13 .05 .2012 அன்று நாகர்கோவில்,
தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பில்
மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும்,
இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர்.போஸ்
அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன்
அவர்களால் இயக்கவியல் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது.
இயக்கவியல் என்பதே மார்க்சியவாதிகளுக்கு
வழிகாட்டி என்றால் அது மிகை அல்ல. கடந்த வகுப்பில் நடத்தப்பட்ட (இயக்கவியல் பொருள்முதல்வாதம்
) அனைத்தையும் தொகுத்து இயக்கவியலின் சாரம்சத்தை தெளிவாக தோழர் அ.ஆனந்தன் அவர்கள்
விளக்கினார்கள் .இயக்கவியல் என்றால் என்ன? , பொருள்முதல்வாதம் என்றால் என்ன? மற்றும்
இயக்கவியலில் உள்ள மூன்று கோட்பாடுகள் பற்றியும் தெளிவாக தோழர் தொகுத்தளித்தார்.
வகுப்பில் கலந்து கொண்ட தோழர்கள் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடவேண்டும், அவர்களுக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் பொது மேடையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு ஆரோக்கியமான விவாதத்தை துவங்கவேண்டும், அதில் தவறான கருத்துகள் இருக்குமானால் அதைக் களைய முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.கம்யூனிஸ்டுகள் இயக்கவியல் பார்வையில் தற்போது மாறியுள்ள சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும்
பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "மார்க்சிய சிந்தனை மையம்"
உருவான போதே அது ஒரு பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும் இதே
போன்ற பொது வேலைதிட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்பதும் முடிவானது.
அந்ததிட்டப்படி மார்க்சிய சிந்தனை மையத்தை மதுரையிலும் ஆரம்பிக்க வேண்டும் என்று
இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக 'கருத்து
சுதந்திரம் காக்க கருத்தரங்கம்' ஒன்றும் நாகர்கோவிலில் நடத்தப்பட்ட வேண்டும்
என்றும் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக