திங்கள், 5 செப்டம்பர், 2011

மார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9சீனா முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டை காடாக 19  நூற்றாண்டில் இருந்தது , ஜப்பானின் ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடியது. நிலபிரப்புகளின் சுரண்டலை தட்டி கேட்க முடியாதவர்களாய் அப்படி கேட்டால் மரணம் பரிசாக கிடைக்கும் என்ற நிலையில் கோடிக்காணக்கான மக்கள்   , பசி , பட்டினி என்று  துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கி துவண்டு கொண்டு இருந்தனர். அப்போது தான் ரஷியாவில் சோஷலிச அரசு தனது இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்து கொண்டு இருந்தது. சீனா முழுவதும் முதலாளித்துவம் முழுமையாக  வளராத நிலையில் தொழிலாளர்கள் குறைந்த பகுதியினறாய் இருந்த படியினால்  , பண்ணையடிமைகளாக , குத்தகை விவசாயிகளாக , சிறு விவசாயிகளாக சிதறுண்ட கிடந்த சூழ்நிலையில் மார்க்சிய வழிகாட்டுதலில் சிவப்பு வானில் உதித்த நட்சத்தரமாய் சீனாவிற்கு விடியலாய் , வழிகாட்டியவர், வழிநடத்தியவர்  தோழர்.மாவோ.

அவரின் வழிகாட்டுதலில் பறந்து விரிந்த சீனா தேசத்தில் விவசாய கூலிகள் , விவசாயிகள் , சிறு தொழில் செய்பவர்கள், தேசிய முதலாளிகள் , தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே பாதையில் திரள வைத்தார் நெடும் பயனாமாய் நடந்து அந்நிய சக்திகளையும், சொந்த நாட்டை சுரண்டி வந்த சுரண்டல்காரர்களையும் அடித்து விரட்டியது செஞ்சீனா ராணுவம். மிகப்பெரிய தேசத்தில் தொழில்கள் வளர்க்கப்பட்டன. கூட்டுறவு பண்ணைகள் அமைக்கப்பட்டன. விஞ்ஞானம் புகுத்தப்பட்டதுகேடுகெட்ட கலாசார சீர்கேடுகள் ஒழித்துகட்டப்பட்டன. தேசிய அரசு அமைத்தாலும் அது சோசலிசத்திற்கான அனைத்து கூறுகளையும் தாங்கி செஞ்சினமாய் வளர்ந்தது நின்றது . ரஷியாவும் , சீனாவும் பல நாடுகளுக்கு வழிகாட்டிகளாக   அமைந்தன. ஸ்டாலினுக்கு பிறகு மிக சிறந்த மார்க்சிய வழிகாட்டியாய் உயர்ந்த  தோழர். மாவோ அவரின் சாதனைகள் அளப்பரியவை , கற்பனையிலும் இவ்வளவு சாதனைகளை ஒரு மனிதர் மாபெரும் தேசத்தில் செய்ய முடியுமா என்பது போல ஆச்சரியபடத்தக்கவை.

ஆனால் உண்மையிலையே  இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை .மாவோ தெரிவு செய்த பாதை மார்க்ஸிச  பாதை அது இருளிலும், மலைகளிலும், கடலிலும் சரியான திசையையே காட்டும், வழிநடத்தும் . அதுவே அவரின் சாதனைகளுக்கு எல்லாம் மூல காரணமாய் அமைந்தது. அந்த மார்க்ஸிசத்தை அவர் சரியாக புரிந்து கொண்டு, சரியாக வழிநடத்தி மக்கள் சீனத்தை மலர செய்தது போல நாமும் சரியாக புரிந்து கொண்டு, கால மாற்றத்தை கணக்கில் எடுத்து கொண்டு , வரலாற்றில் இருந்து பாடம் கற்று , குருட்டுதனங்களை விட்டொளித்து, சுயவிமர்சனத்திற்கு  உட்படுத்தி   விஞ்ஞான பூர்வ மார்க்ஸிசத்தை கைகொள்வோமானால் வரும்காலம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் சோசலிசமாக மலரும் என்பதில்  யாருக்கும்  ஐயமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்