2009 பிப்ரவரி 19 ல் விழுந்த அடியின் காயம் வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம்; ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்குக் கூட தகுதி அற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் தற்செயலான விஷயம் அல்ல. அது ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம். அரசு என்றால் காவல் துறையும் , ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிஞர்களும் காவல் துறையின் குண்டந்தடிக்கு கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி அது.
வியாழன், 16 பிப்ரவரி, 2012
புதன், 15 பிப்ரவரி, 2012
இருளில் மூழ்கி கிடக்கும் தமிழகம்! , விழித்து கொள்வார்களா மக்கள் ?
தமிழகம் முழுவதும் ( சென்னை தவிர ) வரலாறு காணாத அளவிற்கு 8 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கடந்த வருடம் முதலே ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து இப்போது 12 மணி நேரம் வரை என்று கடும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களும், விசை தறி வைத்திருக்கும் நெசவாளர்களும், மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகளும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக நெசவாளர்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்க்கையை நடத்தவே திண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் , இவ்வளவு பெரிய மின் வெட்டு அவர்கள் மேல் திணிக்கப்படுவது என்பது பெரிய அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
பிப்ரவரி 19 : மார்க்சிய படிப்பு வட்டம்
மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 19.02.2012 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த மூன்று வகுப்புகளாக நடத்தப்பட்டு வரும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கடைசி வகுப்பு தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில் அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் ,முற்போக்கு எண்ணம் கொண்டோரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சனி, 11 பிப்ரவரி, 2012
தோழர் ரேகா சின்காவிற்கு சிவப்பு அஞ்சலி
தோழர்களால் தங்களது அன்பிற்குரிய மூத்த சகோதரி என்று கருதவும் அழைக்கவும்பட்ட தோழர் ரேகா சின்கா இந்த ஆண்டு (2009) மே மாதம் 18- ம் நாள் மாலை 3.45 மணியளவில் பாட்னா நகரில் போரிங் கால்வாய் சாலையில் உள்ள வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் வசித்த வீட்டில் காலமானார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் நேர்ந்தது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்சிய சிந்தனையாளர் சிப்தாஸ்கோஷ் அவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தால் உத்வேகம் பெற்று உழைக்கும் வர்க்கப் போராட்டப் பதாகையை தனது இறுதி மூச்சுவரை அயர்வின்றி உயர்த்திப் பிடித்த அவரது வாழ்க்கைப் பயணம் இவ்வாறு முடிந்தது.
லேபிள்கள்:
மாற்றுக்கருத்து செப்டம்பர் 09
திங்கள், 6 பிப்ரவரி, 2012
நேபாள மண்ணில் அரங்கேறுவது ஆக்கபூர்வ மார்க்சிஸமா? திருத்தல்வாதமா?
சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களின் சிந்தனைக்கு சில கேள்விகள்
நமது இதழில் நாம் ஏற்கனவே எழுதியிருந்த இரு தொடர் கட்டுரைகளில் இன்றைய சமுதாயமாற்ற இயக்கங்கங்கள் எவையும் எந்தவொரு குறிப்பிடதக்க உற்சாகத்தையும் கொடுக்கும் விதத்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேபாளத்தில் தோன்றியிருக்கக் கூடிய வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு இருண்ட சூழ்நிலையில் ஒளிக்கீற்று போல் தோன்றியுள்ளன என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
அதே சூழ்நிலையில் நாம் வேறொரு விசயத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயகத்திற்கானப் போராட்டத்தில் தன்னை ஏழு கட்சிக் கூட்டணியில் அங்கமாக்கி கொண்டு செயல்படும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்)களைத் தவிர பிற அனைத்துக் கட்சிகளும் பெயரளவில் தங்களை எப்படி அழைத்துக் கொண்டாலும் உழைக்கும் வர்க்க அரசு ஒன்று அமைவதை எந்த சூழ்நிலையிலும் ஜீரணிக்க முடியாதவையே. அத்தகைய சூழ்நிலையில் அவை ஏதாவது ஒரு வகையில் உழைக்கும் வர்க்க அரசினை அமைக்கும் பாதையில் மாவோயிஸ்டுகள் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்; அவற்றை, அகற்றி அவற்றின் தீய நோக்கத்தை பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இடைவிடாது மக்கள் இயக்கங்களை தட்டியயழுப்ப வேண்டியகட்டாயமும்,அத்தியாவசியமும் யு.சி.பி.என்.(மாவோயிஸ்ட்) களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும்; இதையும் நாம் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.
லேபிள்கள்:
2009 மாற்றுக்கருத்து,
நவம்பர்
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
வெட்கப்பட வேண்டியது யார் ?
முதலாளித்துவ நாடளமன்றங்கள் வெறும் அரட்டை மடங்கள் என்று தோழர்.லெனின் கூறினார். வேறெந்த நாடுகளை காட்டிலும் அது இந்திய முதலாளித்துவ அரசின் நாடளமன்றங்களுக்கும் , சட்டமன்றங்களுக்கும் சாலப் பொருந்துவதாக இருக்கும். இங்கு அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது, இது தான் உண்மையான மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்திய ஆளும் வர்க்கம் அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் இங்கு ஆளும் வர்க்கம் முன் நிறுத்தும் மோசமானவர்களில் யாரவது ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் தான் மக்களுக்கு உள்ளது , ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், ஆளும் வர்க்கத்தின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் மத்திய அரசுகளும் , மாநில அரசுகளும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
கட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை: மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராக பிரகாஷ் காரத்
சி.பி.ஐ.யிலிருந்து பிரிந்தவுடன் சி.பி.ஐ.(எம்) கட்சி சர்வதேசப் பிரச்னைகளில் நிலைபாடுகள் எதையும் உடனடியாக எடுப்பதில்லை என்ற நிலைபாட்டினை எடுத்தது. அதன்மூலம் அக்கட்சி அப்போது தீவிரமடைந்து வந்த ரஷ்ய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் பின்னணியில் இவ்விரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் எந்தக் கட்சியினர் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை அறிவிக்காமல் தள்ளிப்போட விரும்பியது. இதுவே ஒரு சந்தர்ப்பவாத முடிவு. இது அப்பட்டமான திருத்தல்வாதப் பாதையில் சென்று கொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாசேதுங் மேற்கொண்ட மார்க்சிஸத்தை திருத்தல் வாதத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியை ஆதரிப்பதில் அவர்கள் காட்டிய தயக்கமே தவிர வேறெதுவுமில்லை
லேபிள்கள்:
நவம்பர் 2009,
மாற்றுக்கருத்து
புதன், 1 பிப்ரவரி, 2012
சீனாவின் தற்போதய சமூக அமைப்பு உண்மையில் ஒரு சோசலிச அமைப்பா?
சோசலிசத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போனபின் அதன் பெயரில் சீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டு விழா
சீன அரசு வாணவேடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றும் நவீனப் போர்த் தளவாட அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 60தாவது ஆண்டினை கொண்டாடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒருபுறமும் அங்கு நிலவும் மனித உரிமையை மதிக்காத போக்குகள் போன்றவை குறித்து மறுபுறமும் எழுதித் தள்ளுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல நாடுகளில் செயல்படும் திருத்தல்வாத சமூக ஜனநாயக அமைப்புகள் இப்படிப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சி அங்குநிலவும் சீன பாணியிலான சோசலிசத்தின் சாதனை என்றெல்லாம் கூறப்படுவதைக் கண்டும் காணாமல் அக்கூற்றுகளின் பாலான ஒருவகை ஒப்புதலை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.
சீன அரசு வாணவேடிக்கைகள், இராணுவ அணிவகுப்பு, தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றும் நவீனப் போர்த் தளவாட அணிவகுப்பு ஆகியவற்றின் மூலம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 60தாவது ஆண்டினை கொண்டாடிக் கொண்டுள்ளது. அதை ஒட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஊடகங்கள் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒருபுறமும் அங்கு நிலவும் மனித உரிமையை மதிக்காத போக்குகள் போன்றவை குறித்து மறுபுறமும் எழுதித் தள்ளுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல நாடுகளில் செயல்படும் திருத்தல்வாத சமூக ஜனநாயக அமைப்புகள் இப்படிப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 ஆண்டுகால ஆட்சி அங்குநிலவும் சீன பாணியிலான சோசலிசத்தின் சாதனை என்றெல்லாம் கூறப்படுவதைக் கண்டும் காணாமல் அக்கூற்றுகளின் பாலான ஒருவகை ஒப்புதலை மறைமுகமாகத் தெரிவிக்கின்றன.
லேபிள்கள்:
நவம்பர் 2009,
மாற்றுக்கருத்து
வெள்ளி, 27 ஜனவரி, 2012
முல்லை-பெரியாறு அணை பிரச்னை: கேரள மற்றும் தமிழக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வர்க்கத்தின் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்
தமிழக மற்றும் கேரள மக்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களுக்கிடையில் கடுமையான வெறுப்பையும் பூசலையும் உருவாக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் போக்குகள் முல்லை பெரியாறு அணையினை மையமாக வைத்துத் தற்போது இரண்டு மாநிலத்தையும் சேர்ந்த அரசியல் வர்க்கத்தினரால் கிளப்பிவிடப் படுகிறது.
தங்களது தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளும் இணைந்துள்ளன.
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
21, ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை நினைவு கூர்வோம்.
கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு வறுமையிலும், அறியாமையிலும் உழண்டு கொண்டிருந்த பாட்டாளி வர்க்கத்திற்கு கலங்கரை விளக்கமாக மார்க்சிய தத்துவத்தை வழங்கியவர் காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தி காட்டியவர் தோழர்.லெனின் ஆவர். இளம் வயதிலையே அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை அறிமுகம் செய்து அறிவு கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு பறி கொடுத்த போதும் மார்க்சியம் அவருக்கு வழிகாட்டியது. இதற்கிடையே வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் லெனின் .
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்: ஒரு ஆய்வு
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. அதனை எதிர்த்த போராட்டம் எந்த வகையான எதிர்ப்பும் இன்றி அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அதற்கு ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கமும் சில மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ற பெயரில் அணுமின் நிலையம் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அணுஉலையை எதிர்த்த போராட்டத்திற்கான ஆதரவு மேத்தா பட்கர், அருந்ததிராய் அது தவிர ஓய்வு பெற்ற அணு விஞ்ஞானிகள் சிலர் போன்றோரிடமிருந்து முதலில் வந்தது. அப்போதெல்லாம் அணுஉலைக்கான ஆதரவுக் குரல்கள் அந்த அணுமின் நிலையத்தைச் சேர்ந்த இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடமிருந்தே வந்து கொண்டிருந்தன. தற்போது அனைவராலும் அறியப்பட்ட விஞ்ஞானியும் நமது முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் போன்றவர்களிடமிருந்தும் அணுஉலைக்கு ஆதரவான குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
லேபிள்கள்:
15 ஜனவரி - 14 மார்ச்,
2012 மாற்றுக்கருத்து
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனுமதியின் பின்னணியும் எதிர்க்கட்சி அரசியலுக்கு அது பயன்படுத்தப்படும் விதமும்
சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 51 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒருங்குதிரண்டு அம்முடிவுக்கு எதிரான தங்களது எதிர்ப்புக் குரலை விண்ணதிர முழக்கிக் கொண்டுள்ளன. நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது.
இதற்கான எதிர்ப்புக் குரல் பல மாநில அரசாங்கங்களிடமிருந்தும் பெரிய அளவில் கிளம்பியது. காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை இடம் பெற்றிருக்கும் மம்தா பானர்ஜி கூட இதை எதிர்த்தார். தமிழக முதல்வரும் இதை அனுமதிக்கப் போவதில்லை என்று எவ்வகைத் தயக்கமுமின்றி அறிவித்தார்.
லேபிள்கள்:
15 ஜனவரி - 14 மார்ச்,
2012 மாற்றுக்கருத்து
பாப்பையாவின் பட்டிமன்றம்: ஒரு அலசல் – A. ஆனந்தன்
சமூகம் சரியானதாக இல்லாவிடில் குடும்பம் சரியானதாக இருக்க முடியாது : இதனை மறுப்பவர்கள் அவர்களையும் அறியாமல் ஆளும் வர்க்கத்தின் கருத்து உற்பத்தியாளர்களாவதைத் தவிர்க்க முடியாது
நமது ஊடகங்களில் மிக அதிகம் மக்கள் மனதில் செல்வாக்கு செலுத்துவதாக இருப்பது மின்னணு ஊடகங்கள். அதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு மிக அதிகமாக மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. காட்சி ஊடகங்களில் தற்போதைய இளைய தலைமுறை ரசிப்பது பெரும்பாலும் திரைப்படம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளே. ஊடகங்களில் வரும் செய்திகள் மற்றும் சமூகம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மிகப் பெரும்பாலும் நடுத்தர வயதினரே. அவர்களில் அலுவலகங்களில் வேலை செய்வோர் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஆவர். மத்தியதர வர்க்க அலுவலகம் செல்வோரைப் பொறுத்தவரையில் அவர்கள் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சேராதவர்களாக இருந்தால் தொலைக்காட்சிச் செய்தி ஊடகங்களின் கருத்தே அவர்களது கருத்தாக ஆகி வருகிறது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
15 ஜனவரி - 14 மார்ச்,
2012,
மாற்றுக்கருத்து
அவசர நிலையின் போது சிறை சென்ற தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் முன்னாள் முதல்வரின் கருத்துக்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் அந்திமந்தாரை என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது அந்த ஆண்டின் சிறந்த தமிழ்மொழித் திரைப்படமாக மத்திய அரசால் கருதப்பட்டு அதற்கான விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது.
அந்தப்படம் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் அவருடைய வாழ்வின் கடைசிக் காலத்தில் படும் சிரமங்கள் குறித்தது. அவர் போற்றிப் பராமரித்த மதிப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் இன்றைய சமூகத்தில் எவ்வாறு இடமில்லாமல் போய்விட்டது என்பதை விளக்கும் கதை.
மேலும் படிக்க
லேபிள்கள்:
15 ஜனவரி - 14 மார்ச்,
2012,
மாற்றுக்கருத்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்







