ஞாயிறு, 27 மே, 2012

மேதின உறுதியேற்போம்


உழைக்கும் வர்க்கம் ஒருநாளில் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்த சூழ்நிலை அதனைப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. அதன் விளைவாகத் தோன்றிய போராட்டப் பேரலைகள் 8 மணி நேர வேலை நாளை உறுதி செய்தன. எதிர்ப்பேதுமின்றி உழைக்கும் வர்க்கம் அதனைச் சாதித்துவிட வில்லை. கடுமையான அடக்கு முறைகளை எதிர்கொண்டு எண்ணிறந்த தொழிலாளரின் உயிர்த் தியாகத்தின் விளைவாகவே அது சாதிக்கப்பட்டது.  அதன்மூலம் அடக்குமுறைகளால் உழைக்கும் வர்க்கத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது என்பது வரலாற்றின் படிப்பினையாகியது.

புதன், 23 மே, 2012

பாசிச ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியது கருத்துரிமை குறித்த மதுரை கருத்தரங்கம்



கருத்துரிமை காக்க கருத்தரங்கம் ஓன்று மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) சார்பில் 20 . 05 . 2012 முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது. சுமார் 100  பேர் கலந்து கொண்ட அக்கருத்தரங்கத்திற்கு மாற்றுக்கருத்து இருமாத இதழ் ஆசிரியர் திரு.த. சிவகுமார் தலைமை தாங்கினார். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த திரு.சுவாமிநாதன் , பேராசிரியர்கள் திரு.சேவுகப்பெருமாள் , திரு. க. கோவிந்தன் ஆகியோரும் CWP யின் தென் மாநிலங்களுக்கான பொதுச் செயலாளர் திரு.அ. ஆனந்தன் அவர்களும் உரையாற்றினர். அவர்கள் தங்கள் உரையில் சமீப காலங்களில் பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு கருத்து சுதந்திரத்தை பறிப்பவையாக அமைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தினர். 

வியாழன், 17 மே, 2012

கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெரிக்கும் பாசிசப்போக்குகளைக் கண்டித்து கருத்தரங்கம்


ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள். வரலாற்றில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலைநாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஒன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடாளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது; மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது; நான்கு, தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது; ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது.

செவ்வாய், 15 மே, 2012

CWP யின் மே தினப் பொதுக் கூட்டம், திருத்தங்கல்,சிவகாசி



CWP யின் மே தினப் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் திருத்தங்களில் நடைபெறுகிறது, இந்த பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறோம் . 

திங்கள், 14 மே, 2012

மதுரையிலும் உதயமாகிறது மார்க்சிய சிந்தனை மையம்: நாகர்கோவில் வகுப்பில் முடிவு


13 .05 .2012 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பில்   மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும்  இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர்.போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் இயக்கவியல் பொருள் முதல்வாதம் பற்றிய வகுப்பு நடத்தப்பெற்றது.

வெள்ளி, 11 மே, 2012

இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டுகிறது 'வழக்கு எண் 18 \9 '

உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லும்  கலை இலக்கியங்கள் மாபெரும் புரட்சிக்கே வித்திடும். தமிழில் அபூர்வமாக சில படங்கள் அப்படி வருவதுண்டு, ரங்கநாதன் தெருவில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு  வெளிச்சம் போட்டுக் காட்டியது வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு படம். அந்த படம் வந்த பிறகு ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கண்டித்து பல தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அப்படி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களே இந்த காலத்திற்கு தேவை.அதை உணர்ந்து இந்த சமூக அமைப்பை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டும் ஒரு அருமையான படைப்பை (வழக்கு எண் 18 \9 ) தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 

ஞாயிறு, 6 மே, 2012

உலகம் முழுவதும் கூடுதல் உற்சாகத்துடன் மே தின ஊர்வலங்கள்




மே 1 தொழிலாளர் தினம் வழக்கத்தை விட இந்த ஆண்டு உற்சாகத்துடன் நடைபெற கூடுதல் காரணங்கள் உண்டு கடந்த சில ஆண்டுகளாகவே முதலாளித்துவ உலகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவத்தின் சொர்க்கபுரி என்று நேற்றுவரை பீற்றிக் கொண்டு இருந்த அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பல முதலாளித்துவ நிறுவனங்களும்  , வங்கிகளும் திவாலாயின. அமெரிக்கா உலகிலையே அதிகம் கடன் வாங்கிய கடன்கார நாடாக ஆகிவிட்டது.

சனி, 5 மே, 2012

மே 1 தொழிலாளர் தினம்

ஒரு காலத்தில் 
இயந்திரங்களோடு இயந்திரங்களாய் 
இயங்கிய இயந்திரங்களின் பெயர் உங்களுக்கு 
தெரியுமா ?
அதன் பெயர் தான்  தொழிலாளர்கள்.

ஹீமோகுளோபின் கச்சாவில்
18 மணி நேரம் இயங்கிய
முதுகெலும்பு இயந்திரம் அது.



இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் - ஏங்கெல்ஸ்


இதற்கிடையில் 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவத்துடன் கூடவேயும் அதற்குப் பின்பும், புதிய ஜெர்மன் தத்துவம் உதித்தெழுந்தது. ஹெகலின் தத்துவத்தில் அது உச்சநிலையை அடைந்திருந்தது. அறிவாய்வின் (reasoning) மிக உயர்ந்த வடிவமாக இயக்கவியலை மீண்டும் எடுத்துக் கொண்டதுதான் ஜெர்மன் தத்துவத்தின் தனிச்சிறப்பு. பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாக இருந்தனர்.

வியாழன், 3 மே, 2012

இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை - மார்க்சிய படிப்பு வட்டம் , நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "மார்க்சிய சிந்தனை மையம்" என்ற அமைப்பை உருவாக்கினர் .அதில்  கீழ்வரும்  பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும்  இதே போன்ற பொது வேலைதிட்டத்தை  இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றனர்.


புதன், 2 மே, 2012

உரிமையுடன் வேண்டுகிறோம்

மாமேதை மார்க்ஸ்-ம் எங்கெல்ஸ்-ம் கம்யூனிசக் கருத்தோட்டத்தை முன் வைத்த போது அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்; வழக்குகள் பல அவர்கள் மீது தொடுக்கப்பட்டன. அப்போது வெறும் இருவராக மட்டும் இருந்த அவர்கள் கூறினர் "எங்கள் இருவரையும் கண்டு முதலாளித்துவ உலகம் அஞ்சுகிறது" என்று. அத்தகைய வலிமை மிக்கதாக அவர்கள் முன்வைத்த தத்துவம் இருந்தது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விஞ்ஞான பூர்வமாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக அது விளங்கியது. 

செவ்வாய், 1 மே, 2012

மே 1 : தொழிலாளர் தினத்தில் வர்க்க விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்


சிகாகோ தொழிலாளர்களின் போராட்ட உரிமை குரலை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது முதலாளித்துவம். ஆனாலும் உலகம் முழுவதுமான தொழிலாளர்களின் எழுச்சிக்கு அந்த போராட்டமே வித்திட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேர ஓய்வு , 8 மணி நேரம் சமுதாயப்பணி ஆகிய முழக்கங்கள் உலகம் முழுவதும் தொழிலாளர்களால் முழக்கங்கப்பட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள பல உரிமைகள் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களால் ரத்தம் சிந்தி பெறப்பட்டவையே. அப்படி பெறப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் கொடுமையை முன்பை விட அதிகமாக அனுபவிக்கும் நிலைமைக்கு முதலாளித்துவம் தள்ளியுள்ளது. 

முகப்பு

புதிய பதிவுகள்