சனி, 10 செப்டம்பர், 2011

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.

ஆனால் சாதாரண  மக்களோ இருக்கும் வீடு எப்போது இடிந்து விழும் என்று தெரியாது, சாலையில்  தாறுமாறாக பறந்து வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், ஊழல் செய்து கட்டும் பொது பாலங்கள் , பள்ளிகள் , பொது இடங்கள் போன்றவைகள் இடிந்து விழுந்து இறந்து போவதும் , சட்டவிரோதமாக இயங்கும் ரவுடிகளால் ஏற்படும் மரணங்களும், போலிஷ் லாக் அப் மரணங்களும் , சட்ட விரோத சுரங்கங்களால் ஏற்படும் மரணங்களும், சிலரின் சுயநலன்களுக்காக துண்டிவிடப்பட்ட சாதி , மத கலவரங்களும், திடிரென்று பற்றி எரியும் குடிசை மரணங்களும், சரியான மருத்துவ வசதி செய்யாததால் ஏற்படும் மரணங்களும் , தொழிற்சாலையில்   விபத்தினால் ஏற்படும் மரணங்களும், சில பெரு முதலாளிகளின் சுரண்டலுக்காக ராணுவத்தை ஏவி விட்டு மலைவாழ் மக்களை கொன்று குவிக்கும் மரணங்களும்,  இங்கு சர்வ சாதாரண மானவை. ஏனெனில் இவர்கள் அனைவரும் சாதாரண ஏழை மக்கள்.  சிலரின் சுயநலனுக்காக இவர்களின் உயிரும் பறிக்கபடுகிறது. இவர்கள் உடல் மட்டுமல்ல உயிரும் சுரண்டலுக்கு உட்பட்டதே. இவர்களின் பாதுகாப்பிற்கு இங்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

இது பத்தாதென்று பொது இடங்களான திறந்த வெளி சந்தை, கோவில் , ரயில்வே பாதை, ரயில்வே நிலையங்கள், பெரிய கட்டிடங்கள், நீதிமன்ற வளாகங்களில் யாரையோ நிர்பந்திக்க, யாரையோ பழிவாங்க திடீர் திடீர் என்று வெடிக்கும்  சக்தி வாய்ந்த குண்டுகளால் அப்பாவி மக்கள் உடல் சிதறி,  ரத்தம் சிந்தி சாகவும், பெரிய அளவில் உடல் உறுப்புகளை இழந்து வாழ் நாள் முழுவதும் துன்பத்தில் அழுந்தி சாகவும் , அதனால் பல குடும்பங்கள் தெருவுக்கு வருவதும் , ஏற்கனவே துன்பம் மிகுந்த சமூகத்தில் மேலும் துன்பத்தை சுமந்து எத்தனையோ   குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றன. இவர்கள் கொடுக்கும் பிச்சை காசுகள் அந்த கண்ணீரை எந்த விதத்திலும் துடைக்க முடியாது. இந்த பண பேய்களின் அரசியலுக்காக பலிகட ஆவது யார்? நாம் தானே ! ஏழை மக்கள் தானே!. பணம்படைத்தவர்களின் உயிர் தான் இந்த அரசாங்கத்திற்கு முக்கியம் , ஆனால் சாதாரண ஏழை மக்களின் உயிர்பாதுகாப்பிற்கு , உடமை பாதுகாப்பிற்கு இந்த ஆளும் முதலாளித்துவ அரசு எந்த விதமான பாதுகாப்பையும் செய்யாது. செய்வது போல பாவலா மட்டுமே காட்டும் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஊழல்வாதிகளுக்கும், பொறுக்கிகளுக்கும்   இசட் பிளஸ் பாதுகாப்பும்  , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டுமே  இங்கு பரிசாக கிடைக்கிறது.

3 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பர்களே,
  கீழ்கண்ட பதிவில் நான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்காமலே அடுத்த பதிவை போட்டு விட்டீர்கள். தயைகூர்ந்து என்னுடைய கேள்விக்கு மார்க்சிய கண்ணோட்டத்தில் பதிலளிப்பீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  http://ieyakkam.blogspot.com/2011/09/blog-post.html#comments

  பதிலளிநீக்கு
 2. Dear Comrade.....

  Yes, your post above is what really happening in the present senario....

  But the way that you had projected the issue seems very emotional to me... As I think you are a left orentied thinker.... The jucie that you had taken to squeez outmust not wear an emotional flesh. This is my humble suggestion

  Nimrodh

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்.
  சில நாட்களுக்கு முன்பு இந்த தளத்தில் வெளியான சில பதிவுகளுக்கு (சுட்டி 1 http://ieyakkam.blogspot.com/2011/09/blog-post.html#comments

  சுட்டி 2 http://ieyakkam.blogspot.com/2011/08/blog- post_1128.html?showComment=1315607413145#comment-c939569813167775800)
  நான் இட்டிருந்த பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதிலளிக்காததால் நான்கு நாட்களுக்கு முன்பு அது குறித்து பதிலளிக்குமாறு இந்த பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் அதற்கும் இதுவரை நீங்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை, அது தொடர்பாக இட்ட பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை. ஏன் பதிலும் அளிக்கவில்லை பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை ? என்ன பிரச்சினை என்று தெரிவிக்க முடியுமா நண்பர்களே.

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்