டேவிட் ஹார்வியின் “மார்க்ஸின்
மூலதனத்திற்கு வழிகாட்டி“ தமிழில் இலக்குவன் நூலைப் படிக்கிற போக்கில் எதிர்கொண்ட
விபரங்களைத்தான் என்னுடைய கட்டுரையில் பதித்துள்ளேன்.
நூலின் அறிமுகத்திலேயே டேவிட்
ஹார்வி மார்க்ஸுடன் முரண்படுவதை பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கிறார். மூலதனத்தின்
முதல் அத்தியாயத்தை சரக்கு குறித்த கோட்பாட்டுடன் ஏன் மார்க்ஸ் துவங்கினார்? என்ற கேள்வியை எழுப்புவதுடன் அதைத் தேர்வு செய்வதற்கான காரணத்தையும் விளக்க
முயற்சிக்கவில்லை என்று மார்க்ஸை குறை
கூறுகிறார். ஆக மூலதன நூலின் அடிப்படை ஆய்வையே சந்தேகத்துள்ளாக்குகிறார். அதேபோல் மூலதன நூல் கம்யூனிசப் புரட்சியை எவ்வாறு
உருவாக்குவது என்பது பற்றி பேசவில்லை என்றும்,
கம்யூனிச சமுதாயம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று விளக்கவில்லை என்றும் கூறுவதன் மூலம் வாசகர்களை மூலதன நூலை வாசிப்பதற்கான
முயற்சியை முறியடிக்க விரும்புகிறார்
என்று கருத இடமளிக்கிறது.