ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சென்னை புத்தகக் கண்காட்சியில் -பகத் சிங் புத்தகம்35 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியில் 05 .01 .2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது  இது 17 .01 .2012 வரை நடைபெற உள்ளது . இந்த புத்தகக்  கண்காட்சி வேலை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நெம்புகோல் பதிப்பகத்தின் வெளியீடான தோழர் 
த.சிவகுமார் எழுதிய கேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்  கடிதங்கள் கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள் ( விலை ரூ.150 /- ), புத்தகம் 
எதிர் வெளியீடு, அலைகள், கீழைக்காற்று, உயிர்மை  ஆகிய   புத்தக 
அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தகத்திற்கு பத்து 
சதவிகித கழிவு உண்டு. இந்தியாவில் முதல் கம்யூனிஸ்டான தோழர்.பகத்சிங் 
பற்றி அவரின் எழுத்துகளிலையே படித்து புரிந்து கொள்ள இந்த புத்தகம் 
நிச்சயம்  உதவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்