தின் இன்றைய தேக்கநிலையைக் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் - கட்சி அரசியலின் எல்லை தாண்டி கம்யூனிச அரசியல் வழியில் சிந்திக்க முடிந்த - உண்மையான கம்யூனிசத் தோழர்களின் சிந்தனைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும்]
நூற்று அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னார்: கம்யூனிச பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று. அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கம்யூனிச பூதத்திடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவப் பேயோட்டிகள் பலர் தோன்றி தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி அதை விரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளனர்.
லேபிள்கள்:
வர்க்கப் பாதை
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!
இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள் அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில் நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1 லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது.
லேபிள்கள்:
கு.கதிரேசன்
புதன், 14 செப்டம்பர், 2011
வட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்
ஜாதி உணர்வுகள்
ஊட்டி வளர்க்கும் - ஒரு
ஜாதி விடுதலைப் போராட்டம்.
ஊட்டி வளர்க்கும் - ஒரு
ஜாதி விடுதலைப் போராட்டம்.
லேபிள்கள்:
கவிதைகள்
சனி, 10 செப்டம்பர், 2011
ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்
உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள் என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால் கூட ஜெயிலிலும் சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.
லேபிள்கள்:
கு.கதிரேசன்
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்
விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.
............................................................................................................................................
வியாழன், 8 செப்டம்பர், 2011
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும் , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும் கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி உண்ணாவிரதம் நடைபெற்றது.
லேபிள்கள்:
108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்
108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது.
லேபிள்கள்:
108ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்
திங்கள், 5 செப்டம்பர், 2011
மார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9
சீனா முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டை காடாக 19 நூற்றாண்டில் இருந்தது , ஜப்பானின் ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடியது. நிலபிரப்புகளின் சுரண்டலை தட்டி கேட்க முடியாதவர்களாய் அப்படி கேட்டால் மரணம் பரிசாக கிடைக்கும் என்ற நிலையில் கோடிக்காணக்கான மக்கள் , பசி , பட்டினி என்று துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கி துவண்டு கொண்டு இருந்தனர். அப்போது தான் ரஷியாவில் சோஷலிச அரசு தனது இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்து கொண்டு இருந்தது. சீனா முழுவதும் முதலாளித்துவம் முழுமையாக வளராத நிலையில் தொழிலாளர்கள் குறைந்த பகுதியினறாய் இருந்த படியினால் , பண்ணையடிமைகளாக , குத்தகை விவசாயிகளாக , சிறு விவசாயிகளாக சிதறுண்ட கிடந்த சூழ்நிலையில் மார்க்சிய வழிகாட்டுதலில் சிவப்பு வானில் உதித்த நட்சத்தரமாய் சீனாவிற்கு விடியலாய் , வழிகாட்டியவர், வழிநடத்தியவர் தோழர்.மாவோ.
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
ஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்க்சிய சிந்தனை மையம்
நாகர்கோவில் லைசியம் பள்ளியில் 28.08 .2011 அன்று நடைபெற்ற மார்க்சிய படிப்பு வட்டத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதம் விவாதிக்கப்பட்டது. தென்மாநிலங்களுக்கனா கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரமின் (CWP) பொதுசெயலாளர் தோழர் . அ.ஆனந்தன் அவர்கள் கருத்து முதல்வாதம் எவ்வாறு மாறத் தன்மையை போதித்து கற்பனையான உலகத்தில்உழைக்கும் மக்களை ஆழ்த்தி வைத்திருந்தது என்றும் ஹெகல் போன்றவர்கள் வரலாற்றுரீதியாக வைத்த சில வழங்கல்களை , மார்க்ஸ் எவ்வாறு முழுமைபெற்ற பொருள்முதல்வாதமாக ஆக்கினார் என்பதையும் , 17 , 18 நூற்றாண்டுகளில் நிகழ்த்த தொழிற் புரட்சியின் விளைவாக வர்க்கம் கூர்மைபெற்றதை கணக்கில் எடுத்துகொண்டு , கருத்து முதல்வாதம் உத்தேசமாக கூறியதை மார்க்ஸ் எவ்வாறு புள்ளி விவரங்களோடு மறுத்து உறுதியாக தனது கருத்துகளை நிறுவினார் என்பதையும், மாற்றம் நிகழ்ந்தே தீரும் அதை யாரும் தடுக்க முடியாது வர்க்கங்கள் கூர்மையடைந்து கொண்டே தான் செல்லும் என்பதை மார்க்ஸ் நிறுவியதை பல்வேறு நடைமுறை உதாரணகளோடு விரிவாக எடுத்துரைத்தார்.
லேபிள்கள்:
இயக்கம்
நேபாளத்திற்கு புதிய பிரதமர் - மாற்றம் வருமா
நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வருவதில் நேபாளி காங்கிரஸ் மற்றுமுள்ள முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து பல முட்டு கட்டைகளை போட்டுவருகிறன. நேபாள மாவோயிஸ்ட் கட்சி செம்மையான மக்களின் நேரடி பங்களிப்புள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க, கடுமையாக போராடிவருகிறது. இந்த நெருக்கடி சூழ்ந்த நிலையில் நேபாளத்தின் புதிய பிரதமராக மாதேசி கட்சியின் உதவியோடு ,நேபாள கம்யூனிஸ்ட் ( மாவோயிஸ்ட்) கட்சியின் துணை தலைவர் டாக்டர் . பாபுராம் பட்டாரை , அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டாரை புது டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
லேபிள்கள்:
கு.கதிரேசன்
சனி, 27 ஆகஸ்ட், 2011
அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர் இளைஞர் சமூகத்தை அணிதிரட்டுவோம்
கட்டுப்படுத்த முடியா வண்ணம் பல்கிப்பெருகி வரும் ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டெழுந்து கொண்டுள்ளனர். தனக்கெனஅமைப்பேதுமின்றி ஒரு தனிமனித ராணுவமாகச் செயல்படும் அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்களின் ஆதரவினைஒருங்குதிரட்டுவதில் பெரிய வெற்றிஎதையும் பெற்றுவிடமுடியாது என்று கருதிய ஆட்சியாளர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்களையும் மிஞ்சும் விதத்தில் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அவரது அறவழிப் போராட்டத்திற்கு விதித்தனர். தன்வயப்பட்டசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கும் மக்கள் சக்தி எங்கேஎழுச்சியுடன் அவருக்குப்பின்பலமாக பொங்கி எழப்போகிறது என்ற மக்கள் குறித்த கணிப்பும் அவர்களுக்கு இந்த இயக்கம் குறித்த ஒரு மெத்தனப்போக்கை ஏற்படுத்தியது. இவை அனைத்தையும் பொய்யயன நிரூபித்து இன்று அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. நீறுபூத்த நெருப்பாக மாணவர் இளைஞர் மனங்களில்
கனன்று கொண்டிருந்த அதிருப்தியும் நிலவும் நிலைமைகளின் மீதான உடன்பாடின்மையும் பேருருப் பெற்று இவ்வியக்கத்திற்கான ஆதரவாகப்
பரிணமித்துள்ளது.
லேபிள்கள்:
மாணவர் ஜனநாயக இயக்கம்(SDM)
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
இயக்கவியல் பொருள்முதல்வாதம் - நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் படிப்பு வட்டம்
மார்க்சியவாதிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அடிப்படையான மார்க்சிய நூல்களை படிக்கும் வட்டமாக, ஒற்றுமையின் மையமாக வெற்றிகரமாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது மார்க்சிய சிந்தனை மையம். மாதந்தோறும் மார்க்சிய வகுப்புகளை நடத்து வருகின்றனர். 28.08.2011 , ஞயிற்றுகிழமை காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், லைசியம் பள்ளியில் 'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' விவாதம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பராமின் (CWP ) தென்மாநிலங்களுக்கான பொது செயலாளர் தோழர்.ஆனந்தன் அவர்களால் நடத்தப்படுகிறது. தோழர். போஸ் அவர்கள் இந்த விவாத அரங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.
லேபிள்கள்:
தோழர்.மகிழ்ச்சி
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
ஊழல் கட்சிகளோடு கைகோர்த்து ஊழலுக்கு எதிரான போராட்டம் - சி.பி.எம், சி.பி.ஐ, இன் பாராளமன்ற வழிபாடு
அண்ணா ஹசாரே ஜான் லோக்பால் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் கடும் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே சாகும் வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த போராட்டம் இந்தியாவின் இளைய தலைமுறையின் ஆன்மாவை தட்டியெழுப்பி போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் மாற்றம் வேண்டும், மக்கள் போராட்டமே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இளைஞர்களை போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறார். அவரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய கடமை எந்த வொரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சிக்கும் உண்டு . ஆனால் சி.பி.எம். சி.பி.ஐ. யோ மைதானங்களில் சட்டம் இயற்றமுடியாது என்று அண்ணா ஹசரேவை விமர்சனம் செய்வதோடு இந்திய பராளமன்றத்தை உயர்த்தி பிடிக்
கிறது.
கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
அண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத்திய அரசின் பாசிச முகம்
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்று அடுக்கடுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி
கொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . பாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
கொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . பாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
லேபிள்கள்:
lawyers forum for social movement(LFSM)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்













