செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் ஹளிபுல்லா - ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்


சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறந்த நீதிபதிகளில் இப்ராஹீம் ஹலிபுல்லா முதன்மையானவர். இரண்டாவது தலைமுறை நீதிபதியான இவர் தனது சொந்த திறமை மூலமே நீதிபதியானார் என்றால் அது மிகை அல்ல. பல சிறப்பான வழக்குகளில் மிகவும் நேர்மையாகவும், அரசுக்கு எதிராக தையிரியமாகவும் தீர்ப்பு சொன்னவர். 19 ,பிப்ரவரி 2009ல் வழக்கறிஞர்களும்  , நீதிபதிகளும் , நீதிமன்றங்களும் தாக்கப்பட்ட வழக்கில் தாக்குதலுக்கு காரணமான காவல் துறை  உயரதிகாரிகளை பணி நீக்க பரிந்துரை செய்தவர். இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இப்ராஹீம் ஹளிபுல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். ஜம்முகாஷ்மிரில் ராணுவத்தின் ஆட்சி நடந்து வருகிறது. ராணுவம் அங்குள்ள மக்களை வாட்டி வதைக்கிறது. இது போன்ற நேர்மையான நீதிபதி அங்கு தலைமை நீதிபதியாக இருந்தாலாவது அந்த மக்களின் துயரங்களை நீதிமன்றங்களில் முறையிட அம்மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

பக்ரைனில் பொது வேலை நிறுத்தம் வெற்றி

ஒரு வார காலமாக மன்னராட்சிக்கு எதிராக கொந்தளிப்பில் இருந்து வரும் வளைகுடா நாடான பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதற்கு நாடு முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில் உள்ள துனீசியா, எகிப்து நாடுகளைத் தொடர்ந்து ஆட்சிமாற்றம் எனும் அலை அரேபிய வளைகுடாவின் கரையைத் தொட்டது. இதில் பாதிக்கப்பட்ட முதல் நாடு பஹ்ரைன். மன்னராட்சி நடந்து வரும் இங்கு கடந்த ஒரு வார காலமாக ஆளும் அரசை எதிர்த்து  நாடுதழுவிய மக்கள்  போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்களில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை இங்கு முழு கதவடைப்பு நடத்த ஆட்சி எதிர்ப்பாளர்களும், தொழிலாளர் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அந்நாட்டில் அதிக அளவில் மக்கள் வரவேற்புள்ளது என்று காட்டும்விதமாக கிட்டத்தட்ட எல்லா பணிகளும் முடங்கியது.   பஹ்ரைனில் ஆட்சிபுரிந்துவரும் ராஜகுடும்பத்தினர் சொகுசாக வாழவும் மக்கள் கொடும் வறுமையில் வாடவுமான ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மன்னராட்சி ஒழிய வேண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாகும் . ஆனால் எந்த  பேச்சுவார்த்தைக்கும்  இன்னும் ராஜகுடும்பம் தயாராகவில்லை.  சர்வதேச அரசியல் ரீதியாக இந்தப் பிரதேசம் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. அண்டை நாடான ஈரான் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அதனை சரிகட்ட இந்தப் பகுதியில் கப்பற்படை தளம் அமைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்க கப்பற்படையின் ஐந்தாம் பிரிவின் தலைமையிடம் பஹ்ரைனில் அமைந்துள்ளது.  அந்த வகையில் முக்கிய பிராந்தியமான பக்ரைனில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் உற்சாகமாக போராட்டதிற்கு தயாராகி வருகின்றனர். அதை உலகில் உள்ள உழைக்கும் வர்க்கம் அனைத்தும் வரவேற்க தயாராகி வருகிறது.

லிபியாவில் ரத்த ஆறு - புரட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றனர்

எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து கிளம்பியதை அடுத்து அதன் பக்கத்து நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டுவருகின்றன. லிபியாவின் சர்வாதிகாரி கடாபியின் கொடுகோன்மை ஆட்சியால் வேருப்படைந்திருந்த   மக்கள் கொதித்தெழுந்தனர்.  நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா, பெங்ஹசி ஆகிய நகரங்களை மக்கள் கைப்பற்றிவிட்டனர். இந்தப் போராட்டம் திங்கள்கிழமையன்று தலைநகர் திரிபோலிக்கும் பரவியது.அரசுக்குச் சொந்தமான அல்-ஜமாஹிரியா தொலைக்காட்சி, அல்-ஷபாபியா வானொலி நிறுவனக் கட்டடங்களை புரட்சியாளர்கள் அடித்து நொறுக்கினார். திரிபோலி தவிர, பைதா, டெர்னா, தோப்ரூக், மிஸ்ரதா போன்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.கடாபி தப்பியோடி விட்டதாக செய்தி வருகிறது ,ஆனாலும் அவரது மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி , போராடும் மக்கள் மீது ராணுவத்தையும் , காவல் துறையும் ஏவிவிட்டு கடுமையாக மக்கள் போராட்டங்களை நசுக்க கடும் முயற்சி செய்கிறான். ஆனாலும் மக்கள் எழுச்சி அடக்கமுடியாத பேரலையாக எழுந்து வந்து கொண்டே இருக்கிறது. அது கடாபியை மட்டுமல்ல மன்மோகன் சிங்கையும் அது தூக்கி எறியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

தமிழ் திரைவானில் விடாது கூவிய குயில் விடைபெற்றது


தமிழ் திரையுலகில்   1980 களில் நம் காதுகளில் நீங்காமல் ரீங்காரமிட்ட கனீர் குரலுக்கு  சொந்தமானவர் பாடகர்.மலேசிய வாசு தேவன் ஆவர். கொஞ்சமும் பிசிறில்லாமல் பாடக்கூடிய மூவரில் இவரும் ஒருவர் மற்ற இருவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சௌந்தர்ராஜன் ஆவார்கள். கொஞ்ச காலமாகவே  பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்த    இவர் திடிரென மரணம் அடைந்தது நம் அனைவருக்கும் பெரும் இழப்பே ஆகும்.தமிழ் உள்ள வரை அவர் பாடிய நல்ல பாடல்கள் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.

சனி, 19 பிப்ரவரி, 2011

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்

இன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது 
பஸ்ஸை வழிமறித்து  அதில் உள்ள பயணிகளை  இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக  அழைத்து  செல்கின்றனர்  அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும்     சென்னை  மக்கள் இந்த வேண்டாத  செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.  
மாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும்  கண்ணை  மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை  கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.

அடுத்த எகிப்து - பஹ்ரைன் நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வலுவடைந்துள்ளது



 பஹ்ரைன் நாட்டில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளனர்.  பிரதமர்  பதவி விலக வேண்டும் என்றுதான்  முதலில் மக்கள் கோரி வந்தனர் எகிப்து புரட்சிக்கு பிறகு மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.  இப்போது மன்னர் குடும்பமே கூண்டோடு அகற்றப்படும் வரை ஓயமாட்டோம் மக்கள்  அறிவித்து உள்ளனர்.  சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது ஹமாத் பின் இசா அல் கலிஃபா மன்னராக உள்ளார். அண்மையில் எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சி  வெற்றி பெற்றதை அடுத்து பல அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சிறிய தீவு நாடான பஹ்ரைனிலும் இப்போது கிளர்ச்சி வெடித்துள்ளது.  கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் புரட்சியை  போலீஸ் மூலம் அடக்க அரசு தரப்பினர் முயன்று வருகின்றனர். போலீசார் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள்  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.  போராடும் மக்களை காவல்துறை   கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தாக்கி  3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து போராடும் மக்கள்  தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக, பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் மக்களை  ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை அதிகாலை அந்த சதுக்கத்தை காவல் துறையினர்  சுற்றி வளைத்தனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்.  இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல் துரையின் இந்த அராஜக போக்கினால் அனைத்து தரப்பு மக்களிடமும் போராட்டகுரல் உயர்ந்து வருகிறது. போலீஸ் அடக்குமுறையில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.  அவர்கள் பலர் அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்தனர். மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பலர் தெரிவித்தனர்.  இதனிடையே கிளர்ச்சியை ஒடுக்க தலைநகர் மனாமாவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும்   பக்ரைன் மக்கள் அடக்கு முறைக்கு அஞ்சாமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாமும் குரல் கொடுப்போம்.




எகிப்து மக்களின் வெற்றி பேரணி - இன்னும் குறையவில்லை மக்களின் புரட்சி தாகம்

எகிப்து மக்கள் கடும் போராட்டத்தின் மூலம் முபாரக்கை ஆட்சியில் இருந்து  துக்கி எறிந்தனர். அது உலக உழைக்கும் மக்களிடம் பெரும் உவகை கொள்ள வைத்தது.

முபாரக்கை பதவியில் இருந்து இறக்கியது மட்டுமே எகிப்து மக்கள் முழு வெற்றியாக   நினைக்கவில்லை.அங்கு உண்மையான மக்களாட்சி வரவேண்டும் என்ற போர்க்குரலை புரட்சி வெற்றி பேரணியிலும் மக்கள் எழுப்ப தவறவில்லை என்பதில் இருந்து மக்கள் இன்னும் போர்க்கோலத்தை  துறந்து விடவில்லை, என்பதை அங்கு அடுத்து  ஆட்சி  அதிகாரத்திற்கு வந்து பணம் பண்ணலாம் என்று காத்திருக்கும் சுயநலமிகளுக்கு மக்கள் எச்சரிக்கையாகவே  விடுத்துள்ளனர். எகிப்து மக்களின் போராட்டம் தொடரட்டும்!  உழைக்கும் வர்க்கம் உலகெல்லாம் விழித்து எழட்டும!

ஒரு அப்பாவி குடுப்பத்தின் கோபம், சமூகம் முழுவதும் பரவட்டும் - மிஷ்கினின் யுத்தம் செய்


இன்று சாதரணமாக ஏழை ,நடுத்தர குடும்பங்களை பணக்கார வர்க்கம் உழைப்பு சுரண்டலோடு, ஏழை , நடுத்தர மக்கள் தங்கள்  உச்ச பட்ச லட்சியமாக கொண்டுள்ள ஒரு மாணமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும், நல்ல மண வாழ்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற இலட்சியங்கள் கூட இந்த பணக்கார ஓநாய்களின் பத்தாம் பசலித்தனமான மோசமான கலாச்சார கேடுகளுக்கு இரையாக்கும் கொடுஞ்செயலால் பல நடுத்தர குடும்பங்களின் ஆசைகள் , கனவுகளை குழி தோண்டி புதைத்து விட்டது. 

இந்த பணக்கார வர்க்கத்திற்கு அப்பட்டமாக அதிகார வர்க்கமான காவல் துறை ஓநாய்கள் துணைபோவது , அரசியல்வாதிகளின் உற்ற நண்பனாக, இந்த பணக்கார வர்க்கம் இருப்பதும் இவர்களின் அனைத்து தவறுகளுக்கும் ஊக்கம்  கொடுப்பதாகவே இருக்கிறது. ஒரு போலிஷ் ஸ்டேஷனில்  ஒரு சாதாரன குடிமகன் எவ்வாறு நடத்தப்படுவான் பணக்காரன்  எவ்வாறு மதிக்கபடுவான் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததேயாகும். இவ்வாறு படம் முழுவதும் சமூக அவலங்கள் பேசப்படுவதோடு இந்த வெறிநாய்களால் அந்த அமைதியான குடும்பத்தில் புயல் வீசுவதும் அதற்கு காரணமான அந்த வெறிநாய்களை அந்த குடும்பமே வேட்டையாடுவதும் மிகவும் சரியான பாதையே ஆகும். இது அந்த குடும்பத்திற்கு மட்டுமே உள்ள பிரச்னை அல்ல. இந்த சமூகம் முழுவதும் இது போல நம்மை போன்ற உழைக்கும் வர்க்கம் பலியாவதும் , இதற்கு காரணமானவர்களை  தங்கள் ஒற்றுமையின்மையால் தப்பவிடுவதும் அன்றாட நடைமுறை ஆகும். இது போன்ற படங்கள் அதை பார்ப்பவர்களுக்கு சமூக விரோதிகளை அடையாளங்கண்டு அவர்களின் அராஜகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க உழைக்கும் வர்க்கங்களை துண்டுமானால் அது மிஷ்கின் போன்ற நல்ல சினிமா இயக்குனர்களுக்கு கிடைத்த வெற்றியேயாகும்.

புதன், 16 பிப்ரவரி, 2011

கருப்பு தினம் - பிப்ரவரி 19 ,


2009  ல் விழுந்த அடியின் காயம்  வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம் ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால்  நாம்  மனிதர்கள்  என்று சொல்வதற்கு  கூட  தகுதி ஆற்றவர்களாகி விடுவோம். காவல் துறையினரால்  கட்டவிழ்த்து விடப்பட்ட    தாக்குதல்   எதேச்சையான விஷயம் அல்ல. அது  ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம் அரசு என்றால் காவல் துறையும் ,ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிங்கர்களும் காவல் துறையின் கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதி துறைக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும்  வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும் வழக்கறிங்கர்கள்  தங்கள் சமுதாய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க  முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும் பொறுமை காத்து இருப்போமானால்  நம்மை வரலாறு சுரணையற்றவர்கலாகவே பதிவு செய்யும்.
குண்டந்தடிக்கு  

நம் மீது தாக்குதல் தொடுத்த ஒவ்வொரு காவல்துறையினருக்கும் தண்டனை வாங்கி தருவோம்.

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது தொடர வேண்டும் 

தூங்கி கிடக்கும் வழக்கறிஞர்கள்  சங்கங்களை தட்டி எழுப்புவோம்

விழித்தெழுவோம், போராடுவோம் வெற்றியடைவோம்

Bridge the gap existing between legality and legitimacy by giving rise to social movement
 Lawyers Forum for Social Movement (LFSM), TAMIL NADU
சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு

தொடர்பிற்கு :
உயர் நீதிமன்றம், மதுரை
 த.சிவகுமார்  - 94430 80634
கே.கே.சாமி -  99438 13105
உயர் நீதிமன்றம் ,சென்னனை
கு.கதிரேசன் - 98434 64246

மன்மோகன் சிங் தலைமையிலான ஊழல் அரசு பதவி விலக வேண்டும்

ஊழல் , மஹா ஊழல், மெகா  ஊழல் என்று இந்தியாவை ஆளும் மன்மோகன் அரசு எங்கெங்கு காணினும் ஊழல் மயமாக காட்சியளிக்கிறது. இந்திய   மக்கள்   விலைவாசி  உயர்வெனும்  கொடிய  நோயால் கடுமையாக பாதிக்கபட்டிருக்கும் போது அரசியல்வாதிகள், ஊழல் பணத்தில்  உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இப்போது தான் இந்த அரசியல் வாதிகளின் பின்நின்று அவர்களை ஊழலில்  தள்ளி அதன் மூலம் கொள்ளை லாபம் ஈட்டி வந்த அம்பானி, பாவ்லா  , டாட்டகளின்  நிஜ முகங்கள் வெளியே  தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த கொள்ளை கூட்டத்தின் தலைவனான மன்மோகன் சிங்க்கு  இனிமேலும் பிரதமர் பதவில் இருக்க எந்த தார்மிக தகுதியும் இல்லை அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவரின் வேஷம் வெளுத்து போய் விட்டது. அவர் பதவி விலக மக்கள் போராட முன் வர வேண்டும். அடக்கு முறைகள்  நிறைந்த  எகிப்தில்  நடைபெற்ற ஜனநாயக போராட்டங்கள்  நமக்கு  முன்னோடியாக   இருக்கிறது. உழைக்கும்  மக்களே ஓன்று திரளுங்கள்.  

துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி தீ ஈரானில் நிலைகொண்டுள்ளது

அப்பிரிக்க நாடுகளில்  ஆரம்பித்த மக்கள் புரட்சி தீயானது துனிசியாவில் தொடக்கி இப்போது எகிப்தில் மையம் கொண்டிருந்தது . அங்கு முபாரக்கை வீழத்தி விட்டு இப்போது அங்கிருந்து  நகர்ந்து  ஈரானில்  பேரலையாக தாக்கி கொண்டுள்ளது உலகில் முதலாளித்துவத்திற்கு மரண  அடி  கொடுக்க உழைக்கும் வர்க்கம் தயாராகி கொண்டுள்ளது.  ஈரான் மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

சனி, 12 பிப்ரவரி, 2011

கெய்ரோவிலிருந்து வெளியேறினார் முபாரக்- எகிப்து மக்களின் கடும் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி

எகிப்து மக்களின் 18 நாள்களின் முற்றுகை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக முபாரக் பதவி இரக்கப்பட்டிருக்கிறார் , இது எகிப்து மக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் .நேபாள் , துனிசியாவை தொடர்ந்து எகிப்து மக்களும் புரட்சி பாதையில் நடை போடுகிறார்கள் . அந்த மக்களின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம். இந்த நூற்றாண்டு உலக மக்களின் விடுதலை ஆண்டாக மலரட்டும்.  இயக்கம் எகிப்து மக்களுக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது

வியாழன், 10 பிப்ரவரி, 2011

இளைஞர்கள் கைகளில் எகிப்து புரட்சி - சரியான திசையில் செல்லும் போராட்டம்


எகிப்து மக்களின்   பேரெளுச்சியை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சில சுயநல எதிர் கட்சிகள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போட்டு முபாரக்கோடு கள்ளக்கூட்டு போட்டு ஆதாயம் அடைய அவர்கள் முயற்சி செய்ததை எகிப்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சரியாகவே கணித்து அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிரார்கள் முபாரக் ராஜினாமா  செய்யும் வரை அந்த மக்கள் போராட்டம் ஓயாது. அதற்கு பிறகு வரும் ஆட்சியாளர்களையும் எகிப்து மக்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புவோம் .  எகிப்து மக்களின் போராட்டம் வாழ்க! எகிப்து புரட்சி ஓங்குக! உழைக்கும் மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! 

புதன், 9 பிப்ரவரி, 2011

மன்மோகன் அரசின் அடுத்த ஊழல் -எஸ்-பாண் ட்( இஸ்ரோ ஸ்பெக்ட்ரம்)

தொலைத் தொடர்பு துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் இந்தியாவை பிடித்து உலுக்கி கொண்டுருக்கும் போதே இன்னும் ஒரு மெகா ஊழல் அம்பலத்திற்கு வந்துள்ளது  . 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் நடந்து இருப்பது அம்பலமாகி  உள் ளது. தொலை தொடர்பு துறை போலவே இஸ்ரோவிலும் அலைவரிசை ஒதுக்கீடுகள் நடக்கின்றன. இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் உள்ள அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கின்றன. வானொலி , தொலைகாட்சி , 3-ஜி, செல்பேசி  சேவை போன்றவற்றுக்கு இந்த அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோ ஆன்டிரிக்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி உள்ளது.

2005-ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆன்டி ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. ரூ.1000 கோடி மட்டுமே இதற்கு கட்டணமாக பெறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன் மூலம் ஆன்டிரிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. இந்த ஒப்பந்தம் விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவாஸ் நிறுவனத்துக்கு அலை வரிசை ஒதுக்கீடு முறையாக செய்யவில்லை. இதனால் இஸ்ரோவுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங் களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது.இதற்காக ரூ.12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ.1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு 15 மெகாஹெட்ஸ் அலை வரிசைகளை 3-ஜி செல்போன் சேவைக்காக ஏலம் மூலம் விற்றது. அதில் மத்திய அரசுக்கு ரூ.67 ஆயிரத்து 719 கோடி வருமானம் கிடைத்தது.

15 மெகாஹெட்ஸ் அலை வரிசையில் ரூ.67 ஆயிரம் கோடி கிடைத்து இருக்கும் போது 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக்கு பெரிய அளவில் வருமானம் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் பொது ஏலம் மூலம் விடாமல் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் மூலம் நேரடியாக அலைவரிசைகளை ஒதுக்கியதால் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய தணிக்கை துறை கூறி உள்ளது.பல நாடுகளில் இது போன்ற அலைவரிசைகளை பொது ஏலம் மூலமே விற் கின்றனர். ஆனால் இஸ்ரோ மட்டும் பொது ஏலத்துக்கு விடாமல் இழப்பை ஏற் படுத்தி இருப்பதாக தணிக்கை துறை கூறி உள்ளது. இஸ்ரோ நிறுவனம் மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த துறை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உள்ளது. அப்படி இருந்தும் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்பது எல்லோரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

 தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.ஆளும் மன்மோகன் அரசு ஊழலில் பல சிகரங்களை தொட்ட அரசு என்ற சாதனையை இதன் மூலம் பெற்றுள்ளது. இனியும் மக்கள் அமைதியாக இருந்தார்களேயானால் கண்டிப்பாக நமக்கு தீர்வு கிடைக்காது இதை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.

யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் ரூ. 7105 கோடி இழப்பு: சிபிஐ


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யுனிடெக், ஸ்வான் நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ரூ. 7105 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.சிபிஐ பதிவு செய்துள்ள 5 பக்கங்கள் கொண்ட முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சில தனியார் நிறுவனங்களும் கூட்டாக கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு தவறான வழியில் லாபம் அடைந்துள்ளனர் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.22 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான அலைக்கற்றை உரிமத்தை ரூ. 1658 கோடிக்கு யுனிடெக் பெற்றதாகவும், பின்னர் அதில் 60 சதவீதப் பங்கை, தனது சேவையை தொடங்குவதற்கு முன்னதாகவே நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனத்துக்கு ரூ. 6100 கோடி ரூபாய்க்கு விற்று லாபமடைந்ததாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.இதையடுத்து, சிபிஐ தனது கவனத்தை தற்போது யுனிடெக் நிறுவன உயர் அதிகாரிகள் மீது திருப்பியுள்ளது. ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வா ஏற்கெனவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு

புதிய பதிவுகள்